பேட்ட விஸ்வாசத்துடன் வரேன்னு சொன்ன ராஜாவ பாத்திங்களா!

STR Movie to release with Petta and Viswasam for Pongal 2019!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் தயாராகி இருக்கும் படம் வந்தா ராஜா வா தான் வருவேன்!

இந்தப் படத்தைப் பொறுத்த வரை வழக்கத்திற்கு மாறான செயல்கள் நடக்கிறதோ? என வியக்க வைக்கிறது. ஒரே டேக் நடிகர் சிம்பு ஷூட்டிங்க்கு சரியாகச் சென்று வெகுவிரைவில் படத்தை முடித்துக் கொடுத்து முதல் ஆச்சர்யம். இன்னொன்று இயக்குனர் சுந்தர் சி தயாரித்த படங்கள் எதுவும் தாமதமானது இல்லை. சொன்னால் சொன்ன தேதிக்கு சரியாக களமிறங்கி வெற்றியா தோல்வியா என்பதை தைரியமாக சந்தித்து விடும்.

விஸ்வாஸம் படம் சரியாக பொங்கலுக்கு வருகிறது என்ற அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. அதை முன்னிட்டு முக்கியமான தியேட்டர்களை விஸ்வாஸம் கைப்பற்றிக் கொள்ள பேட்ட படமும் பொங்கலுக்கு வருகிறது என்ற அறிவிப்பு வந்தது. அஜித் படத்தைக் காட்டிலும் ரஜினி படம் அதிக தியேட்டர்களில் களமிறங்க வேண்டும் என்ற காரணத்தினால் மிச்ச தியேட்டர்களையும் அது கை பற்றிக் கொண்டது.

முன்னொரு காலத்தில் ஒவ்வொரு வருட தீபாவளியின் போதும் சிம்பு படம் ரிலீசாகும். இன்று அப்படியே மாறி உள்ளது. சுந்தர் சி எப்படியும் படம் இயக்கும் திறமை உள்ளவர் என்பதால் ஷூட்டிங் வேலைகள் சட்டென முடிந்த பிறகும் ரிலீசுக்கு தாமதிப்பது ஏனோ?

திரையரங்க உரிமையாளர்களோ ரஜினி, அஜித், படத்துடன் சிம்பு படமும் ரிலீஸாக வேண்டும், அப்போதுதான் திரையரங்கில் ஓரளவுக்காவது கூட்டத்தை காண முடியும் என்கின்றனர். திடீரென்று வந்தாலும் வந்துவிடுவார் ராஜா!

Related Articles

பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...
சன்ரைர்ஸ் ஹைதராபாத் (SRH) ஐபிஎல் 2018 அண...  வரிசை எண் போட்டி எண் தேதி சன்ரைர்ஸ் ஹைதராபாத் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதர...
சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாக இர... பிரபல தமிழ் யூடுப் சேனலான Blacksheep குடும்பம் நாங்கள் அடுத்தகட்ட நிலையை அடையப் போகிறோம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர். இவ்வ...
சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சன... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை தொடர்ந்து ஜீவா மற்றும் ஹன்சிகாவை வைத்து போக்கிரி ராஜ...

Be the first to comment on "பேட்ட விஸ்வாசத்துடன் வரேன்னு சொன்ன ராஜாவ பாத்திங்களா!"

Leave a comment

Your email address will not be published.


*