மனிதர்கள கொலை பண்றது மட்டும் கொலையல்ல! உணர்ச்சியை கொல்வதும் கொலையே! – சீதக்காதி ட்ரெய்லர்

Killing a person's feeling is also a murder - Seethakathi Trailer

விஜய் சேதுபதியின் இருபத்தி ஐந்தாவது படமான சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் தற்போது
வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது.

சன் டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கி குறும்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை
காட்டி துணைக் கதாபாத்திரங்களில் ஒரு ஓரத்தில் நின்று ஒன்றிரண்டு வசனங்கள் பேசிவிட்டு
யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு நடிகராக இருந்தவர் மிக குறுகிய காலத்தில் இருபத்தி ஐந்து படங்கள் நடித்து முடித்துவிட்டார்.

நாடக நடிகரான அய்யா ஆதிமூலம் ஆரம்ப கால கட்டத்தில் திரைத்துறையில் என்னென்ன
கஷ்டங்கள் சந்திக்க நேருகிறது, ஒரு சீனியர் நாடக கலைஞரை இன்றைய நடிகர் நடிகைகள்
எப்படி நடத்துகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு.

படத்தில் இயக்குனர் பாரதி ராஜா, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் ராம் போன்ற தமிழ்
சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்கள் திரையில் வந்து செல்கிறார்கள். அதிலும்
இயக்குனர் ராம் பேசிய மனிதர்கள கொலை பண்றது மட்டும் கொலையல்ல! உணர்ச்சியை
கொல்வதும் கொலையே! என்ற வசனம் மிக முக்கியமானது. இயக்குனர் மகேந்திரன் சில
நிமிடங்களே வந்தாலும் சட்டென்று கவனத்தை ஈர்க்கிறார்.

இருபத்தி ஐந்து படங்கள் நடித்து நல்ல பெயரை சம்பாதித்து இருந்தாலும் இது வரை ஒரு தேசிய
விருது கூட பெறாதது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்து உள்ளது. தென் மேற்குப்
பருவக்காற்று, ஜிகிர்தண்டா, தர்ம துரை என்று அவர் நடித்த படங்கள் தேசிய விருது
பெற்றிருந்தாலும் சிறந்த நடிகர் என்று அவருக்கு என்று தனியாக விருது கிடைக்கவில்லை.
ஆரஞ்சு மிட்டாய் போன்ற தேசிய விருதுக்கு என்றே மெனக்கெட்டு எடுத்த படம் கூட
ஓடவில்லை.

இந்நிலையில் சீதக்காதி படத்தில் அவருடைய நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையில்
தொடர்ந்து எட்டு நிமிடங்கள் நடிக்கும் சீன் ஒன்று இடம் பெற்றிருக்கிறது என்கிறார்கள். இதற்கு
முன் குணா படத்தில், சந்தியா ராகம் படத்தில், குரங்கு பொம்மை படத்தில் இது போன்ற நீண்ட
நெடிய காட்சி இடம் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்தப் படமும் வெற்றிப் படமாகப் பேசக்
கூடிய படமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகுமில்லை.

Related Articles

மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகத... வள்ளியூர் அருகே விஜய நாராயணம் சிற்றாற்று பகுதியில் மணல் திருடப் படுவதாக தகவல் கிடைத்து சோதனைக்கு சென்ற காவலர் ஜெகதீசனை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால்...
புர்ஜ் கலிபா பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங... கடந்த சில தினங்களுக்கு முன்பு யதர்ச்சையாக குறும்படம் ஒன்றை பார்க்க முடிந்தது. அந்த குறும்படத்தில் மீம் கிரியேட்டர் ஒருவர் இண்டர்வியூக்கு செல்வார். அவர...
Vikatan Awards – Zee Awards –... Zee Cine Awards Tamil 2020Best actor - Dhanush (Asuran) Favourite actor - Vijay (Bigil) Sridevi inspiring woman of indian cinema award - N...
பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...

Be the first to comment on "மனிதர்கள கொலை பண்றது மட்டும் கொலையல்ல! உணர்ச்சியை கொல்வதும் கொலையே! – சீதக்காதி ட்ரெய்லர்"

Leave a comment

Your email address will not be published.


*