கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரிப்பு போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தில் உள்ள அனைத்து வசனங்களையும் இங்கு பகிர்ந்துள்ளோம். இதில் உங்களுக்குப் பிடித்த வசனம் எது என்பதை கமண்ட் பண்ணுங்க…
- “என்ன அடிக்கறதுல அவங்களுக்கு என்ன பெருமை மாமா? அவன் என் தலையில செருப்பை வச்சி என்ன அடிச்சப்ப கூட வலிக்கல மாமா ; ஆனா, வேடிக்கை பாத்த யாருமே ஏன் இந்த புள்ளய அடிக்கறனு எதுவும் கேக்கல, ஏன் மாமா?”
- “அவனும் தானப்பா சண்டை போட்டான், போலீஸ் ஏம்பா அண்ணனை மட்டும் புடிச்சுட்டு போச்சு…”
- “புள்ளை உயிர் இல்லாம, வெறும் கவுரவத்த வச்சு என்ன செய்யுறதாம்..” (ஏன், ஊர்மக்கள் காலில் விழுந்தாய் என்பதற்கு தனுஷ் சொல்லும் பதில்).
- அவனுக நம்ம பயலுவ மானத்துக்காவும், உயிர்காகவும் தான் திருப்பி அடிச்சான்னு ஒத்துகிடவே மாட்டான்ங்களே…., திருடிடட்டான், கைய புடிச்சி இழுத்தான்னு தான கேஸ் குடுப்பானுவ?
- “காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!!!
- “படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத..”
- ஒரே மண்ணுல பொறந்து, ஒரே மொழியதான பேசுறோம், ஒன்னா வாழ முடியாதா?
- “இரண்டு வீடுகளுக்கு இடையேயான சண்டையை ஊர்ச் சண்டையாக மாற்றி விடாதீர்கள்”
- “பொண்டாட்டிய. பார்த்துகிடதுலதான் அம்மைய நீ எப்படி பாத்துக்குவன்னு இருக்கு”
- “நாய் போச்சே ன்னு அவன் வருத்த படுறான்…நாயோட போச்சே ன்னு நான் நினைக்கிறேன்”
- “ஆக்கத்தான் நாளாகும்…. அழிக்க
அஞ்சு நிமிஷம் தான் ஆகும்..” - “போட்டோ புடிச்சா ஆயுசு குறைஞ்சிடும் னு, ஒரு போட்டோ கூட எடுக்காம, இப்போ அவன் நினைப்பா ஒரு போட்டோ கூட இல்லையே… புள்ள முகத்த மறந்து கடந்து போற வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது..”
- “பகைய வளர்க்கறதவிட அத கடக்குறது தான் முக்கியம்…”
- “கூழ கும்புடு போட்டுட்டு திரிஞ்ச பசங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியமும் ரோசமும் வந்துச்சு…”
- “கூடவே வெச்சிருந்தாலும் முதலாளி என்ன எங்க வெச்சுருக்கான் ங்கிறது இப்ப தான் புரியுது”
- ‘காடு நமக்கு பழசு தான் – ஆனா, பண்ணிட்டு வந்துருக்கற காரியம் புதுசு!’
- ‘பிரச்சனைனா மட்டும் போராட்டம் பண்ணினா பத்தாது, போராட்டம்ன தொடர்ந்து இருக்கனும்’
Be the first to comment on "அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசனம் எது?"