“நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது” – பரியேறும் பெருமாள் பட வசனங்கள்

பரியேறும் பெருமாள் பட வசனங்கள்
 1. ” நாளைக்கு எனக்கு முத நா காலேஜ் இருக்கு… “

” லா காலேஜ் படிச்சு என்னத்த கிழிக்கப் போற… உன்ன நம்பி நாங்க இருக்கோம் பாரு… “

 

 1. ” எங்க வந்து எவ்வளவு திமிரா நாய வச்சு வேட்டையாடுறானுங்க பாரேன்… இன்னிக்கு முடிவு கட்டனும்லே… “

 

 1. ” நம்ம வயலும் வரப்பும் அவனுக கிட்டத்தான இருக்கு… நம்ம அப்பனுங்கிட்ட வாயும் வயிறும் தான்ல இருக்கு… “

” அதுவரைக்கும்… “

” பொத்திட்டு தான் போகனும்… “

” எவ்ளோ நாளைக்கான்… “

” என்னிக்கு நம்ம அப்பனுங்க அவிங்க காட்டுல உழவு வேல பாக்கறத நிப்பாட்டுறாங்களோ அது வரைக்கும்… “

 

 1. ” எனக்கு என்னமோ அந்தப் பயலுங்க மேல தான் சந்தேகமா இருக்கு.., “

” ஏய் ட்ரெய்ன் வருது ஓடு ஓடு…”

 

 1. ” அதெல்லாம் எல்லா வாய்ப்பாடும் நல்லா படிப்பா சார்… ஆனா என்ன விளையாட்டுப் புத்தி… “

” இங்க விளாட்டுக்கெல்லாம் இடமில்லமா… இது லா காலேஜ்… இங்க வந்து சாதி, மத, அரசியல்னு பல்வேறு விஷியங்கள் இருக்கு… அதெல்லாம் தல கொடுக்காம நல்லா படிக்கனும்… சரியா… “

 

 1. ” நல்லா படிச்சாதான் என்ன ஆக முடியும்… “

” டாக்டர் ஆக முடியும் சார்… “

” தம்பி இது லா காலேஜ்… இங்க படிச்சா டாக்டரால்லாம் ஆக முடியாது… அட்வகேட் தான் ஆக முடியும்… “

” ஐய நான் ஊசி போட்ற டாக்டர் ஆவேன்னு சொல்லல சார்… டாக்டர் அம்பேத்கர் ஆவேன்னு சொன்னேன்… “

 

 1. “ப்பா இந்தப் பையன் டாக்டர் அம்பேத்கர் ஆவேன்னு சொல்லிருக்கான்… அத இதுல நோட் பண்ணி வை… “

” எதுக்கு சார்… “

” இந்த மாதிரி ஆர்வக்கோளாறு பசங்க சீக்கிரமே வம்புதும்புல மாட்டுவாங்க… அப்ப நமக்கு நியாபகம் வரனும்ல அதான்… “

 

 1. ” பரியேறும் பெருமாள்… பரி னா குதிரை… குதிரை மேல ஏறி வர பெருமாள் சாமி பேரு… “

 

 1. ” வாயில தம் வச்சிட்டு நெத்தில கையும் பெட்டக்ஸ்ல காலும் அடிக்கறது தான் லா காலேஜ் சல்யூட்… “

 

 1. ” புரியுதா… “

” புரிஞ்சா நா ஏன்டா இன்ஸ்ட்ரஸ்டா பல் குத்துப் போற… “

 

 1. ” உனக்கு மட்டும் இங்கிலீஷ் தெரியாதுன்னு சொன்னின்னா உன்ன பீ மாதிரி பாப்பாங்க… “

 

 1. ” ஹிஸ்ட்ரி ஆப் கோர்ட்ஸ் “

” ஹிஸ்ட்ரி ஆப் கோட்சேவாம்… “

 

 1. ” ஒன் ஒருத்தனுக்கு புரியலங்கறதுக்காக என்னால  தமிழ்ல கிடந்து நடந்திட்டு இருக்க முடியாது… எல்லோருக்கும் புரிஞ்சிருக்கு… உனக்குப் புரியலனா டிசி வாங்கிட்டு போய் தமிழ்ல ஆத்திச்சூடி படி போ… “

 

 1. ” தமிழ்ல புக் இருக்கா… “

” தமிழ்ல எக்சாமே எழுதுலாங்க… “

” அம்மா சத்தியமா…???”

” அம்மா சத்தியமா…”

 

 1. ” நீ C ல ஆரம்பிக்கிற அஞ்சு வார்த்த  சொல்லு… “

” சின்ன c ஆ… பெரிய c ஆ… “

 

 1. ” நம்மள அசிங்கப்படுத்தன இங்கிலீஸ்காரன்லா வெளிய போய்ட்டானுங்க… நிமிந்து பாரு… “

 

 1. ” ஏய் நில்லு பர்ஸ் இயர் தான…என்ன கலர் கலரா வளையல் போட்ருக்க… உனக்கு இங்கப் பாடம் சொல்லித் தராங்களா இல்ல வளகாப்பு நடத்துறாங்களா… “

” இல்ல இது எனக்குப் பிடிக்கும் அதனால போட்றுக்கேன்… உனக்குப் பிடிச்சதுன்னா நீ செய்வியா…. சீனியருக்கு என்ன பிடிக்குமோ அதான் செய்யனும்… எனக்கு இது புடிக்கல கழட்டு… “

 

 1. ” கடவுளே வந்தாலும் இங்கிலீஷ தமிழ்ல நடத்த முடியாது… “

 

 1. ” நீ எதுக்கு சிரிச்சன எனக்குத் தெரியும்… உனக்கு என்னத் தெரியும்னு பாக்கலாமா??? “

 

 1. ” இனிமேல் அப்டி சொல்லாத… எல்லாரும் அசிங்கமா பாப்பாங்க… “

 

 1. ” ஓ இவரா… “

” வா… வந்து ஒக்காரு… “

 

 1. ” என்னடா இது முட்டை… நீ என்ன கோழியா… முட்டை போடவா காலேஜ்க்கு வந்துருக்க… உனக்கெலாம் கிடைச்சிருக்கு பார் லா காலேஜ் சீட்… ஆமா லா படிச்சு நீ என்ன பண்ண போற… கோட்சூட் போட்டு மாடுமேய்க்கப் போறியா… இடியட்… நீங்க ஏன் சிரிக்கறத நிப்பாட்டிடிங்க… சிரிங்க…என்னுடா பெரிய இவன் மாதிரி முழிக்குற… கோட்டாவுல வந்த கோழிக்குஞ்சு… “

” இத வாசிங்க சார்… இத வாசிங்க சார்… ஒரேயொரு முறை இத வாசிங்க சார்… சார் என்ன கோழின்னு சொன்னிங்கள்ல… எத்தன கோழி இருக்காங்கன்னு பாருங்க சார்… ப்ளீஸ் சார் ஒரெயொரு தடவ வாசிங்க சார்… “

 

 1. ” ஏன் அவ்ளோ கோபப்ட்றிங்க… உங்களுக்கு இங்கிலீஷ் பிடிக்கலனா பேசாம இருக்க வேண்டியதுதான… “

” நீங்க அப்பிடித்தான நடந்திங்க…”

” நா ஒன்னும் அப்படி நடக்கல… எல்லோரும் என்னைய அப்படி நடத்துறாங்க… “

 

 1. ” எல்லா பாழாப் போன இங்கிலீஸால தான்… அத சொல்லிக் கொடுத்தவனுக்கொம் அது தெரில… அதனால எனக்கும் வரல… “

 

 1. ” இந்த அம்மா சத்தியத்த அப்பவே ஆரம்பிச்சிட்டிங்களா…”

 

 1. ” எங்க ஊரோட ஊத்து தண்ணி ஆர்கேஆர் ராஜா… “

 

 1. ” சார் அவிங்க களவாண்டத நீங்க பாத்திங்களா சார்… “

” அப்ப களவாண்டவன நீ பாத்தியா… “

 

 1. ” என்னய்யா அவர போயி… பெரிய வக்கீலுக்கா அவன் பேசிருக்கான்… ஐயா சாமி விட்றுங்கன்னு கெஞ்சிக் கேட்டாலும் பரவால… கத்துறான்… இந்த மாதிரி ஒன்னு இல்லாதவன்ல எல்லாம் கத்த வுட்டன்னு வச்சிக்கு அப்புறம் ரோட்ல போற வர்ற வக்கீல் எல்லாம் பெரிய ஜட்ஜ் மாதிரி பேசுவானுங்க புரியுதா…”

 

 1. “மன்னிச்சுக்குத் தாத்தா இனிமே நாங்க வேட்டைக்கெல்லாம் போக மாட்டோம்… “

” அதெல்லாம் ஒன்னும் இல்லையா… நாமளும் ஒரு நாள் அடிப்போம்… அத விடு நான் அடிவாங்குன விஷியத்த ஊர்ல யார்கிட்டயும் சொல்லிதாங்கடா… ஏன்னா ஊர்ல எல்லா பயலுகளும் எனக்குத் தான் பேசத்தெரியும்னு நினைக்குறாவோன்க… நானும் அடிபட்டேன்னு தெரிஞ்சா ஒரு பயலும் மதிக்க மாட்டான்… அப்றம் இந்த ஊருக்காகப் பேசறதுக்கு ஒரு நாய் கூட இல்லாம போயிடும்… நீங்கள்லா நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போயி தைரியமா வாழ்றதுக்காக இந்தக் கிழவன் எவ்வளவு அடி வேணாலும் வாங்கிக்குவன்ல… “

 

 1. ” வக்கீலுக்குப் படி அப்பத்தான் ஊருக்காக தைரியமா நெஞ்ச நிறுத்தி எல்லோர்க்கும் கேட்குற மாதிரி பேச முடியும்… “

 

 1. ” ப்பா எவ்ளோ கதை… “

 

 1. ” உக்காந்து கத்துக்கொடுத்தா கத்துக்குவிங்களா… “

” ஏங்க கால்ல விழுந்து கத்துக்குவேங்க…”

 

 1. ” உங்களுக்கு நீங்க லாயர் ஆகணும்… எனக்கு நான் தேவதை ஆகணும்… “

” தேவதை ஆகணுமா… “

” ஆமா உங்களுக்கு இங்கிலீஸ் சொல்லிக் கொடுத்த எல்லோரும் தேவதை தான… அப்ப நானும் தேவதை தான… “

“நீங்க இந்த நிமிசத்துல இருந்தே தேவதை தான்… “

 

 1. ” டீச்சர்… “

”  உன் தேவதை லிஸ்ட்ல நாங்களாம் இருக்கோமாடா… “

” இருக்கிங்க டீச்சர்… எங்க அம்மா மேல சத்தியமா… “

” நம்பிட்டேன் போ… “

” நாலு நாளூ தேவதை தானா இல்ல அஞ்சாவத வருவாங்களா… “

” ம்ம் வந்தா சந்தோசம் தானா…”

” நீ வேணா பாரு… உனக்காகப் பத்தாயிரம் தேவதை வருவாங்க… “

 

 1. ” ஜோ… புடவைல நீ ரொம்ப அழகா இருக்க… “

” அடேங்கப்பா இத சொல்றதுக்கு இவ்ளோ நேரம்… “

 

 1. ” அப்டி இந்த flames ல என்ன இருக்கும்… ப்ரெண்டு, லவ்வு, தங்கச்சி சண்டக்காரி அவ்ளவு தான… என் ஜோ அதுக்கும் மேல…

 

 1. ” தமிழ்னா ஏன்டா தலைல அடிச்சிக்கிறிங்க… “

 

 1. ” ஒன்னா படிச்சா நீயும் என் பிள்ளையும் ஒன்னாயிடுவிங்களா… என்னடே அவகூடலாம் நீ பழகலாமா… உன்னக் கொல்றதோட இல்லாம எம்பிள்ளையும் கொன்றுவாங்கடா… உன்ன கையெடுத்துக் கும்புட்றேன் இனிமே என் பொண்ணோட பேசாத பழகாத… அதான் எல்லாத்துக்கும் நல்லது… “

 

 1. “ஹலோ என்னைய யார்னு தெரியுதா… “

” சொல்லு… “

” ஏய் என்னாச்சி… எங்க போயி விழுந்து தொலச்ச… “

” ஊர்ல கபடி டோரனமென்ட்டு அதுல அடிபட்ருச்சு… “

” ஓ துரை கல்யாணத்துக்கு கூட வராம கபடி விளையாட போயிருக்கிங்க… அப்டித்தான… எவ்ளோ திமிர் உனக்கு… நான் எத்தனு தடவ படிச்சு படிச்சு நீ வரனும்னு சொல்லிட்டு வந்தேன்… அத எதயுமே யோசிக்காம கபடி விளையாட போய்ட்டேன்னு எங்கட்டயே வந்து சொல்ற… ஒரு நிமிசம் என் மூஞ்சப் பாரு… இந்தக் காலேஜ்லயே நா உனக்கு மட்டும் தான் பத்திரிக்கை கொடுத்தேன்… எங்கப்பா அம்மா அக்கா எல்லார்கிட்டயும் என்னென்னலாம் சொல்லி வச்சிருந்தேன் தெரியுமா…,எல்லோரும் உன்ன எவ்ளோ எதிர்பார்த்தோம் தெரியுமா… அதெல்லாம் விடு… நா உனக்காக எவ்ளோ சர்ப்ரைஸ் வச்சிருந்தேன் தெரியுமா… ஆனா நீ என்னடானா கபடி விளையாடப் போனேன்னு எங்கட்டயே அசால்ட்டா சொல்ற…

“இல்ல வரக்கூடாதுன்னு இல்ல… ஆனா கடைசியா வர முடியாம போயிடுச்சு”

” யப்பா சாமி… மொத இந்த அசால்ட்டா பேசுறத நிப்பாட்டு… என்ன ஆனாலும் உனக்கு வந்தெ ஆகனும்னு தோனல இல்ல… இனி அதப் பத்தி பேசாத… 10 நாள் சொல்லாமக் கொள்ளாம லீவ் போட்டு வீட்லயே இருந்தல்ல… இப்ப நா சொல்றேன்… இனி எனக்கு எப்ப உங்கட்ட பேசணும்னு தோனுதோ அப்ப தான் நான் பேசுவேன்… நானும் சொல்லாமக் கொள்ளாம லீவ் போடுவேன்… பாய்… “

” சரி… “

” என்னது சரியா… “

” என்ன அழ வச்சுப்பாக்கனும்னு முடிவு பண்ணிடல்ல… பாய்… “

 

 1. ” ப்ளீஸ் யாராவது சொல்லுங்களே நா வந்தது தப்பா… “

” ஏலே எவம்லே சொன்னது… நான் சொல்றேன்ல… நீ எங்க வேணாலும் எப்ப வேணாலும் வரலால… “

 

 1. ” டேய் நீ எவ்ளவு தான் கத்துனாலும் இங்க இருக்கறவங்களுக்குப் புரியாதுலே… “

 

 1. ” அப்பா பரியன் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான் பா… “

 

 1. ” ஜாதி பாத்தாடா நான் பழகுறேன்… நீ என்ன காரணத்துக்காக அடிச்சனு சொல்லு… நானும் கூட சேந்து அடிக்குறேன்… “

 

 1. ” உன் சாரியெல்லாம் எனக்கெதுக்குடா… “

” சும்மா வச்சுக்கோங்களே… “

 

 1. ” எங்க எல்லாரையும் விட்டுட்டு உனக்கு மட்டும்தான பத்திரிக்கை வச்சா… அதான் கேட்குற… “

” அதத்தான் டீச்சர் நானும் கேக்குறேன்.. . ஏன் எனக்கு மட்டும் பத்திரிக்கை வச்சா… “

 

 1. ” ஏன் உனக்கு ஜோ வ பிடிக்கலயா… “

” டீச்சர் அவ என் ஜோ… என் ஜோ ன்னா அது காதலா மட்டும்தான் இருக்கனுமா… என் நல்ல ப்ரெண்டா இருக்ககூடாதா… இல்ல செத்துப் போன என் கருப்பி நாயா இருக்க கூடாதா… சரி இதெல்லாம் விடுங்க எனக்குனு கொஞ்சூண்டு மிச்சமீதிய இருக்குற நம்பிக்கையா இருக்க கூடாதா… “

 

 1. ” ஹே உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… ஆமா சார் எனக்குப் பைத்தியந்தான் பிடிச்சிருக்கு… “

 

 1. ” எங்கேயும் போவ வேணாம்… நான் எங்கப்பாவையே கூட்டி வரேன்… எனக்கு எங்கப்பா தான் வேணும்… “

 

 1. “காலேஜ்ல உன்னய கூட்டிட்டு வரச் சொன்னாங்கப்பா… “

” அங்கெல்லாம் நான் எதுக்குப் பா… “

 

 1. ” எப்பா உள்ள போனா யாருக்கும் பயப்படாம பேசலாமல்ல… “

” அப்டித்தான் பேசணும்… “

 

 1. “பரியேறும் பெருமாளோட அப்பா… “

” போன வாரம் தான் ஒருத்தர் வந்து அடிஅடின்னு அடிச்சிட்டு போனாரு… “

” ஐயா நான் பெண் வேசம் கட்டி ஆட்றவன் இதச் சொல்றதுக்கு மானப்பட்டுப் போய்… வேற யாரையோ கூட்டிட்டு வந்திருக்கான்… இது ஒரு தப்பாய்யா… “

 

 1. ” டிசிய கிழிச்சு கொடுத்தனுப்புட்டுங்களா… “

” நீங்க என்னத்த கிழிக்கனுமோ கிழிச்சுக்குங்க… ஆனா அவங்கட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க… “

 

 1. ” இவர் தான் உன் அப்பாவா… “

” ஆமா சார்… “

“இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சிக்கிட்டு ஆள மாத்தி கூட்டி வந்துருக்கியேடா… “

 

 1. ” உனக்கொரு விஷியம் தெரியுமா… எங்கப்பா ரோட்ல செருப்பு தைக்கறவரு… அவருடைய பிள்ளை நான்… உனக்கு பிரின்சிபில்… என்னிக்கும் எப்பவும் அப்பாவ மாத்தாதடா… பீ திங்கற பன்னி மாதிரி என்ன அடிச்சு அடிச்சு விரட்டுனாங்க… ஓடி ஒளிஞ்சுப் போய்டன்னா… அப்றம் எது அவசியம்னு தெரிஞ்சிக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன்… அன்னைக்கு என்ன அடக்கனம்னு நினைச்சவன்லா இன்னிக்கு ஐயா சாமின்னு கும்புட்றான்… உங்கப்பாவ பாத்ததால நான் சொல்றேன்… உன்ன சுத்தி நடக்குற எல்லா விஷியத்தையும் மீறி என்னை மாதிரி நீயும் ஜெயிச்சு வருவன்னு நான் நம்புறேன்… இத மனசுல வச்சிக்கிட்டு உனக்கு என்ன தோனுதோ செய்… போ… போ… “

 

 1. ” சார்… என்ன சார் இப்டி சொல்லி அனுப்புறிங்க… போய் சண்டைகீது போட்ற போறாங்க சார்… “

” போட்டா போடட்டும்… ரூம்ல போயி தூக்குமாட்டிக்கிட்டு சாவுறத விட சண்டபோட்டு சாவட்டுமே… அவனுங்கள நம்மளால திருத்த முடியுமா… “

” முடியாது சார்… “

” அப்றம்… இவன மட்டும் ஏன் அடக்கப் பாக்குறிங்க… “

 

 1. ” நீ சொன்ன ஆள நம்பலாம்ல… “

” ஏய் ஆள் தப்பிச்சிட்டா உசுருட்டாவப்டி… “

 

 1. “உசுரெடுக்கறத குலசாமிக்கு செய்றதா நினைச்சு செஞ்சுட்டு இருக்கேன்… “

 

 1. ” நம்ம அப்பாவ என் கண்முன்னாடி அம்மண குண்டியா ஓடவுட்டுட்டாங்க… எவனாயவது குத்திக் கிழிச்சு சாகடிக்கனும்மா… “

” இதெல்லாம் உனக்கு எவம்லே சொல்லிக் கொடுத்தா… உங்கப்பனுக்கு இது இன்னிக்கு நேத்தா நடக்குது… எத்தனை முறை உங்கப்பன பொம்பளைன்னு நினைச்சு தூக்கிட்டு போயிருக்கானுவ… பாவாடைய அவுத்துப் பாத்துட்டு  ஆம்பளைன்னு தெரிஞ்சதும் அம்மணமா அப்டியே வுட்டுட்டு ஓடிருக்கானுங்க… “

” அப்பலாம் நான் இல்லையேம்மா… “

” அன்னிக்கு இல்லப்பா… இப்ப நீ மட்டும்தான் எங்களுக்கு இருக்க… எங்கள அனாதையா விட்றாதப்பா… நீ காலேஜூக்குப் போவ வேணாம்…, “

” இல்லம்மா நான் காலேஜூக்குப் போவனும் படிக்கனும்… “

 

 1. ” தேங்ஸ் சொல்ற அளவுக்கு நாம தூரமாயிட்டோம்ல… “

 

 1. ” உண்மைய விட பொய்யத்தான் சட்டென நம்புவியோனு நினைச்சேன்… “

” இது பொய்… எனக்குப் பொய்ய விட உண்மையத் தான் பிடிக்கும்… நான் இன்னிக்கு உங்கட்ட ஒரு உண்மைய சொல்லி ஆகனும்… “

” ஏன் கண்ணலாம் மூடிட்டு பேசுற… “

” எனக்கு உன் முகத்த பாத்து சில விஷியம் சொல்ற தைரியம் இல்ல… ஆனா நா கண்ண மூடிக்கிட்டே பேசுவேன்… நீ கேட்டா மட்டும் போதும்… நீ எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு எங்கப்பா எங்கம்மா அண்ணான் வீட்ல எல்லோர்கிட்டயும் சொல்லிட்டேன்… அவிங்கள்லாம் என்ன நினைக்குறாங்கன்னு எனக்குத் தெரியல… ஆனா எனக்குத் தோனுது… எனக்கு உன்கூடயே இருக்கனும்னு தோனுது… உன் வீட்டுக்கு வந்து உங்கப்பா உங்கம்மா எல்லோரைடையும் சேர்ந்து வாழனும்னு தோனுது… இதெல்லாம் உங்கட்ட கேட்காம உன்ன பத்தி யோசிக்கறது தப்புத் தான்… எனக்குத் தெரியும்… ஆனா இத என்னிக்காவது ஒருநாள் சொல்லித்தான் ஆகணும்… அதான் கண்ணமூடிட்டே சொல்லிட்டேன்… நீ அதுக்கெல்லாம் எந்தப் பதிலும் சொல்ல வேண்டாம்… முதல்நாள் பாத்தப்ப இருந்த பரியனா இருப்பியா… இருப்பேன்னு சொல்லு அப்பத்தான் கண்ணத் திறப்பேன்… சரி நீ அம்மா சத்தியம் பண்ணு… நான் அந்த லாஸ்ட் பெஞ்சுல பாத்தேன்ல… சிரிச்ச முகத்தோட இருக்கனும்…கண்ணத் திறக்கப் போற நீ சிரிச்சிக்கிட்டே இருக்கணும்…. “

” என்னா வேணா கேட்கலாம்… என்னா வேணா சொல்லலாம்… அதுக்கான எல்லா  உரிமையும் உனக்கு இருக்கு.., நீதான் சொல்லிட்டியே பழைய பரியனா பழைய ஜோவா இருப்போம்னு இது போதும் சூப்பர்ல… எனக்கு எந்த குழப்பமுமல்ல..

 

 1. ” இவ்ளோ வாய் வச்சிக்கிட்டு ஒரு சாக்லேட்ட கூட பிரிக்கத் தெரியல… “

 

 1. ” வாங்க சார்… வாங்க… எப்படி செத்துக் கிடக்குறான்னு பாக்க வந்திங்களா… யோவ் நீங்கள்லாம் மனுசங்களாயா… அன்பா கூப்டான்னு வீட்டுக்கு வந்தா அடைச்சு வச்சு அடிச்சு மூஞ்சில ஒன்னுக்குப் போயும் உங்க வெறி தீரல இல்ல… கேவலம் ஒரு கிழவன என்ன கொல்ல அனுப்ச்சிருக்கிங்க… த்தூ… இதுக்குப் பேருதான் வீரமாய்யா… யோவ் இன்னிக்கு உன்பொன்னு உன்ன பாத்து சிரிச்சால்ல… அப்பான்னு கூப்டால்ல.,. அந்த சிரிப்பும் அப்பாங்கற வார்த்தையும் நான் உனக்குப் போட்ட பிச்சை… நீங்கலாம் நினைச்சிட்டிருக்கிங்க… இந்த மானம் மரியாதை கௌரவம் இந்த மசுத்தெல்லாம் நீங்க தான் காப்பாத்திருக்கங்கனு நினைச்சு… நான் காப்பாத்திருக்கேன்… இதெல்லாம் போயி உன் பொண்ணுட்ட சொல்லிருந்தேன்னு வை… அவளே உன் மூஞ்சில காரித்துப்பிட்டு தூக்குல போய் தொங்கிருப்பா… அதனால தா எல்லாத்தயும் பொறுத்துக்கிட்டேன்… இப்ப என்னய்ய என்ன… நான் செத்தா தான் நீ அவளுக்கு அவ நம்புற அப்பாவா கிடைப்பன்னா… வாய்யா நீயே வந்து கொல்லு…  வாய்யா நீயே வந்து கொல்லு…   என்ன கொன்னதுக்கப்புறமும் உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை வரலன்னா போயா… போயி அவளயும் சேத்து கொல்லு… “

” யோவ் உங்களுக்கு என்னய்யா பிரச்சினை… எதுல்லய்யா நா உங்களவிட கீழ போயிட்டேன்… இப்ப சொல்றேன்… ஏர் பிடிச்ச கைல நானும் வாள் பிடிச்சவன் தான்… அதுனால நா இங்க தான் இருப்பேன்… நா ஆசைப்பட்டது தான் படிப்பேன்… உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க போங்க… “

 

 1. ” தம்பி… உன்ட ஒன்னு கேப்பேன்… மறைக்காம சொல்லனும்… “

” சொல்லுங்க சார்… “

” நாங்க இவ்ளோ பண்ணிருக்கோம்ல… நீ ஏன் என் பொண்ணுகிட்ட சொல்லவே இல்ல… “

” உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார்… உங்க பொண்ணுக்கு என்ன விட உங்கள தான் சார் ரொம்ப பிடிக்கும்… எனக்கு கிடைச்ச மாதிரி அப்பா வேற யாருக்கும் கிடைச்சிருக்க மட்டாங்கன்னு ரொம்ப சந்தோசமா சொல்லிட்டே இருப்பா… அதான் சொல்லல… “

” தேங்க்ஸ் பா… எனக்கும் தெரியும் தம்பி… என் பொண்ணுக்கு என்ன எவ்ளோ பிடிக்கு மோ அதே அளவுக்கு உன்னையும் பிடிக்கும்… தம்பி என் பொண்ணு உன் மேல இவ்ளோ பைத்தியமா இருக்காளே… அதே மாதிரி உனக்கு அவ மேல எந்த நினைப்பும் வரவே இல்லையா… “

” தெரில சார்… அது என்னன்ன தெரிஞ்சிக்கறதுக்குள்ள தான் நாய அடிக்கிற மாதிரி அடிச்சு ரத்தம் சதைன்னு குத்திக் கிழிச்சுட்டிங்களே… ஆனா உங்க பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ சார்… அவ நினைச்சத நினைச்ச இடத்துல பேச முடியுதுல்ல… ஆனா என்ன பாருங்க… நான் என்ன நினைச்சேன்னு சொல்றதுக்கே செத்து தொங்க வேண்டியதா இருக்கு… “

” சாரிப்பா… நீ ரொம்ப நல்ல பையன்… நீ ஆசைப்பட்ட மாதிரியே வாழ்க்கைல பெரிய ஆளா வருவ… நல்லா படி… இப்போதைக்கு என்னால இதான் சொல்ல முடியும்… பாக்கலாம்… நாளைக்கு எது வேணாலும் எப்டி வேணாலும் மாறலாம் இல்லையா… யாருக்குத் தெரியும்… “

” எனக்குத் தெரியும் சார்… நீங்க நீங்களா இருக்கற வரைக்கும்… நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது… இப்டியே தான் இருக்கும்… “

Related Articles

கவியரசு கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யமான சில... முத்தையா என்ற இயற்பெயருடைய கண்ணதாசன் பத்திரிக்கைகளிலும் தமிழ்ப்படங்களிலும் எழுதிய இனிய தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல் இருக்கும...
“நான் பெத்த மகனே” இந்த திரைப... நான் புடிச்ச மாப்பிள்ளை, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, வீட்டோட மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா போன...
அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல்... அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு ச...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...

Be the first to comment on "“நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது” – பரியேறும் பெருமாள் பட வசனங்கள்"

Leave a comment

Your email address will not be published.


*