மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!

Sayings of Maxim Gorky
 1. ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை.
 2. ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவிடும்.
 3. கடவுளால் எல்லாவற்றையும் பார்க்க முடியுமனால் இன்னும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்.
 4. எலிகளின் மீது பூனை சத்தம் போடத்தான் செய்யும்.
 5. மனிதனின் ஆசைக்கு அளவு இல்லை. அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை.
 6. நட்பு என்பது காளானைப் போல் காட்டிலே வளர்வதல்ல. நட்பு இதயத்தில் தான் வளர்கிறது.
 7. நீ செய்யும் காரியத்துக்கு நீயே பொறுப்பாளியாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.
 8. மக்களிடம் வலிவும் ஊக்கமும் மிகுதியாக இருந்தால் தான் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
 9. உண்மை ஒரு சக்தி. அதைக் கண்டறியத் தான் வேண்டும்.
 10. வாழ்க்கை அமைப்பில் உள்ள குறைபாடுகளினால் தான் மக்கள் குற்றவாளியாகிறார்கள்.
 11. உதிர்ந்து போன சருகு ஒன்றும் அதன் விருப்பபடி காற்றினால் அடித்துச் செல்லப்படுவதில்லை.
 12. நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால் காட்டில் வெறும் இறகுகள் தான் மிஞ்சும் பறவைகள் மிஞ்சாது.
 13. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் தீமையால் பாதிக்கப்படுகிறோம். ஆனால் நன்மையோ எதிர்பாராத நேரங்களில் தெரியாத இடங்களிலிருந்து அரிதாகத் தான் நம்மை வந்து அடைகிறது.
 14. நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத் தான் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 15. நாம் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள். அகில உலகத் தொழிலாளர்களின் வெல்லற்கரிய சகோதரத்துவம் என்னும் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்.
 16. மனித உடலை பிணித்திருக்கும் விலங்குகளையும் அறிவை அடிமைப்படுத்தி இருக்கும் தளைகளையும் தகர்த்து எறிபவர்களே வணங்கத்தக்க மாமனிதர்கள்.
 17. ஆத்மாவை இழந்துவிட்டு வாழ்வது மரணத்தைவிட மேம்பட்டது என்று எவன் சொல்லமுடியும்.
 18. வேலை என்பது ஓர் உணவு என்று கருதி அதனை ஓர் உவப்போடு முழுமையாகச் செய்து முடிப்பவனே சிறந்த வேலைக்காரன்.
 19. நம்ம வேலைக்காரன் அவனது எஜமானனுக்கே சமமானவன். ஏனெனில் தொழிலில் பாதி வெற்றி அவனால்தான்.
 20. சாவதற்கு முன்னால் நாம் ஒருமுறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்ல வேண்டும்.
 21. சினம் என்பது கனலிலிருந்து தான் பிறக்கிறது. நெஞ்சில் கனல் உள்ள மனிதன்தான் சினத்தையும் உணர முடியும்.
 22. பூமியை நாம் காயப்படுத்தினால் அது நம் எல்லோரையும் தன் குருதியால் மூழ்கடிக்கும். பொசுக்கிவிடும்.
 23. வாழத் தெரியாதவர்கள் படுத்து உறங்கி இருப்பார்கள். வாழ்வில் இன்பம் காண்பவர்களே பாடுபடுகிறார்கள்.
 24. நிழலும் தராமல் பழமும் கொடுக்காமல் இருக்கும் மரத்தினால் யாருக்கு என்ன பயன்?
 25. மனித சிந்தனையும் மனித உழைப்பும் சாதித்து வெற்றி கண்ட சகல பொருள்களையும் நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
 26. மனிதன் வாழ்கிறான். அவனைச் சுற்றிலும் எதுவும் மாறுவதில்லை என்றால் அது மிகவும் கடினமான துன்பகரமான வாழ்க்கை.
 27. தன்னுடைய சொந்த சக்தியை பயன்படுத்தி ஒருவன் ஒரு பொருளை செய்வதற்குத் தான் உழைப்பு என்று பெயர்.
 28. பிறரை அடிக்கடி சிறிய காரணங்களுக்காக திட்டுவது முட்டாள்தனத்தின் முதிர்ச்சி ஆகும்.

Related Articles

டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்ப... செவ்வாய்க்கிழமை நடந்த பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸுக்கர்பேர்க், டேட்டிங் செய்பவர்களுக்கான பிரத்யேக ...
இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெ... மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்...
உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்ட... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்...
ஆர் ஜே பாலாஜி பற்றிய 10 தகவல்கள்!... இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். இவருடைய பெற்றோர்கள் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள். பிறப்பு ஜூன் 20, 1985. உடன் பிறந்த சகோதரி(தங்கை) ஒருவர் இருக்கி...

Be the first to comment on "மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*