தனுசின் “அசுரன்” படம் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்!

10 Interesting information about Asuran movie
  1. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்படும் படம். வெற்றிமாறன் நாவலை தழுவி எடுக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் லாக்கப் நாவலை தழுவி ” விசாரணை ” படம் எடுத்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறனும் தனுசும் இணையும் 4வது படம். தனுஷ் நடிக்காமல் வெறும் தயாரிப்பாளராக இணைந்து காக்காமுட்டை, விசாரணை, கொடி படங்களை செய்துள்ளார்கள். அவற்றையும் சேர்த்தால் தனுஷ் வெற்றிமாறன் இணையும் ஏழாவது படம் இது.
  2. கடைசியாக வெற்றிமாறன் தயாரிப்பில் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவான கொடி படத்தில் அண்ணன் ( அரசியல்வாதியாக ) , தம்பி ( காலேஜ் ப்ரொபசராக ) என்று இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ். தற்போது இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடிக்கிறார்.
  3. மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் நடிக்கும் முதல் படம். இதற்கு முன் தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும் அதை தவிர்த்தவர் இப்போது வெற்றிமாறனுக்காக தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டார். மனைவியாக அம்மாவாக நடிக்கிறார்.
  4. அம்மா அப்பா மகன் என்று இது ஒரு பேமிலி ட்ராமா படம். பொல்லாதவன், வடசென்னை என்று கேங்ஸ்டர் படங்களையே இயக்கிக் கொண்டிருந்த வெற்றிமாறன் முதன்முறையாக பேமிலி ட்ராமா படத்தை எடுக்கிறார்.
  5. சாதிய அமைப்பு, பொருளாதார ஏற்றத் தாழ்வு, தண்டனை முறைகளின் நியாயமற்ற தன்மைகளைப் பேசும் படமாகவும் இருக்கும். வெற்றிமாறனின் வழக்கமான படங்களைப் போல இந்தப் படத்திலும் வன்முறைக் காட்சிகள் உள்ளன.
  6. 60 களின் தொடக்கம் 80களின் நடுவில் என்று இரண்டு காலகட்டங்களில் நகர்கிறது கதை. இதில் 18 வயது மற்றும் 45 வயது நபராக நடித்துள்ளார் தனுஷ்.
  7. மஞ்சு வாரியரின் அண்ணனாக வெயில், குசேலன், ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்த நடிகர் பசுபதி நடித்துள்ளார். இளம் வயது தனுசுக்கு தாய் மாமனாக காட்பாதராக நடித்துள்ளார். வெற்றிமாறனும் பசுபதியும் தனுசும் பசுபதியும் இணையும் முதல் படம் இது.
  8. சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் முதன்முறையாக நடிக்கிறார். அதுவும் போலீஸ் வேடத்தில்.
  9. இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இணையும் முதல் படம். நடிகர் தனுசும் தாணுவும் இணையும் இரண்டாவது படம் இது. முதல் படம் விஐபி 2.
  10. வெற்றிமாறன் தனுஷ் ஜிவி பிரகாஷ் குமார் மூவரும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் தனுசுக்கும் ஜீவிக்கும் இடையே சின்ன மனஸ்தாபம் இருந்தது. இப்போது அதை மறந்து மீண்டும் இணைந்துள்ளார்கள்.

Related Articles

இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்... மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது விஜய்கஞ்ச் மண்டி. இப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ரஞ்சித் மற்ற...
ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்... எண்பதுகளின் இறுதியில் வந்த நிறையத் தமிழ் திரைப்படங்கள் ரயிலை மையமாக வைத்து வெளிவந்தன. அப்போது ரயில் என்பது ஒரு ஆச்சரியம். புதிய நட்புகள் உருவாகும் இடம...
கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!... 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் ப...

Be the first to comment on "தனுசின் “அசுரன்” படம் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*