நம் நாடு உருப்படாமல் இருப்பதற்கு இடஒதுக்கீடு தான் காரணமாமே! அப்டியா?

சாலைகளில் ஜாதிச்சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் நம் சமூகம் இப்போது சமூக வலைதளங்களில் கூட அந்த வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பேஸ்புக் பேஜ், வாட்சப் குரூப், மீம் பேஜ் என்று சாதியை வளர்ப்பதில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் நம்ம ஆட்கள். இவற்றில் அடிக்கடி “இடஒதுக்கீடு” பற்றிய பேச்சு நிச்சயம் அடிபடும். இது சரியா தவறா என்பது போய், இட ஒதுக்கீட்டால் தான் இந்தியா நாடு உருப்படாமல் போய்க்கொண்டு இருக்கிறது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் இயக்குனர் அமீர், “பள்ளிகளில் சாதியை கேட்கக்கூடாது. சாதிச்சான்றிதழ் என்ற ஒன்று இல்லாமல் போக வேண்டும்…” என்று கூறினார். அவருடைய கருத்து நமக்கு சரியென்று தோன்றும். சில நிமிடங்களில் அமீரே ரஞ்சித்தை வலுக்கட்டாயமாக வரவழைத்து சமாதானம் பேச ரஞ்சித்தோ, ” சாதி இல்லாமல் போக வேண்டும்… அப்படிங்கற நோக்கம் சரி தான்… ஆனால் சாதிச்சான்றிதழ் அப்டிங்கற ஒன்னு இருக்கறனால தான் எதோ எங்களுக்கு கொஞ்சமாவது கிடைக்குது… ” என்று மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். இதுவும் சரி என்று தான் தோன்றும். காஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற நிகழ்ச்சியில், “வேட்டு… கோட்டாவுல சீட்டு…” போன்ற வரிகள் பிரபலம் அடைந்தது. அந்நிகழ்ச்சியை பலரும் பாராட்டினர். அதே சமயம் எதிர்ப்புகளும் கிளம்பியது. சினிமா துறையில் இப்படிப்பட்ட குழப்பமான சூழல் நிலவ, கிரிக்கெட்டில் நிலைமை அதைவிட குழப்பமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அதில் இருப்பவர்கள் அனைவரும் எந்த சாதியினர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கான தமிழ் கமெண்ட்ரி கொடுக்கும் நபர்கள் எந்த சாதியினர் என்பதனையும் அனைவரும் அறிந்து வைத்து இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு, ஹர்திக் பாண்டியா இடஒதுக்கீடுக்கு எதிராக ஒரு டுவீட்டைப் போட்டு லேசான சலசலப்பை உண்டாக்கினார். இப்போது இந்த தமிழ் கமெண்ட்ரிகளில் சிலர் இந்த வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, ஸ்ரீகாந்தின் ஒருமையில் பேசும் அதிகாரத் தொனி. உள்நாட்டு விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் சரி அவனே, இவனே என்று ஒருமையில் தான் பேசுகிறார். அதுமட்டுமின்றி இன்னும் சில கமெண்டுகள் முகம் சுளிக்க வைக்கும்படி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இட ஒதுக்கீடு சரியா தவறா என்பதற்கு தவறு என்பது தான் பல முனைவர் பட்டங்கள் பெற்றவர்களின் கருத்து. இந்த சமூகம் சமத்துவம் அடைய வேண்டும் என்றால் இடஒதுக்கீடு தேவை என்பது பல சமூக ஆர்வலர்களின் கருத்து.

Related Articles

நீயா நானாவுக்குப் போட்டியாக களமிறங்கிய க... பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கிறோம் என்பதை மீறி ஒரு சில நிகழ்ச்சிகள் நம் மனதை வெகுவாக கவர்ந்திருக்கும். நேரத்தை பயன் உள்ளதாக மாற்றும். சிந்திக்க வைக்க...
ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப... இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்...
ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தி... ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.ஆந்திர முதல்வராக இருந்த...
பாகுபலி நாயகனின் “சாஹோ” படம்... படம் ரிலீசான அடுத்த நொடிகளில் இருந்து இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தாலும்  பாகுபலி நாயகனின் படம் என்பதால் இந்தப் படம் நல்...

Be the first to comment on "நம் நாடு உருப்படாமல் இருப்பதற்கு இடஒதுக்கீடு தான் காரணமாமே! அப்டியா?"

Leave a comment

Your email address will not be published.


*