புலியை விறகால் விரட்டி அடித்து மகளை காப்பாற்றிய தாய் – வால்பாறை மக்களின் கவலநிலை

தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை கவலைக்குரியது. வனவிலங்குகளின் தொல்லை அளவுக்கு அதிகமாகவே இருக்கும். சாதாரணமாக அவர்களால் பொதுவெளியில் நடந்து செல்ல முடியாத நிலை.

அது போல வால்பாறை அருகே ஒரு சம்பவம் நடந்து உள்ளது. வால்பாறையில் தேயிலை பறிக்கும் கூலி தொழில் செய்து வருபவர் முத்து மாரி. அவருடைய மகள் சத்யா ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் வழக்கம் போல வீட்டிற்கு அறுகே விளையாண்டுக் கொண்டிருக்க, அப்பகுதில் சுற்றித் திரியும் புலி ஒன்று அந்தச் சிறுமியை அடித்து இழுத்துச் செல்ல முயன்று இருக்க, பயத்தில் அந்தச் சிறுமி தன் அம்மாவை அழைத்து இருக்கிறாள். மகளின் சூழலை உணர்ந்த தாய் வேகமாக ஓடிச் சென்று அருகே கிடந்த விறகுக் கட்டையை எடுத்து அடித்திருக்கிறாள். அப்போதும் புலி குழந்தையை விட்டபாடில்லை. அதனை அடுத்து மீனாம்பாள் என்ற பக்கத்து வீட்டுப் பெண்மணி ஓடிவந்து இன்னொரு விறகுக் கட்டையை எடுத்து புலியை அடித்து விரட்டி இருக்கிறார்.

தற்போது சத்யா என்ற சிறுமி அருகே இருக்கும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சம்பவம் சத்யாவுக்கு மட்டும் நேர வில்லை. அங்கே இருக்கும் பல தொழிலாளிகளுக்கு இந்த நிலைமை நடந்து உள்ளது. அங்கே வசித்து வரும் மக்கள் அனைவரும் எப்போதும் பயத்துடனே வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது என்பதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலங்குகளின் நலன் பற்றிய அக்கறை

வன விலங்கு தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இருந்தும் பல விலங்குகள் கொல்லப் பட்டும் வனப்பகுதிகள் சூரையாடப் பட்டும் வருகிறது. அதனாலயே வனவிலங்குகள் அனைத்தும் பசிக்காக உணவு தேடி மக்கள் வசிப்பிடங்களில் வந்து அட்டகாசம் செய்வதுடன் மக்கள் உயிரையும் சில சமயங்களில் பறித்து விடுகிறது. மக்கள் போராட்டம் நடத்தி உயிரை இழந்த பிறகு  தான் நடவடிக்கை எடுப்பேன் என்று இல்லாமல் உடனே அரசு நடவடிக்கை எடுத்தால் பல உயிர்கள் தப்பும்.

Related Articles

தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் ... மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத...
“பிரபாகரனின் போஸ்ட்மார்டம்” புத்தகம் ஒரு... ஒருவரின் தற்கொலைக்குப் பின் என்னவெல்லாம் நடக்கும்?எழுதியவர் – மயிலன் ஜி சின்னப்பன் பதிப்பகம் - உயிர்மைமக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக "நான...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 2018 ஐப...  வரிசை எண் போட்டி எண் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொ...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... பஞ்ச தந்திரம்இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்கதை: கமல்வசனம்: கிரேசி மோகன்இசை: தேவாகதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமான...

Be the first to comment on "புலியை விறகால் விரட்டி அடித்து மகளை காப்பாற்றிய தாய் – வால்பாறை மக்களின் கவலநிலை"

Leave a comment

Your email address will not be published.


*