கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் -2 – பஞ்ச தந்திரம் ஒரு பார்வை!

A view on Panchatanthiram movie
  1. பஞ்ச தந்திரம்

இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்

கதை: கமல்

வசனம்: கிரேசி மோகன்

இசை: தேவா

கதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமானபிறகு முன்னாள் சிநேகிதி மேகியை சந்திக்கிறான். எதிர்பாராத செயல்கள் நடக்க அதை பொய் மேல் பொய் சொல்லி சமாளிக்கிறார்.

சிம்ரன் தனது மகளுக்கு கதை சொல்வது போல் பிளாக் டைட்டில் கார்டில் கதை அறிமுகமாகத் தொடங்குகிறது. (இதேபோல் காட்சி நான் ஈ படத்திலும் உள்ளது. ) கமலின் கதாபாத்திரம் பெயர் ராம். ராம், மைதிலி போன்ற பெயர்கள் மீது அதீத பற்றுபோல. ஹேராம் படத்திலும் இந்தப் பெயர்களை பயன்படுத்தி இருப்பார். கனடாவில் பைலட் வேலை செய்து வருகிறார் கமல். பைலட்களின் வாழ்க்கையைப் பற்றி தமிழில் படங்கள் மிகக் குறைவு தான். கனடாவில் பிளேபாயாக சுற்றி வருகிறார் கமல். ஓவியங்களில் (போட்டோ ஆல்பம் விரிக்க விரிக்க) தொடங்கி பிளாஸ்பேக் விரிகிறது. ( இது போல காட்சிகள் தமிழில் குறைவு தான். அனிமேசனாக தொடங்குகிறது அல்லது ஓவியத்தால் விவரிக்கும் பிளாஸ்பேக் கோலிசோடா2வில் உள்ளது. ) கமல் பல படங்களில் அனாதையாக நடித்திருக்கிறார்( தெனாலி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் ). பிளைட் ஹைஜேக் பற்றிய தமிழ்ப்படங்கள் குறைவு தான். ( பயணம் மட்டுமே தமிழில் உள்ள படம். ) கமல் படத்தில் பெரும்பாலும் நாயகன் நாயகி அறிமுகம் மிகச் சாதாரணமாக இருக்கும். அதுபோலத்தான் சிம்ரன் அறிமுகக் காட்சியும் இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமார் முதல் இருபது நிமிடங்களை களவாட அதற்குப் பிறகு மீதி ஐந்து நண்பர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். ஹெட்போனில் எதிர்முனையில் கமல் பேசுவதை தீவிரவாதிகள் கண்டுபிடிக்கின்றனர். (இதுபோல் காட்சி தனுஷின் மரியான் படத்தில் உள்ளது). ராமின் திருமணத்தில் அவருடைய ஐங்குறுந்தாடி நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். திருமணத்திற்கு வந்துவிட்டு ஹேப்பி பர்த்டே என்று சொல்கிறார்கள். நண்பனை காப்பாற்ற  உம்பக் உம்பக் ஸ்டெப் போடுகிறார்கள். இந்த ஸ்டெப் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் பப்பப்பப்பரே பாட்டிலும் வருகிறது. ” கிஸ்ஸா பொது இடத்துலயா… ” ” ச்சி கன்னத்துல… ” வசனம் செம நக்கல். கமலிடம் கிஸ் கேட்டு விரட்டும் பெண் இந்தியன் படத்தில் ஏ ஜோக் கேட்டுத் திரியும் பெண்ணை நியாபகப் படுத்துகிறார். கன்னத்தில் முத்தமிடப் போக அது உதட்டில் பட ” நைஸ் மசாலா… ” என்று அந்தப் பெண் சொல்வது செம. அடிக்கடி ஆவென்று கத்துகிறார் சிம்ரன். (இதுபோலவே கலகலப்பு படத்தில் அஞ்சலி கத்துவார்). மனைவி வந்ததும் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது தொனியை மாத்தி மாத்திப் பேசுறதெல்லாம் பல படங்களில் வந்து உள்ளது. மயக்க மாத்திரை விழுங்கிவிட்டு ராமை படுத்தும் நிர்மலா கதாபாத்திரம், மயங்கி விழுந்துவிட்டு உறங்கத் தொடங்குகிறார். நாயகன் படாதபாடு படுகிறார் ( இதேபோல் நாயகி போதையிலோ மயங்கி விழுந்தோ நாயகனை படுத்தும் காட்சிகள் யாரடி நீ மோகினி படத்திலும், காதலும் கடந்து போகும் படத்திலும் வந்து உள்ளது ). friendship comedy படம் தமிழில் குறைவு தான். படம் முழுக்க நாயகன் நண்பர்களுடன் சுற்றித்திரிவது போன்ற படங்கள் கப்பல், பிரெண்ட்ஸ், நண்பன், பாய்ஸ், சென்னை 28 பாகம் 1 & 2 போன்றவை தான். நண்பனுக்கு மிளகாப்பொடி கையுடன் ஆறுதல் சொல்வது, ஐஸ் ஆல் சரி செய்வது எல்லாம் கிச்கிச் காமெடிகள். தண்ணி அடித்துவிட்டு பக்கத்து வீட்டு பெட்ரூமில் படுப்பதெல்லாம் செம காமெடி. ( இது போல தண்ணி அடித்துவிட்டு பக்கத்து வீட்டு கதவை தட்டுவதுபோல் ராஜாராணி படத்தில், சூரி காமெடியில் வந்துள்ளது ).  மரகதவள்ளி எனும் மேகி குளித்துக்கொண்டிருக்க, ” எங்க இருக்க… ” ” குளிச்சிட்டு இருக்கேன்… ” ” எந்த பாத்ரூம்ல… ச்சீ எந்த ஊர்ல ” வசனமெல்லாம் செம. மனைவியை இழந்து மனக்கஷ்டத்தில் இருப்பவனுக்கு ஒரு செட்டப் ரெடி பண்ணுகிறார்கள். ( இது அப்படியே (திருமணம் ஆகாததுக்கு முன் )பாய்ஸ் படத்திலும் சென்னை 28 பாகம் 2 படத்தின் சொப்பனசுந்தரி பார்ட்டில் வந்துள்ளது. ) பெங்களூருக்குச் செல்லும் நண்பர்கள் எல்லாம் அரைக்கால் டவுசர் போட்டுக்கிட்டு கிளம்புகிறார்கள். ( இன்றைய யூத்களின் பார்ட்டிகளுக்கு இந்தப் படம் தான் முன்னோடி ). படத்தில் மணிவண்ணன், ரமேஷ் கிருஷ்ணாவும் என்று இரண்டு கதாபாத்திரங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதேபோல டெல்லி கணேசும் ரமேஷ் கிருஷ்ணாவும் தெனாலி படத்தில் பின்பற்றி வருகிறார்கள். ராம் எது சொன்னாலும் அதை முழுதாகப் புரிந்துகொள்ளாத நபர்களாக நண்பர்கள் செம ஆக்டிங். இதேபோல பிரெண்ட்ஸ் படத்தில் ஆணியே புடுங்கவேணாம் காமெடி வந்துள்ளது. ” போலீஸ்ட்ட மாட்டுனாலும் பரவால என் பொண்டாட்டிக்கிட்ட மாட்டிட்டா அவ்வளவு தான்… ” ” சுத்த பிராமணர சவத்த தூக்க வைக்கிறயேடா… ” ” உங்கள வச்சுக்கிட்டு கொலகூட பண்ணமுடியாதுடா… ” ” தாடிக்கார குறும்பி” என்ற வசனங்கள் செம. கொலையை செய்துவிட்ட பிறகு ஸ்ரீமன் உடல்நடுக்கம் தெரியக்கூடாது என்பதற்காக ஸ்விம்மிங் புல்லில் படுத்துக் கிடப்பது செம காமெடி. ” என்ன தான் என் புருசனுக்கு வழுக்கையா இருந்தாலும் பரவாலன்னு சகிச்சிட்டு வாழல.., எவ்வளவு பெரிய தியாகம்” என்று கோவை சரளா சொன்ன பிறகு சிம்ரன் அம்மா சமாதானம் செய்ய அப்போது விஜய்குமார் மண்டையை தடவுவது செம காமெடி. “சீதை நீ சொன்னால் ராமன் நான் தீக்குளிப்பேன்…” என்ற பாடல்வரி இடம்பெறும் காதல் பிரியாமல் சோகப்பாடல் செம.

வெள்ளரிக்காயை கண்ணில் வைத்துக்கொண்டு கண்ணு தெரியாது என்பது எங்க வுட்டேன், தவுடால வுட்ட என்பது என்ற பியூட்டி பார்லர் சீன் நறுக்.

“கிரானைட் கல்லு பெரிசு சின்ன லாபம்… வைரம் கல்லு சிறிசு பெரிய லாபம்… ” என்ற வசனம் செம. இதயத்தில் ஓட்டையுடன் இருக்கும் ஜெயராமின் குண்டுப்பையன் எந்நேரமும் தின்றுகொண்டே இருக்கிறான். ( மொழி படத்தில் இதேபோல எந்நேரமும் தின்றுகொண்டிருக்கும் குண்டுப்பையன் வருகிறான் ). உகாதி விழாவில் விசிலால் பேசிக்கொள்வது போல் காட்சிகள் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வந்துள்ளது. ” பிரிட்ஜுல இருந்து கீழ விழுந்துருக்குற அதிர்ச்சில தான உயிரோட வந்துருக்குற… ” என்று யூகி சொன்னதும் ” போடா முட்டாள் ” என்று ரம்யா சொல்வது செம காமெடி. ” அறிவுகெட்டவனே ” என்று யூகியை அழைக்க ஜெயராம் எஸ் சொல்வது செம. ” gossip ” கேட்குறதுல பொம்பளங்களுக்கு எவ்வளவு ஆர்வம் பாரு என்ற வசனம் செம. ரம்யா சொடக்குப் போட அதைப் போலவே கமல் செய்கிறார். ( இதைப் போலவே காதலா காதலா படத்தில் எம்எஸ்வியிடம் மௌலி செய்துகாட்டுவார் ). மணிவண்ணன் வந்த பிறகு குண்டுப்பையன் அவன் கேங்கில் சேர்ந்துக்கொள்கிறான். ” போலீஸ்ங்கறதுக்கு என்ன அடையாளம் ” இந்தப் பாரு தொப்ப… இது போதாதா… ” ” பொண்டாட்டியா இருந்தாலும் பரவால கீப்ப அநியாயமா கொன்னுட்டான் ” என்ற வசனங்கள் செம. கிரேஸி மோகனின் வழக்கமான படம்போல ஒரு கேங்க் ஓட இன்னொரு கேங்க் துரத்த ஒருகட்டத்தில் பொய்கள் எல்லாம் களைந்து கலகலப்புடன் முடிகிறது. அவ்வை சண்முகி கிளைமேக்ஸ் போலவே இந்தப்படத்திலும்  சேஸிங், புரிந்துகொள்ளாமல் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் மனைவி, கிளைமேக்ஸில் போலீஸ் வந்து ஹேண்ட்ஸ்அப் என சொல்வது என்று காட்சிகள் உள்ளது.

Related Articles

குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்கள... கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்த...
டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக... தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
அன்பை பகிர்வோம் ! – மீம் கிரியேட்ட... சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவைப் பற்றி தி இந்து நடுப்பக்கத்தில் கட்டுரை எழுதி இருந்தார் நடிகர் சூர்ய...
நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...

Be the first to comment on "கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் -2 – பஞ்ச தந்திரம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*