ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்

ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சம்ரதா கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. தடபுடலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நிறைந்த அந்தத் திருமணத்தில் பக்கத்திலிருக்கும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விருந்தாளிகள் வந்திருந்தனர். பெருங்கூட்டத்திற்கு நடுவே சிரித்த முகத்துடன் மணமகன் ஆடையுடுத்தி  நின்றிருந்தார் சுக்ராம் பைரவா. இதில் என்ன செய்தி இருக்கிறது என்கிறீர்களா?

இரண்டாவது திருமணம்

பைரவாவுக்கு இது இரண்டாவது திருமணம். முதல் மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் ஒரு ஆண் பிள்ளையை பெற்றுத் தர இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக , முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பைரவா, அதுவும் தன்னை விட ஐம்பத்து மூன்று வயது சிறிய பெண்ணை மணந்து கொண்டுள்ளார், கிட்டத்தட்டத் தன்னை விட அரை நூற்றாண்டு சிறிய வயது பெண். பைரவா மற்றும் அவரது முதல் மனைவிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் சிக்கலான நோய் காரணமாக இறந்து போனான்.

ஆண் வாரிசுக்காக

இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். தற்போது பைரவாவுக்கு இருக்கும் பெரும்பகுதி நிலங்களையும், சொத்துக்களையும், டெல்லியில் இருக்கும் மனையையும் தனக்கு பிறகு பார்த்து கொள்ள ஒரு ஆண் வாரிசு தேவை என்பதால் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அவர். ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுப்பது ஒன்றே இந்தத் திருமணத்தின் ஒரே நோக்கம், அதுவும் முதல் மனைவி அனுமதியுடன்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது என்பது சட்டப்படி குற்றமாகும். செய்தி நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதியான ராஜ்நாராயண் சர்மாவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, மாவட்ட ஆட்சியர் விடுப்பில் இருப்பதாகவும், விரைவில் அந்தக் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டாவது திருமணத்தில் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா என்ன?

Related Articles

ரயிலில் தவறி விழுந்தவரின் உயிரைக் காப்பா... மும்பையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை ட்வீட்டர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி சக  பயணிகள் மீட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த... அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படியாதிருத்தல் அறம். ஆனால் மற்றுமொரு அரசியல்வாதியின் கரங்களில் கறை பட்டிருக்கிறது. இம்முறை நேர்மறையாக. மத்திய பிரதேசம் ரே...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
” கடவுள் ஒரு சில்றபையன் ” &#... எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.பசுபதி, சிங்கப் பெருமா...

Be the first to comment on "ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்"

Leave a comment

Your email address will not be published.


*