பாஜகவை வீழ்த்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் – சொல்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும் , முன்னாள் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணியை தொடரவைக்கும் முயற்சியாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு கூடுதல் எண்ணிக்கையிலான இடங்களையும் கூட விட்டுத்தரத் தயார் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகள் அனைத்திலும் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளதையும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி இடையேயான இந்தக் கூட்டணியை சந்தேகத்துடனேயே அணுகுகிறது. அகிலேஷ் யாதவும், மாயாவாதியும் சண்டையிட்டுப் பிரிவார்கள் என்பதே பாஜகவின் கணிப்பாக இருக்கிறது.

உத்தரபிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரிய இந்தக் கூட்டணி குறித்துப் பேசும்போது ‘இது பிரச்சனைகள் அடிப்படையிலான ஒரு கூட்டணி அல்ல. அப்படி அமையாத எந்தவொரு கூட்டணியும் நிலைக்காது. கூடிய விரைவில், அதாவது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அகிலேஷ் யாதவும், மாயாவாதியும் சண்டையிட்டு பிரிவார்கள்’ என்றார்.

Related Articles

தமிழக மாணவர்கள் வெளி மாநிலம் சென்று தான்... இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். உச்ச நீதி மன்றமும் அதை உறுதிப்படு...
சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி̶... சற்றுப் பொறுமையாகப் படிக்கவும். எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் கொண்டுள்ள கதையை முதலில் இங்கு சுருக்கமாக காண்போம்.லஞ்சங்களும் அதிகா...
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இ... வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை ஆய்வாளர் அறிக்கை விடுத்து உள்ளார். ...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...

Be the first to comment on "பாஜகவை வீழ்த்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் – சொல்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்"

Leave a comment

Your email address will not be published.


*