டிரெண்டிங்கால் வந்த வினை! – பிரியா வாரியர் நடித்த பாடல் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!

கேரளா பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து தமிழ் பெண்களின் வயித்தெரிச்சலை சம்பாதிப்பது தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் தலையாய கடமை. இப்படி டிரெண்ட் செய்ததால் ஒரே நாளில் உச்சம் தொட்ட பிரியா வாரியர் நடித்த பாடல் மீது சிலரால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அடார் லவ்

இயக்குனர் ஒமர் லூலு இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியிருக்கும் படம் ஒரு அடார் லவ். இந்த படத்தில் இடம் பெற்ற ” மாணிக்க மலராயி பூவி ” என்ற பாடல் இணையதளங்களில் ஹிட் அடித்தது. இந்த பாடலில் இடம்பெற்ற பிரியா வாரியரின் குட்டி குட்டி ரியாக்சன்ஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது. பலவிதங்களில் ட்ரோலும் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பாடல் வரிகள் மீது வழக்கு தொடுத்து இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் சிலர். இஸ்லாமியர்களை புண்படுத்தும் நோக்கில் இருக்கிறது என்று ஐதராபாத் போலீசிலும், மராட்டி போலீசிலும் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்படி இந்தப் பாடலை தணிக்கை துறையினர் தடை செய்ய வேண்டுமென்றும், யூடியூப்பில் இருந்து இந்தப் பாடலை நீக்க வேண்டுமென்றும் புகார் அளித்துள்ளனர். இதற்கு பதினைந்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று இயக்குனர் ஓமர் லூலுவுக்கு ஐதராபாத் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சமீபகாலமாக படங்களுக்கு அதிக ப்ரோமசன் வேண்டுமென்பதற்காகவே சில சர்ச்சைக்குரிய காட்சிகளை, பாடல் வரிகளை வைக்கின்றனர் சில இயக்குனர்கள். இது சிலருக்கு செட் ஆனாலும் பலரை கவுத்து விடுகிறது. ஒரு வேளை இந்த பாடல் இணையதளங்களில் ஹிட் அடிக்காமல் இருந்திருந்தால் சாதாரண படமாக ரிலீசாகி எந்த எதிர்ப்புகளுமின்றி நல்ல பெயரை கூட சம்பாதித்திருக்கலாம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல் படத்திற்குள் வலுவான கண்டென்ட் இல்லாமல் ஓவர் ப்ரோமோட் செய்வதும் தீங்கு தான்.

Related Articles

சூர்யா – வெற்றிமாறன் இணையும் படத்த... அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடிவாசல் என தகவல்கள் வந்துள்ளன. பொல்லாதவன், ...
திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திரு... நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனா...
ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ... சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...
சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஆபாச இணைய... இந்த தலைப்பை பார்த்ததும் எத்தனை பேர் பிரேசர்ஸ், பார்ன்ஹப், எக்ஸ்என்எஸ்எஸ், எக்ஸ்வீடியோஸ் பக்கங்களுக்கு விரைந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதே...

Be the first to comment on "டிரெண்டிங்கால் வந்த வினை! – பிரியா வாரியர் நடித்த பாடல் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!"

Leave a comment

Your email address will not be published.


*