பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி பணபரிமாற்ற மோசடி செய்த ” சோட்டா ” நீரவ் மோடியை என்ன செய்ய போகிறது இந்திய அரசு?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி பணபரிமாற்ற மோசடி செய்த " சோட்டா " நீரவ் மோடியை என்ன செய்ய போகிறது இந்திய அரசு?

இந்திய வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு எஸ்கேப் ஆகி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இப்போது அந்த வரிசை நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி என்று பல தொழிலதிபர்களை இணைத்து நீண்ட சங்கிலியாக தொடர்கிறது.

நீரவ் மோடி யார்?

இந்தியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் 85 வது இடத்தில் உள்ளவர் தான் இந்த நீரவ் மோடி. பெல்ஜியத்தில் வளர்ந்து வார்டன் வணிகவியல் கல்வி மையத்தில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு உறவினரிடம் வைர நகை தொழில் நுணுக்கங்களை கற்று 2010ல் பயர்ஸ்டார் டயமண்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர். பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு பயணங்களில் நடக்கும் தொழில்துறையினர் மேம்பாட்டு குழுவில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்ட இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் தான் நீரவ் மோடி.

தென் மும்பையில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையிலிருந்து சக தொழிலதிபர்களால் சோட்டா என்று செல்லமாக அழைக்கப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி போலியான உறுதியளிப்புக் கடிதங்களைப் பெற்று இதன் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் கடன்பெற்று ரூ. 11,500  மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனால் பாரத ஸ்டேட் வங்கி, அலகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி போன்றவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் நீரவ் மோடி மீது கடந்த வியாழன் அன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை 35 இடங்களிலும் சனிக்கிழமை 21 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் 10 இடங்கள், டெல்லியில் 7 இடங்கள், கொல்கத்தா மற்றும்  மும்பையில் 5 இடங்கள், சண்டிகர், ஹைதராபாத் நகரங்களில் 4 இடங்கள், பாட்னா, லக்னோ ஆகிய நகரங்களில் 3 இடங்கள், அகமதாபாத்தில் 2 இடங்கள், சென்னை மற்றும் கவுகாத்தியில் ஒரு இடங்கள் என்று பல இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனைகள் நடந்து முடிந்தது. இந்த சோதனையின் முடிவில் 5674 கோடி ரூபாய் தங்கம், வைரம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி நீரவ் மோடியின் மனைவி, சகோதரர், அவருக்கு உதவிபுரிந்த வங்கி ஊழியர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு ஓட்டம்?

ஆனால் கடந்த மாதமே நீரவ் குடும்பம் சுவிட்சர்லாந்தில் குடியேறிவிட்டது. அவரது மனைவி அமி அமெரிக்க குடிமையுரிமையும் சகோதரர் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடியுரிமையும் பெற்றவர்கள். இவர்களை கண்காணிக்கப்படும் நபர்களாக சிபிஐ அறிவித்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்ய இன்டர்போலின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.

மோசடி எப்படி நடந்திருக்கலாம்?

இந்த மோசடி பற்றி பல வித கருத்துக்கள் நிலவினாலும் இது 2010 ம் ஆண்டிலிருந்து தான் நடந்திருக்க வேண்டுமென்றும் எல்ஓயூ எனப்படும் லெட்டர் ஆப் அண்டர்டேக்கிங் என்பதை அடிப்படையாக வைத்து ஸ்விப்ட் முறையிலும் சிபிஎஸ் எனப்படும் கோர் பேக்கிங் சிஸ்டம் முறையிலும் இந்த மோசடி நடந்திருக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ இவர்கள் போன்ற பெரும் முதலைகள் செய்யும் தவறுகள் எல்லாம் சாமான்ய மக்கள் தலையில் தான் விழுகிறது. இது போன்ற மோசடிகளை கட்டுப்படுத்த இந்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறியே!

விஜய் மல்லையா, நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி…, தொடரும்!

Related Articles

வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!... யாருக்கு இந்த படம்? ஓடி ஓடி உழைத்துவிட்டு அதற்குத்தகுந்த பலனை பெறாமல் காலங்காலமாக அறியாமையால் ஏமாந்துகொண்டு வறுமையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிரு...
நாடு முழுக்க நம்மாழ்வார் இயற்கை அங்காடி ... கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பற்றிக் கேட்கும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் கலைஞர் கருணாநிதி. காரணம் அவர் முதன்முதலில் குளித்தலை த...
குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும்... தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில்....
கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த ...

Be the first to comment on "பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி பணபரிமாற்ற மோசடி செய்த ” சோட்டா ” நீரவ் மோடியை என்ன செய்ய போகிறது இந்திய அரசு?"

Leave a comment

Your email address will not be published.


*