லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்

லிஸ்ட் - பேஸ்புக்கின் புதிய அம்சம்

புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்காவில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் தரமற்ற பின்னூட்டங்களுக்கு டவுன்வோட் என்ற வசதியைச் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்து பார்த்தது. தற்போது லிஸ்ட் என்ற புதிய அம்சத்தை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது பேஸ்புக் கருத்து பெட்டியில் பரிந்துரைகள், கேள்விகள் கேட்கும் வசதி, கருத்துக் கணிப்புகள் நடத்தும் வசதி மற்றும் ஸ்டிக்கர், நிழற்படம் மற்றும் காணொளிகள் இணைக்கும் வசதி போன்ற பலவேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தரமான கருத்துக்களை, உள்ளடக்கத்தைப் பயனாளிகள் பதியும் விதமாக தற்போது லிஸ்ட் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்கள் கருத்துகளை தொகுத்து பட்டியலாக பதிவிட முடியும்.

சில உதாரணங்கள்

1 ) நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்

2 ) புத்தாண்டில் நீங்கள் மேற்கொண்ட தீர்மானங்கள்

3 ) நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்

போன்றவற்றை இனி பட்டியலாக தயாரித்து பேஸ்புக்கில் ஒரு பதிவாக பதிவிடலாம். குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த வசதி உலகம் முழுக்க இருக்கும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமெரிக்காவில் உள்ள இருபத்து ஐந்து வயதிற்கும் குறைவான 2 . 8 மில்லியன் பயனாளிகளை 2017 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இழந்துள்ளது. இந்த ஆண்டு ( 2018 ) 2 . 1 பயனாளிகளை அந்த நிறுவனம் இழக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அதைத் தடுக்கும் விதத்தில் பேஸ்புக் நிறுவனம் இன்னும் நிறைய மேம்படுத்தல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...
இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமு... கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து ...
விருமாண்டி படத்திற்கும் பாக்ஸர் வடிவேலுவ... முதலில் பாக்ஸர் வடிவேலுவை பற்றி பார்த்து விடுவோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பாக்ஸர் வடிவேலு என்பவர் பெயர் அடிக்கடி பத்திரிக்கைகளில் வந்துள்ள...
நாம் உண்ணும் உணவின் வரலாறு – பகுதி... மிளகு பொங்கல், பெப்பர் சிக்கன், ரசம் , முட்டை வறுவல். இதில் எல்லாம் சேர்க்கப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருளை பற்றித்தான் தொடரின் இந்தப் பகுதியில் பார்...

Be the first to comment on "லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்"

Leave a comment

Your email address will not be published.


*