ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி!

ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி!

வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்கு விண்ணப்பித்த மகளிர்  லைசன்ஸ் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகங்களில் படையாக திரண்டு நிற்கின்றனர். இந்நிலையில் ஆர்டிஓ பணிக்கான தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நாள் மற்றும் தேர்வு நாள்?

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் அறிவிப்புப்படி ஆர்டிஓ பணிக்கான எழுத்து தேர்வு வரும் ஜூன் 10ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 13 என்றும் நிரப்பபட்ட விண்ணப்ப படிவங்களை சமர்பிக்க கடைசி நாள் மார்ச்25 என்றும் அறிவித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ, ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.,இவர்கள் கண்டிப்பாக இரு சக்கர வாகனம், கனரக பயணி வாகனம், கனரக சரக்கு வாகன ஓட்டுநர் உரிமங்களை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தது இந்த வாகனங்களில் பெட்ரோல் டீசல் இன்ஜின் வாகனங்களை குறைந்தபட்சம் ஓராண்டுவது பணிபுரிந்த அனுபவம் வேண்டும். கனரக வாகனங்களை குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஓட்டிய அனுபவம் வேண்டும்.

பணி குறித்து?

தற்போது கிரேடு 2 – மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இது. இதன் பிறகு நடத்தப்படும் துறைத்தேர்வுகளில் வெற்றி பெற்றால் கிரேடு – 1 மோட்டார் வாகன ஆய்வாளர், ஆர்டிஓ என பதவி உயர்வு பெறலாம்.

பாடத்திட்டம்?

முதல் தாள், இரண்டாம் தாள், நேர்முகத்தேர்வு மூன்றும் சேர்த்து 570 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. நேர்முகத்தேர்வுக்கு 70 மதிப்பெண்கள். முதல் தாளில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் 100 கேள்விகள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்கள். இரண்டாம் தாள் பிளஸ்டூ தரத்தில் 100 பொது அறிவு கேள்விகளை கொண்டிருக்கும். இதற்கு மதிப்பெண்கள் 200.

Related Articles

எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்&#... தமிழ்மகன் என்கிற பா. வெங்கடேசன் எழுதிய புத்தகம் மீன்மலர். இருபது வயதுகளிலயே எழுத தொடங்கி இளம் வயதிலயே தமிழக அரசின் இலக்கிய விருதுகளை வென்றுள்ளவர். மீன...
காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதி... கர்நாடாகாவில் காலாவுக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது. (இன்னும் சில வெளிநாடுகளில் காலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக பரப்பப்படுகி...
குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகே... பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிர...
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுக... தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அ...

Be the first to comment on "ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி!"

Leave a comment

Your email address will not be published.


*