கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் -1 – ஹேராம் ஒரு பார்வை!

A view on Heyram movie

ஹேராம்

நடிகர்கள்: கமல் & ஷாருக்கான் (அகழ்வாராய்ச்சியாளர்கள்), ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, அப்பாஸ்(டாக்டர்),…

இயக்கம்: கமல்

இசை: இளையராஜா

கதை: இந்து முஸ்லிம் பிரிவினைவாத பிரச்சினையால்  (1946ல் )ஒரு தனிமனிதனின் வாழ்க்கை திசை திரும்புதல். முஸ்லிம் நபர்களால் தன்னுடைய காதலி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட அதற்குக் காரணம் காந்திதான் என்று காந்தியை சுட்டுத்தள்ள சென்று சுடாமல் திரும்பி வருதல். பீரியட் படம் என்பதால் செந்நிற கலர் டோன் ( வாகை சூடவா, மதராசபட்டினம், ஹே ராம் )

இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் படங்களாக மணி சாரின் பாம்பே, சேரன் சாரின் பொக்கிஷம் படங்கள் உள்ளது. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உள்ளதாகக் காட்சிகள் விஜயின் சிவகாசி படத்தில் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் ஜெய்யின் திருமணம் எனும் நிக்காஹ், நாச்சியார் படத்தில் உள்ளது.

கமலுக்கு காந்தியின் மீது அதிகப் பற்று உள்ளது போல. ஹேராம் மட்டுமில்லாமல் உன்னைப் போல் ஒருவனில் ” காந்திக்கு ரெண்டு கையிலுமே எழுதற பழக்கம் இருக்கு… ” என்ற வசனம் பேசி இருக்கிறார். அதே போல, காதலா காதலா படத்தில் ” தேடிப்பாக்குறேன் காந்தியத்தான் காணோம் ” என்ற வரியை உபயோகித்திருப்பார்.

ஹேராம் என்று டைட்டில் வரும்போது ரகுபதிராகவ் ராஜாராம் என்று ஒலிப்பதே வித்தியாசமாக உள்ளது. வயது முதிர்ந்த பிராமிண் சாகேத் ராமுக்கு, அவருடைய பேரனின் நண்பனான முஸ்லிம் டாக்டர் முன்னா வைத்தியம் பார்க்கிறார். ” இவருக்கு  இருட்டு தான் பிடிக்கும்… ” ” மகாத்மா காந்திக்கு தூங்கும்போது கூட லைட்டு எரியனும்… அவருக்கு இருட்டே பிடிக்காது.., ” ” ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு சொல்ல மாட்டாரு… நான் இருந்த ஊர்ல ஒரு ராஜான்னு தான் சொல்வாரு… ” ” எது நிஜம்… எது இவரா சேர்த்துட்டதுனு கண்டே பிடிக்க முடியாது… ” என்ற வசனங்கள் செம. ” இவர் மகாத்மா அல்லாம இருக்கலாம்… ஆனா சராசரி மனிதர்… அது போதாது… ” ” போதாது ” போன்ற வசனங்கள் செம. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் பற்றி கூறியிருக்கிறார்கள். இந்தக் கதை எழுத்தாளராக இருக்கும் பேரனின் தனது தாத்தாவின் கதையை வைத்து பயோகிராபி, பிக்சன், த்ரில்லர் என்று அடுத்த நாவலாக உருவாக இருக்கிறது என்ற பார்வையில் விரிகிறது. இதேபோல் அடுத்த சந்ததியினர் தங்களது முன்னோர்களின் கதையை விவரிக்கும் விதத்தில் திரைக்கதைகள், மதராசபட்டினம்,  பொக்கிஷம், காவலன் மற்றும் பல படங்களில் வந்து உள்ளது.

கமல் படங்களைத் தவிர ( அவ்வை சண்முகியில் இந்து முஸ்லிம் நட்பு, பாபநாசம் படத்தில் இந்து முஸ்லிம் நட்பு )இந்து முஸ்லிம் நண்பன் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் அவ்வளவாகக் காட்டப்படவில்லை. கவண் படத்தில் விக்ராந்த் கதாபாத்திரம், அப்பா படத்தில் கையேந்திபவன் வரும் அப்பா கவனிக்கத் தக்கவை. அகழ்வாராய்ச்சி பற்றிய காட்சிகள் இடம்பெறும் படங்கள் தமிழில் குறைவு தான் ( ஹே ராம், ஆயிரத்தில் ஒருவன், சிட்டிசன், அனேகன் படங்களில் சில காட்சிகள் வந்து உள்ளது ). மனித நாகரிகத்தை எடுத்துரைத்த சமூகம் கடவுள் பெயரால் எப்படி விளங்காமல் போயிருக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்கள். ஆர்க்கியாலஜிஸ்ட்கள் பிரிவதற்கு முன் ஒன்றாகக் குழுமி கொண்டாடும் விருந்து நிகழ்ச்சியில் வரும் ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் பாடல் இந்து முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்துவது செம. அதிலும் ” சாமி ரெண்டாயிட்டா பூமி ரெண்டாகுமே… ஸ்நேகம் உண்டாயிட்டா லோகம் ஒன்னாகுமே.,. ” என்ற வரி செம.   1946ஆம் ஆண்டுக்கான கலை அமைப்பு செம. நண்பனின் மனைவிக்கு போன் பேசி கலாய்ப்பது பஞ்ச தந்திரம் படத்தை நினைவூட்டுகிறது. நண்பர்கள் உச் கொட்டிக்கொண்டே கைதட்டிக்கொண்டே கவலைப் படுவது செம. ரம்மை குதிர சாப்டறது என்ற வசனம், காலித்துப்பாக்கி காலணாவுக்குப் பிரயோஜனம் இல்ல… இதவிட சமையக் கரண்டியே தேவலாம்… ” ” புல்லட்ஸ் எங்க… ” ” வெரி க்ளவர் ” போன்ற வசனங்கள் நுணுக்கம். நாயகி லெட்டரைப் படித்துச் சொல்வது போல் இந்தப் படத்திலும் குணா படத்திலும் காட்சிகள் வந்து உள்ளது. கணவன் மனைவி சேர்ந்தோ அல்லது அவர்களில் ஒருவரின் நியாபகமாகவோ ஒரே டியூனை ப்யோனோவில் வாசித்தல் தாண்டவம் படத்தில் வந்து உள்ளது. கணவனுக்கு மனைவி தனது மெட்டியை பரிசாக அனுவிக்கிறாள். ( இதேபோல் தாமிரபரணி படத்திலும் கோலிசோடா2 படத்தில் கொலுசை பரிசளிப்பது போலவும் காட்சிகள் உள்ளது ). ஆகஸ்ட் 16 என்ற ஒரே நாளில் சாகேத் ராமின் மனைவிக்கு பலாத்கார கொடுமை நேருகிறது. மனைவி கதறும் சத்தம் கணவன் காதில் விழுகிறது. ஒரு காலில் ஷூ இருக்க இன்னொரு காலில் டம்பளர் துண்டு ஏறி ரத்தம் வடிய வடிய நடக்கிறார்.  கற்பழிக்கப்பட்ட மனைவியின் ரத்தம் ஒழுகும் பிறப்புறுப்பைப் பார்த்து கணவன் கதறுகிறான்(பருத்திவீரன் கிளைமேக்ஸ்). ” அல்லா தான் என்னைய காப்பாற்ற உன்னை அனுப்பியிருக்கிறார் ” என்ற வசனத்தைத் தொடர்ந்து கண்பார்வை இழந்த சிறுமி வரும் காட்சி செம. பூணூலைப் பார்த்து கமலுடன் நட்பு பாராட்டும் இந்து தீவிரவாதி. இரவில் மதவெறி பிடித்தவர்களின் வேட்டை முடிந்ததும் பகலில் குவிந்து கிடக்கும் பிணங்களின் காட்சி அதிலும் அசால்ட்டாக ஒருவரை தூக்கில் தொங்கவிட்டிருக்கும் காட்சியும் கலவரத்தால் மிரண்டுபோன யானை தன் பாகனை மிதித்துவிட குடல்பிதுங்கி இறந்துக்கிடக்கும் காட்சியும் மனதை பதற வைக்கிறது. ” கோவத்துல கொலைசெய்யும்போது வந்த தைரியம் தற்கொலைக்கு வரமாட்டிங்குது சார்… நீங்களாம் எதாவது காரணம் சொல்லிக்கிறேள் கடவுள் கொள்கைனு… நான் என்ன சாக்கு சொல்ல முடியும்… என் உயிர்ல பாதி ஆத்மாவ கடந்துபோயிட்ட மாதிரி இருக்கு…ஐம் நாட் அ மேன் லைக் திஸ் சார்…” “ஆரம்பத்து இருந்து கிலாபத் மொமண்ட் அது அதுன்னு அந்த பச்ச செடிக்கு தண்ணி ஊத்தி தண்ணி ஊத்தி மரமா ஆக்கிட்டாரு… ” ” தண்டனை யாரு யாருக்கு கொடுக்கறது… சட்டம் லீவுல போயிருக்கு நாம தான் இருக்கோம்… ” ” குத்தம் செஞ்சாத்தான் தண்டனை… கடமைய செஞ்சா தண்டனை கிடையாது… ” “கொலை குத்தம்னா யுத்தமும் குத்தம் ” என்ற வசனம் கவனிக்கத்தக்கது. கமலும் இந்து தீவிரவாதியும் பேருந்தில் பயணிக்கும்போது உயிரிழந்த மாட்டின் வயிற்றுக்குள் ஒரு நாய்க்குட்டி ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு குலைக்கும் காட்சி அல்டிமேட். வீட்டைவிட்டு காலி செய்யும்போது பொருளை எடுத்து வைக்கும் வேலையாட்கள் சாகேத் ராம் மிகவும் விரும்பும் பியோனாவை கவனக்குறைவாகப் போட்டு உடைக்கிறார்கள். வாலி நடித்திருக்கும் ஒரே படம் என்று நினைக்கிறேன். பெருமாள் என்றதும் நல்லா இருடாப்பா என்று தூங்கிக்கொண்டே வாழ்த்திவிட்டு கடவுளை வணங்கும் காட்சி செம. ஒரு காரியத்துக்காக கிளம்பும்போதுசாமி ஊர்வலம், கோவில் யானையை பார்த்தல் நல்ல சகுனம் என்பது நுணுக்கம். பாகனை இழந்த யானை அவனுடைய குச்சியைத் தூக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஊர்சுற்றுவது அல்டிமேட். மதம் கொண்ட என்ற பாடல் ஒலிக்கும்போது யானையைக் காட்டுவது நுணுக்கம். “மனசு உட்டுட்டா மகாக்கஷ்டம் ” என்ற வசனம் செம. ” என்னடா பன்ற… ” ” ஹாலாசனா… ” ” யோகா ஸ்பெசலிஸ்ட் ” என்ற வசனம் கலாய். கணவனை இழந்த பாட்டி ஒன்று, மைதிலியை அழைத்து, ” பார்வையும் குரலும் கீழ தான் இருக்கணும்… ” சொல்வாது அக்ரஹாரத்து பெண்ணை பெண்களே எப்படி அடிமைப்படுத்தி வைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. பெண் பார்க்கப் போவதை எதோ இண்டர்வியூ போல் நடத்தும் சமூகத்தை எடுத்துரைக்கும் காட்சி செம. வழக்கம்போல இந்தப்படத்திலும் வையாபுரி, ஒய்ஜி மகேந்திரன், டெல்லி கணேஷ், நாசர் போன்றவர்கள் வருகிறார்கள். Redcliff பற்றிய துணுக்கு கவனிக்கத்தக்கது.”இந்த வயசான காலத்துல எதுக்கு காந்தி மாதிரி பட்டினாலாம்… ” ” நானும் நீங்களும் பட்டினி கிடந்தா மாமி மாதிரி மயக்கம் தான்… மகாத்மா பட்டினி கிடந்தா சுதந்திரம் வரும்… ” போன்ற வசனங்கள் நறுக். முதல் இரவு அறையில் கணவன் புத்தகம் படிக்கும் காட்சி பல படங்களில் வந்து உள்ளது. கத்தும் சத்தம் கேட்டு பழைய நினைவுக்குள் மூழ்கும் காட்சியும் கிராபிக்ஸ் காட்சிகளும் ( ஆளவந்தான் படத்திலும் இதுபோல காட்சிகள் உள்ளது ) செம. கல்கத்தாவுக்குச் சென்றதும் அந்த வீட்டில் மனிதர்கள் வாழ்ந்ததை விஷூவலாக நினைத்துப் பார்க்கும் காட்சி நானும் ரௌடிதான் படத்திலும், கபாலி படத்திலும் (பாட்ஷா படத்தில் நெகட்டிவாக, காலா படத்தில் அனிமேசனாக) வந்து உள்ளது. ” உங்களுக்கும் சாகேத்ராமுக்கும் என்ன உறவு… ” ” சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்குற உறவு… ” ” ஜனங்களுக்கு நியாபக சக்தியே கிடையாது… உனக்கும் எனக்கும் மட்டும் தான் அந்த வியாதி… ” “இந்த மந்தை புத்தி இல்லாத இந்த ஆட்டு மந்தை… ஆட்டுப்பால குடிக்குற இந்த தாத்தா பின்னால போய்க்கிட்டு தாத்தா பக்ரீத்த கொண்டாடப் போயிட்டு இருக்காருன்னு தெரியாது… இந்த மரமண்டைக்கு… ” வசனம் செம. கமல் பேண்ட் அணிந்துகொண்டு இருக்கும் மனைவி அவருடைய ரூமுக்குள் தெரியாமல் நுழைந்துவிட்டு சாரி கேட்கிறார் ( இது போல் விஸ்வரூபம் படத்திலும், நிமிர் போன்ற பல படங்களிலும் வந்து உள்ளது. ஹீரோ துணிமாற்றும்போது அல்லது குளிக்கும்போது ஹீரோயின் தெரியாமல் உள்நுழைவது – காதலில் விழுந்தேன், வில்லு, வின்னர்… ). ( ஹீரோயின் துணிமாற்றும்போது ஹீரோ தெரியாமல் உள்நுழைவது போல் அல்லது குளிப்பதை பார்ப்பது போல் – அண்ணாமலை, லாரன்ஸின் பாண்டி, குத்து என்று பலபடங்களில் காட்சிகள் உள்ளது. ). கணவனின் முன்னாள் மனைவி வரைந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடியவள் பிறகு தான் வரைந்த ஆண்டாள் ஓவியத்தை எடுத்துவந்து தன்னை அட்லீஸ்ட் ஆண்டாளாக ஏற்றுக்கொள்ள கெஞ்சும் காட்சி செம. ” கையும் களவுமா பிடிச்சுட்டேன்… இல்லல்ல வாயும் சிரிப்புமா பிடிச்சுட்டேன்…  ” என்ற வசனம் நுணுக்கம். “நாம கிளம்புறோம்… ” என்று சொன்னதும் உற்சாகத்தில் மனைவி ஒரு குதி குதிக்கிறாள். இதேபோல் தான் நினைத்தது நடந்துவிட்டது என்றதும் ஹீரோயின் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் ராஜாராணி, வாகை சூடவா, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் வந்து உள்ளது. “somethings are better done under cover” ” மகாத்மா எதையும் மூடி மறைக்குறது தப்புனு சொல்றாரே… ” ” மூடி மறைச்சாலும் உன் ப்ளவுஸ் நல்லா இருக்கு” ” அவரு சொன்னது பேச்சையும் செயலையும் பத்தி… ” ” அந்தப் பெரியவர சுத்தி மூனு விதமான குரங்குகள் இருக்கு… அதுல ஒன்னு காதப் பொத்துக்கிட்டு மகாத்மா சொல்றத தவிர வேற எதையும் கேட்க மாட்டிங்குறது… இன்னொன்னு மகாத்மாவுக்கு எதிர்வாதம் பேசமாட்டேன்னு வாயப்பொத்திண்டு… மூனாவது உலக நடப்ப பாக்காம கண்ண மூடிண்டு காந்தியோட கற்பனை லோகத்துல இருக்கு… ” ” நான் சைவம் இல்ல ஆனா வெஜிடேரியன்… சைவம் அல்ல வைஷ்ணவம் ” ” மிருகங்கள சுடுறதுக்கு எப்படித்தான் மனசு வருதோ… ” “சாப்டறதுக்கு மனசு வந்துட்டா சுடறதுக்கும் மனசு வந்துடும் இல்லையா… ” “இதுல சந்தோசம் இருக்கு… மனசனுங்க சந்தோசத்துக்கு… ” ” அப்ப மிருகங்களுக்கு சந்தோசம் வேணும்னு தோனுறப்ப மனுசங்கள கொல்றது நியாயம்ல… ” ” மிருகங்களுக்கு வேட்டையாடனும்னு தோன்றதுக்கு முன்னாடி துப்பாக்கி கண்டுபிடிக்க தோனுனுமே…” ” ஒரு ஓநாய் சாப்டறதுக்காக ஒரு குழந்தைய தூக்கிட்டுப் போச்சுனா அத நியாயம்பேலா… ” ” ஓநாயா இருந்து பார்த்தா தான் அந்த நியாயம் புரியும்… ” என்ற வசனங்கள் நுணுக்கம். ரயில்வே ஜங்சனில் தனது பழைய குண்டு நண்பன் லால்வானியை சந்திக்கும் காட்சி நெகிழ்ச்சி. சொந்தபந்தம், கடை, மனைவி, மகள் என்று எதுவுமில்லாத லால்வானி, ” போனது போனதுதான் அழக்கூடாது ” என்று கூறும் வசனம் செம. ( அபியும் நானும் படத்தில் மகனை இழந்த சிங் உற்சாகமாக வாழ்ந்து வரும் காட்சி உள்ளது.)

இந்துக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் மகாத்மா நிச்சயம் சாக வேண்டும் என்று வசனம் கவனிக்கப்பட வேண்டியவை. அதுபோல் இந்து தீவிரவாதம் உள்ள இடத்தில் ஹிட்லர் படம் ஒட்டி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. காந்தி கள்ளிச்செடியை வளர்ப்பது, பாகிஸ்தான் கொடிபின்னால் இருப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சி செம. அதேபோல் காந்தியைக் கொள்ள கட்டளை இடுபவனை தனது பெங்காலி காதலியாகக் காணும் காட்சி செம. பொல்லாத மதனபானம் பாய்ஞ்சிடுச்சே இனி சும்மா இருப்பானா காமதேவன் என்ற பாடல் ஒலிக்க கமல் தனது மனைவியுடன் காமம் கொள்கிறார். ( இதுபோல் பாடல் ஒலிக்க தம்பதியினர் உறவாடும் காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது. )

இழுத்துட்டு இருக்கும் உயிரை பட்டென்று போட்டுத்தள்ளுவது 7ம் அறிவு, நான் கடவுள், தசாவதாரம் என்று பல படங்களில் வந்துள்ளது. ஒரு குதிரையை சுட்டுத்தள்ள முற்படும்போது மற்ற குதிரைகள் மிரளாமல் இருக்க அவைகளின் கண்கள் கட்டப்படுகிறது. அதேபோல கிணற்றுக்குள் விழந்த மாட்டைத் தூக்கும்போது மிரளாமல் இருக்க கண்ணைக் கட்டுவது போன்ற காட்சி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் உள்ளது. கணவன் தில்லாக இருக்க மனைவி கமுக்கமாக இருக்கிறாள். இது போன்ற கமுக்கமான கதாபாத்திரம் தேவர் மகன் ரேவதியையும், சிவாஜி ஸ்ரேயாவையும், ஒரு கிடாயின் கருணை மனு பிரதிஸ்டாவையும் நினைவூட்டுகிறது. உங்களோட வேல வேட்டையாடுறது அவ்வளவு தானே… புலியோட தர்மம் வேட்டையாடுறது என்ற வசனம் செம( ஆரண்யகாண்டம் படத்தில் இதுபோல் ஒரு தர்மம் பற்றிய வசனம் வருகிறது. கணவன் ஐ லவ் யூ சொல்வதற்காக மனைவி ஏங்குகிறாள். ( இது போல தனுசின் தங்கமகன், காலா படத்தில் காட்சிகள் வந்துள்ளது. ) ஒருவரையொருவர் முழுதாகத் தெரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு கணவன் மனைவி இருவரும் காதலிக்கத் தொடங்குவது தாண்டவம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் வந்துள்ளது.

முன்னாள் மனைவி தந்த மெட்டியை கடைசிவரை கைவிரலில் மோதிரமாகப் போட்டிருக்கிறார் சாகேத் ராம். (இதேபோல் ராஜாராணி ஜெய், தாமிரபரணி பிரபு கதாபாத்திரம் உள்ளது. ) சொந்த தம்பி மேல் பாசமில்லாத சாருஹாசனை பற்றி பேரன் பேசும் வசனம் குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 16 போல் டிசம்பர் 6ம் உள்ளது பல வருடங்கள் கழித்தும்கூட. ” மதமும் அரசியலும் சேரவேக் கூடாது… செக்ஸும் வயசலன்சும் மாதிரி இது… டேன்ஜரஸ் கலவை… ” ” பட் கமர்சியல் கலவை… சிட்டிலருந்து கிராமம் வரைக்கும் புரியுமே… ” என்ற வசனம் நுணுக்கமானவை. உயிருக்குப் போராடும் நபரை வண்டியில் வைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு செல்ல முயல, வழியில் மதக்கலவரம் நடக்கிறது. ( இதேபோல் காட்சி கமலின் சட்டம் படத்தில் உள்ளது. சிகாவின் எதிர்நீச்சலில் சற்று வேறுவிதமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ) ” உன் பேரென்ன… முன்னாவர்… உன் பேரென்ன… சாகேத் ராம்… ” என்ற வசனம் இடம்பெறும் இடம் செம. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கமலை சாக்கடைக் குழிக்குள் பத்திரப்படுத்தும் காட்சி செம. ( இதேபோல் குழிக்குள் பதுங்கிக் கொள்ளும் காட்சிகள் பல படங்களில் வந்துள்ளது. குருவி படத்திற்குள் பெரிய குழாய்க்குள் குழந்தைகளை அடைத்து வைப்பதுபோல் காட்சி இடம்பெற்றிருக்கிறது.) நிகழ்காலத்தை Black & whiteல் காட்டிவிட்டு கடந்தகாலத்தை கலரில் காட்டும் நுட்பம் சேரனின் தவமாய் தவமிருந்து சர்ஜூனின் லட்சுமி குறும்படத்தில் படத்தில் வந்துள்ளது. மணல்புயலை நன்றாகக் காட்டியிருக்கும் படங்கள் வாகை சூடவா, மற்றொன்று ஹே ராம். ” பிரியமா தான் பேசுறார்… ஆனா கொஞ்சமா பேசுறாரு… ” ” எல்லோரும் எதே ஒன்னு ஆயே தான் ஆகணும்… ” என்ற வசனம் செம. ” ஹே ராம், காதலா காதலா… ” போன்ற படங்களில் சின்ன வயசுலயே அம்மாவை இழந்த அம்மா சென்டிமெண்ட் உள்ளது. தெனாலி படத்தில் இளைஞனாக இருக்கும்போது அவர் அம்மா இறந்திருப்பார். வசுந்துரா மாமி இறந்துவிட்டார் என்றதும் கமல் தரும் ரியாக்சன் செம. வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கியவரின்/ பிடிக்காதவரின் உதவியை நாட வேண்டிய சூழல். ( லீ படத்தில் துப்பாக்கிக்காக, பொல்லாதவன் படத்தில் பைக்குக்காக, குரங்குபொம்மை படத்தில் அப்பாவுக்காக, மெட்ராஸ் படத்தில் பதுங்கி ஒழிய , அயன் படத்தில் சிட்டி என்று எதையாவது தொலைத்துவிட்டு அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களின் சிக்கலான சூழல் பல படங்களில் உள்ளது. ) மாமா வேலை பார்க்கும் கோவர்தன் தன்னை கோ ஆர்டினேட்டர் என்று கூறுவது நகைப்புக்குரியது.

முஸ்லீம்களின் தாக்குதலிலிருந்து ராமை முஸ்லிம் நண்பன் காப்பாற்றுகிறான். இந்துக்களின் தாக்குதலிலிருந்து ஷாருக்கை ராம் காப்பாற்றுகிறார். இது போல இந்து முஸ்லிம் நட்பு பாராட்டும் படங்கள் மிகக் குறைவு. ” நீயுமாடா ராம்… ” ” ஜின்னாவோட மகளே இது என் நாடுன்னு சொல்லிட்டு இங்கயே தங்கிட்டாங்க… நான் காந்தியோட மகன்… ” என்று ஷாருக்கான் சொல்லும் வசனங்கள் செம. ” 700 வருசங்களுக்கு முன்னாடி கைபர் கணவாய் வழியா வந்த விதேசிங்க… ” என்று முஸ்லிம்களை ராம் சொல்ல, ” உங்க ராமர்கூடத்தான் கைபர் வழியா வந்ததா சொல்றாங்க… ” என்று இந்துக்களை ஷாருக்கான் சொல்லும் இடமும் செம. ” நான் ரத்தத்துல புல் ஸ்டாப் வைக்கத் தான் வந்தேன்… ” என்று கமல் சொல்வது நறுக். ” பரத்தா அம்ஜத்தானு அம்மணமாக்கி பாத்தா தெரியும்… ” என்று டெல்லி கணேஷ் கூறுவது இந்துக்களின் வெறியை அப்பட்டமாக்குகிறது. முஸ்லிம் என்று சொன்னதுதான் தாமதம் ஷாருக்கானின் மண்டையில் சுத்திஅடி விழுகிறது. பிரசவ வலியில் துடிக்கும் ஷாருக்கின் மனைவியின் முனகல் கமலுக்கு பெங்காலி காதலியின் கதறலாக கேட்கிறது. ” நான் ராம் தம்பி தான்… ஆனா பரத் இல்ல… ” ” he is fighting for us…  ” ” I think we are late ” ” ram may allah give you a long life ” ram is my brother ” ” இதற்கு முன்னால பைரங்கற மிருகத்த நான் பாத்ததே இல்ல… ” ” he saved my life ” என்ற வசனங்கள் இடம்பெறும் காட்சிகள் அல்டிமேட். கமல் காந்தி பின்னாடி நின்றுகொண்டிருக்கும்போது ” domt shoot me from behind ” என்று காந்தி சொல்வது செம. காந்தியை வழிமறித்து இந்துமக்கள் நிற்க, ” if they have to vent their anger, it is better they vent it on me. Rather than on some muslim brothers. Tell them to wait. ” என்று காந்தி கூறும் வசனம் தான் படத்தின் திருப்புமுனையே. ” இந்து முஸ்லிம் தகராறு தாத்தா…,” என்று பேரன் சொல்ல, ” இன்னுமா ” என்று கமல் கேட்கும் காட்சி இன்றைக்கும் பொருந்தும். ” saket ram… Its packup time ” என்ற காட்சி செம. ஷாருக்கைத் தொடர்ந்து மனதை நெகிழ வைத்த முஸ்லிம் நபராக இப்ரஹிம் இருக்கிறார். காந்தியை சுட்டுக்கொள்ள எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கியால் காந்தியை சுட்டுக்கொன்றவரை சுட ஏங்குதலும், காந்தியை சுட துப்பாக்கி வைத்திருந்த பெட்டியில் காந்தியின் காலணிகளை கண்ணாடியை வைத்து பாதுகாத்து வருவதெல்லாம் அல்டிமேட். மொத்தம் மூன்றரை மணிநேர படம். இதுபோல மூனு மணிநேரத்துக்கும் அதிகமான படமாக( தவமாய் தவமிருந்து,… ) பல படங்கள் வந்துள்ளது. ராம் இருந்த அறையில் சுவர்மீது காந்திபடம் வரைந்திருக்கிறது. காந்தியால் வெளிச்சம் பிறந்தது என்பதை உணர்த்தும் வகையில் பேரன் இருட்டு அறையின் ஜன்னலை திறந்துவிடுவான்.

Related Articles

பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம... ஏதாவது ஒரு விலங்கினை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் நற்பண்பாக இருக்கிறது. அந்த வகையில் மனிதர்கள் நாய்களை பூனைகளை ...
அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி ... " அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா... " துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் ...
ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை... எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதும் அவருடைய வாசகர் வட்டம் எப்படிபட்டது என்பதும் தீவிர புத்தக வாசிப்பாளர்களுக்...
நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...

Be the first to comment on "கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் -1 – ஹேராம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*