விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்சினை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவன் என்று சொன்னார். அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டால் படம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது. விஸ்வரூபம் மட்டும் அல்ல கமலின் பெரும்பாலான படங்களுக்கு இது போன்ற எதாவது ஒரு சர்ச்சைகள் கிளம்பி படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாளோ அல்லது படம் ஆகும் அன்றோ யாராவது வந்து முட்டுக்கட்டையாக நின்று பிரசர் ஏற்றிவிடுவார்கள்.

தற்போது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் பத்தாம் தேதி ரிலீஸ் என்று அனைத்தும் முடிவாகி விட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்துக்கு ஒரு புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.   ( கமல் படத்துக்கு சர்ச்சை வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவ்விதத்தில் பாபநாசம் எப்படியோ தப்பித்துவிட்டது ). ட்ரெயலரில் சில காட்சிகள் கொஞ்சம் ஆபாசமாக இருந்ததால் இது இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் இரண்டாம் பாகம் போல இருக்கு… நிச்சயம் படம் ஹிட்டு தான்… என்று பலர் கிண்டல் அடித்து வருகின்றன.

இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீப காலமாக கமலுக்கு மிகப் பிடித்த இசையமைப்பாளராக மாறிவிட்டார். பாபநாசம், தூங்காவனம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 என்று தற்போதைய படங்களுக்கு அவருடைய இசை தான். இது வரைக்கும் ஜிப்ரான் தனது பெயரை எம். ஜிப்ரான் என்று மட்டுமே படத்தில் இடம்பெறும்படி செய்திருந்தார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்துக்கு மட்டும் முகமது ஜிப்ரான் என்று போட்டிருந்தார். கமலை காலி செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த ஒரு காரணம் போதாதா… இதைப் பிடித்துக் கொண்டு மீண்டும் சர்ச்சையை உண்டாக்க முயல, இசையமைப்பாளர் ஜிப்ரானோ அதற்கு தொடக்கத்திலயே, ” விஸ்வரூபம் பட வேலைகளின் போது நான் நோன்பில் இருந்தேன்…  ஆத்மாத்மாக செய்த படம்… நானே விருப்பபட்டு தான் என் பெயரை அப்படி போடச் செய்தேன்… ” என்று பதில் கூறி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சர்ச்சைகள் இத்துடன் முடியப் போவது இல்லை. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது, ” இந்தப் படத்திற்காக என்ன பிரச்சினை வந்தாலும் அதை நான் எதிர்கொள்வேன்… இப்போது நான் நடிகன் மட்டும் அல்ல… அரசியல்வாதியும் கூட… ” என்று கமல் கூறியிருப்பதால் இன்னும் சில நாட்களில் பலத்த எதிர்ப்புகள் வந்தாலும் வரும்.

Related Articles

தத்தகிட தித்தோம் – உறியடி 2 விமர்ச... கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மூன்று வேலையில்லாத இளைஞர்கள் ஒரு பக்சான் என்ற கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள். அந்தக் கெமிக்கல் கம்பெனியில்...
நாம் உண்ணும் உணவின் வரலாறு – பகுதி... மிளகு பொங்கல், பெப்பர் சிக்கன், ரசம் , முட்டை வறுவல். இதில் எல்லாம் சேர்க்கப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருளை பற்றித்தான் தொடரின் இந்தப் பகுதியில் பார்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...
ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்... கடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ...

Be the first to comment on "விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்சினை!"

Leave a comment

Your email address will not be published.


*