ரஜினி படம் என்றாலும் மாஸ் காட்டப்போவது விஜய்சேதுபதி தான்! – பேட்ட பராக்!

Vijay Sethupathi will steal the show in Petta!

வருகிற பொங்கலுக்கு களம் இறங்க இருக்கும் மிக முக்கியமான படம் கார்த்திக் சுப்புராஜின் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என்று கார்த்திக் சுப்புராஜின் கேங் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படம் ஆரம்பித்ததே தெரியவில்லை அதற்குள் சடசடவென ஷூட்டிங்கை முடித்து ரிலீசுக்கு கொண்டுவந்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி படங்களிலயே மிகக் குறுகிய காலத்தில் தயாரான படம் என்றால் பேட்ட படத்தை குறிப்பிடலாம். இனி அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவார் கார்த்திக் சுப்புராஜ் என எதிர்பார்க்கப் படுகிறது.

என்ன தான் தலைவர் தலைவர் என கொண்டாடினாலும் அவருக்கான மவுசு இன்று குறைந்து விட்டது என்பதே உண்மை. சர்கார் படம் ஏற்படுத்திய அதிர்வுகளை கூட ரஜினியின் 2.O படம் ஏற்படுத்தவில்லை. சர்கார் செய்த டீசர் சாதனையைக் கூட முறியடிக்கவில்லை. அப்படி இருக்கையில் பேட்ட படம் எவ்வளவு பெரிய வெற்றி படமாக இருந்திடப் போகுது? என்று கேள்விகள் எழுகிறது.

காலா, கபாலி படத்தின் சாயல்கள் நிறைய இருப்பது போல தெரிகிறது என்கின்றனர் சிலர். காலாவிலும் கபாலியிலும் வயதான ரஜினியை காண முடிந்தது. அனிருத் இசையும் கத்தி அளவுக்கு கூட இல்லை. வழக்கம் போல பல பாடல்களின் இசையை திருப்பி அடித்திருக்கிறார் என கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் ரஜினி படம் இனி டவுட்டு தான் என்ற நிலைமையில் உள்ளது. அரசியலுக்கு வந்ததன் விளைவு சினிமாவில் சறுக்கல்களை சந்திக்க தொடங்கிவிட்டார் ரஜினி.

ரஜினிக்காக படம் ஓடுதோ இல்லையோ விஜய் சேதுபதிக்காக நிச்சயம் இந்தப் படம் ஓடும் என்கின்றனர் சிலர். இது ஓரளவுக்கு உண்மையும் கூட.

கடந்த 2018ம் ஆண்டில் ஜூங்கா, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்று மூன்று ப்ளாப் படங்கள் கொடுத்திருந்தாலும் விஜய் சேதுபுதியின் படத்திற்கான மாஸ் ஓப்பனிங் குறையவில்லை.

பேட்ட படத்தின் ஆடியோ லான்ச்சில் ” பெரிய மனுசன எதிர்த்தா தான் நாம பெரிய மனுசனாக முடியும்… ” என்றார். ஆனால் ரஜினிக்கு சமமான நடிப்பை விஜய்சேதுபதி கொடுத்திருக்கிறாரா? அல்லது ரஜினி ரஜினி என்று விவேகம் படத்தைப் போல அவரையை தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. வில்லனை கண்டு நாயகன் அஞ்ச வேண்டுமே தவிர, நாயகனை வில்லன் தூக்கி வைத்துக் கொண்டாடக் கூடாது. வில்லனே நாயகனை தூக்கி வைத்துக் கொண்டாடிய படங்கள் எல்லாம் தோல்வியை தான் சந்தித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

Related Articles

கொல்லிமலையில் விற்பனையாகும் வயாகரா கிழங்... ராஜா திருவேங்கடம் எழுதிய கொல்லிமலை சித்தர்கள் புத்தகம் ஒரு பார்வை! கொள்ளை அழகு கொல்லிமலை, 2. வல்வில் ஓரி, 3. அறப்பளீஸ்வரர் கோயில், 4. ஆகாய கங்க...
சுதந்திர போராட்ட தியாகி பிச்சை எடுக்கிறா... ராம், மிஷ்கின், பூர்ணிமா மூவரும் அறிமுகக்காட்சியிலயே சிக்சர் அடிக்கின்றனர். எப்போதும் பொய்யும் எகத்தாளமும் பேசித்திரியும் பிச்சையாக ராம். ஒரு காமெடி ப...
போகும் இடமெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடு... இந்திய பிரதமர் வாரம் ஒரு நாடு என்று இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வசித்து வருகிறார். அந்நாட்டு பிரதமர்களுடன், அதிபர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் ப...
ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தி... ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.ஆந்திர முதல்வராக இருந்த...

Be the first to comment on "ரஜினி படம் என்றாலும் மாஸ் காட்டப்போவது விஜய்சேதுபதி தான்! – பேட்ட பராக்!"

Leave a comment

Your email address will not be published.


*