காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதிர்பார்த்தேன்! – ரஜினிகாந்த்தின் தில்லான பதில்!

கர்நாடாகாவில் காலாவுக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது. (இன்னும் சில வெளிநாடுகளில் காலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக பரப்பப்படுகிறது.) வலைதளங்களில்  இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த்திடம் கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று பதில் அளித்தார். எதிர்ப்புகள் பற்றியும் கேள்வி எழுப்பினர். அதற்கு, ” காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகளை எதிர்பார்த்தேன்ங்க… ரொம்ப கமியா இருக்கு… ” என்று தனக்கே உரிய கெத்தான தொனியில் பதில் அளித்தார்.

தடைகளும் எதிர்ப்புகளும் காலாவுக்கு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு விற்பனையும் படுஜோராக இருக்கிறது. சமீபத்தில் நடிகர் விஷால் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் இருநூற்று இருபது தியேட்டர்களைத் தாண்டாது என்று கூறி இருந்தார். ஆனால் அவருடைய இரும்புத்திரை படமே அந்த விதியை மீறிவிட்டது. இந்நிலையில் காலா படம் தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

 

டிக்கெட் கிடைக்காது போலவே?

காலா படத்தை ரிலீஸ் நாளுக்கு முன்பே தனது இணையதளப் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தமிழ்ராக்கர்ஸ் சவால் விட்டு இருக்கிறது. அப்படி இருக்கையிலும் காலா படத்திற்கான ஆதரவும் எதிர்பார்ப்பும் குறையவில்லை என்பது தான். டிக்கெட் புக்கிங் வசதி இருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் ஷோக்களுக்கான டிக்கெட் அனைத்தும் அசுர வேகத்தில் விற்று முடிந்து உள்ளது. இன்னும் சில தியேட்டர்களில் முதல் நாள், நான்கு காட்சிகளுக்குமான டிக்கெட் அனைத்தும் விற்பனை ஆகி உள்ளது. முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்களின் விமர்சனத்தையும் கருத்தையும் வைத்து, இதன் வியாபாரம் இன்னும் பெரிய அளவில் உயர்ந்தாலும் உயரலாம். இந்த வருடத்தில் தியேட்டருக்கு அதிக ரசிகர்களை வர வைக்கும் இரண்டாவது படம் காலா என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படம்,  இருட்டு அறையில் முரட்டுக்குத்து!

Related Articles

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை ... ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட...
நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...
” ஓடுறவனுக்கு பல வழி இருக்கு…... தயாரிப்பு நிறுவனம் : டிரைடன்ட் ஆர்ட்ஸ்தயாரிப்பாளர் : ஆர் ரவீந்திரன்கதை, இயக்கம் : சுந்தர் சிவசனம் : பத்ரிஇசை : ஹிப் ஹாப் ஆதிஒளிப்ப...
65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! –... 65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் " ந...

Be the first to comment on "காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதிர்பார்த்தேன்! – ரஜினிகாந்த்தின் தில்லான பதில்!"

Leave a comment

Your email address will not be published.


*