தனுசின் “அசுரன்” படம் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்!

10 Interesting information about Asuran movie
  1. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்படும் படம். வெற்றிமாறன் நாவலை தழுவி எடுக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் லாக்கப் நாவலை தழுவி ” விசாரணை ” படம் எடுத்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறனும் தனுசும் இணையும் 4வது படம். தனுஷ் நடிக்காமல் வெறும் தயாரிப்பாளராக இணைந்து காக்காமுட்டை, விசாரணை, கொடி படங்களை செய்துள்ளார்கள். அவற்றையும் சேர்த்தால் தனுஷ் வெற்றிமாறன் இணையும் ஏழாவது படம் இது.
  2. கடைசியாக வெற்றிமாறன் தயாரிப்பில் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவான கொடி படத்தில் அண்ணன் ( அரசியல்வாதியாக ) , தம்பி ( காலேஜ் ப்ரொபசராக ) என்று இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ். தற்போது இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடிக்கிறார்.
  3. மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் நடிக்கும் முதல் படம். இதற்கு முன் தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும் அதை தவிர்த்தவர் இப்போது வெற்றிமாறனுக்காக தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டார். மனைவியாக அம்மாவாக நடிக்கிறார்.
  4. அம்மா அப்பா மகன் என்று இது ஒரு பேமிலி ட்ராமா படம். பொல்லாதவன், வடசென்னை என்று கேங்ஸ்டர் படங்களையே இயக்கிக் கொண்டிருந்த வெற்றிமாறன் முதன்முறையாக பேமிலி ட்ராமா படத்தை எடுக்கிறார்.
  5. சாதிய அமைப்பு, பொருளாதார ஏற்றத் தாழ்வு, தண்டனை முறைகளின் நியாயமற்ற தன்மைகளைப் பேசும் படமாகவும் இருக்கும். வெற்றிமாறனின் வழக்கமான படங்களைப் போல இந்தப் படத்திலும் வன்முறைக் காட்சிகள் உள்ளன.
  6. 60 களின் தொடக்கம் 80களின் நடுவில் என்று இரண்டு காலகட்டங்களில் நகர்கிறது கதை. இதில் 18 வயது மற்றும் 45 வயது நபராக நடித்துள்ளார் தனுஷ்.
  7. மஞ்சு வாரியரின் அண்ணனாக வெயில், குசேலன், ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்த நடிகர் பசுபதி நடித்துள்ளார். இளம் வயது தனுசுக்கு தாய் மாமனாக காட்பாதராக நடித்துள்ளார். வெற்றிமாறனும் பசுபதியும் தனுசும் பசுபதியும் இணையும் முதல் படம் இது.
  8. சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் முதன்முறையாக நடிக்கிறார். அதுவும் போலீஸ் வேடத்தில்.
  9. இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இணையும் முதல் படம். நடிகர் தனுசும் தாணுவும் இணையும் இரண்டாவது படம் இது. முதல் படம் விஐபி 2.
  10. வெற்றிமாறன் தனுஷ் ஜிவி பிரகாஷ் குமார் மூவரும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் தனுசுக்கும் ஜீவிக்கும் இடையே சின்ன மனஸ்தாபம் இருந்தது. இப்போது அதை மறந்து மீண்டும் இணைந்துள்ளார்கள்.

Related Articles

பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம... மத்திய பிரதேசத்தில் சிவாஜிராங் சிங் சௌஹானின் அமைச்சரவை 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்கு வைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வ...
பதினாறு வயதினிலே படத்தின் சாதனை எப்போது ... ஆனந்த விகடனின் சினிமா விமர்சனமும் மதிப்பெண்களும் சினிமா வட்டாரத்தில் புத்தக வாசிப்பு வட்டாரத்தில் மிக முக்கியமானவை. இயக்குனர் பாலாவின் சேது படத்தின் ர...
ஐஎஸஐஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்ட 39... 2014 ஆம் ஆண்டு இராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் இராணுவ தளபதிக்கும், மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங்கு...
மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுத... உலக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போராளிகள் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அதே போல காந்தி, நேரு, அண்ணா, அப்துல்கலாம் என்று பலர் கடிதம் எழுதி உள்ள...

Be the first to comment on "தனுசின் “அசுரன்” படம் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*