மரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்தி பென்சில் செய்யும் இன்ஜினியர்!

மரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்தி பென்சில் செய்யும் இன்ஜினியர்!

சமீபகாலமாக பல்வேறு துறைகளில் இன்ஜினியரிங் மாணவர்கள் சாதனை செய்து வருகிறார்கள். அக்ரி முடித்த இளைஞர்களுடன் கைகோர்த்து விவசாயத்தை மேம்படுத்துவது, நடமாடும் மலிவு விலை உணவகம், ஆன்லைன் புத்தக விற்பனை, குப்பைகளை மறுசுழற்சி செய்து காசாக்குதல் என்று ஆங்காங்கே சில இன்ஜினியரிங் மாணவர்கள் சின்ன சின்ன சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர். இவர்கள் வரிசையில் இப்போது பெரம்பலூரை சேர்ந்த மதன் என்ற இன்ஜினியரிங் மாணவரும் இணைந்துள்ளார்.

பெரம்பலூர் இமயம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பயின்ற மாணவர் மதன். இவர் தனது சொந்த ஊரில் வீட்டில் இருந்தபடியே குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் இயற்கையான முறையில் பென்சில் தயாரித்து வருகிறார். தொடக்கத்தில் டிஷ்யூ பேப்பர் தயாரித்து வந்த மதன், மறுசுழற்சி செய்யும் பொருட்கள் மீது ஈடுபாடு அதிகமாகவே செய்தித்தாளை பயன்படுத்தி பென்சில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

பெரம்பலூர் கல்விக்குப் பெயர் போன மாவட்டம், ஆதலால் மலிவு விலையில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் எதாவது செய்ய வேண்டுமென்ற அவரது தாயின் கூற்றுக்கு இணங்க, பென்சில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி அதற்கான இயந்திரங்களை தேட ஆரம்பித்தார். இது போன்ற தயாரிப்பில் நைஜீரியா முதலிடமும் சீனா இரண்டாமிடமும் வகிக்கிறது. இந்தியாவில் அவ்வளவாக இல்லை. தமிழகத்தில் சிவகாசி பகுதியை சேர்ந்த துரை என்பவரிடம் இது பற்றி விவரங்களை கேட்டறிந்து பென்சில் தயாரிக்க தொடங்கினார். இது பென்சிலுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில் செய்யப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. காகிதத்தின் முனையில் பசை தடவி கிராபைட் குச்சி சுற்றப்படுகிறது. வியாபாரிகள் பெரிய அளவில் ஆதரவு தராவிட்டாலும் சில பள்ளிகள் தற்போது ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆர்டர்கள் தற்போது கணிசமாக உயர்ந்து நாளொன்றுக்கு 2000 பென்சில்கள் தயாரிக்கும் அளவுக்கு உயார்ந்துள்ளார் இன்ஜினியர் மதன். மறுசுழற்சி முறையை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டுமென்று பாடுபடும் இந்த இன்ஜினியர் மென்மேலும் வளர வாழ்த்துவோம். குறிப்பு : இவர் தயாரிக்கும் பென்சிலின் விலை வெறும் 2.50 ரூபாய் மட்டுமே.

Related Articles

நடிப்பு ராட்சசன் எம்.எஸ். பாஸ்கர் அசத்தி... நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்புத்திறமையைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. இருந்தாலும் சில அசத்தலான காட்சிகளை இங்கு பகிர்ந்து கொள்...
விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகள... தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காட...
நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்ன... விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ...
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதராபாத் ...

Be the first to comment on "மரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்தி பென்சில் செய்யும் இன்ஜினியர்!"

Leave a comment

Your email address will not be published.


*