உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர் தற்கொலை முயற்சி

UP man attempts suicide after being forced to drink urine

ஒரு பெண்ணோடு முறையற்ற உறவு வைத்திருந்ததாகச் சந்தேகப்படும் இளைஞர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்பூர் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் அந்த இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

சஹாரான்பூர் பகுதியில் இருக்கும் இந்திரா நகர் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொடூர தண்டனையை அந்த இளைஞருக்கு வழங்கி இருக்கின்றனர். தற்கொலை முயற்சியை அடுத்து அந்த இளைஞர் அருகிலிருக்கும்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் அந்தப் பெண்ணுக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், அவரை நானோ என்னை அவரோ முன் பின் பார்த்தது கூட கிடையாது என்றும் தெரிவித்து இருக்கிறார். ‘என் வாழ்க்கை குறித்து எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடனடியாக காவல் துறை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவர் மேலும் தெவித்தார்.

காவல் துறையினர் விசாரணை                   

சஹாரான்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் பப்லு குமார இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் போது ‘ அந்தப் பகுதியின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியிடம் இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளச் சொல்லி உத்தரவு இடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Related Articles

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந... கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அற...
” கடவுள் ஒரு சில்றபையன் ” &#... எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.பசுபதி, சிங்கப் பெருமா...
96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது ... 96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த  ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ர...
இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...

Be the first to comment on "உத்தர பிரதேசத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர் தற்கொலை முயற்சி"

Leave a comment

Your email address will not be published.


*