இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் அதிரடி பதில்!

Seaman's Action Response to Those Who Are Right Free!

தி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த
பொருட்கள் என்னென்ன என பார்ப்போம்.

மதிய உணவுத் திட்டம்:

ஏழைகள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கிறார்கள் இதில் எங்கு போய் அவர்கள் தங்கள்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போகிறார்கள் என்று காமராசர் பள்ளிகளில் இலவச மதிய
உணவுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த இவலச மதிய உணவுத் திட்டம் பலருடைய
வாழ்க்கையை மேம்படுத்தியது. அதன் பிறகு வந்த ஆட்சிகள் இலவசங்களை வாரி இறைத்தது.
அப்படிப்பட்ட இலவசங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதா? முதலில் இந்த நேரத்தில்
ஓட்டுக்கு வழங்கும் இலவசப் பொருட்கள் வாங்குவது சரியா? தவறா? என்று பேச வைத்த சர்கார்
குழுவினருக்கு நன்றி.

மாணவ மாணவிகளுக்கு:

தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கிய காலம். தனியார்  பள்ளிகளே
பயணத்திற்கு என்று பேருந்து வசதி செய்து தந்து அதற்கென்று தனியான கட்டணம் வசூலித்தது.
அந்த நிலையில் இலவச பஸ்பாஸ் திட்டம் வழங்கியது அரசு. அரசுப் பேருந்துகளில் மட்டும்
மாணவ மாணவிகள் இலவசமாக பயணக்கலாம் என்ற அறிவிப்பு பலருக்கு பள்ளி கல்லூரி செல்ல
உத்வேகம் அளித்தது.

அடுத்ததாக உணவு, உடை, புத்தகங்கள் போன்றவற்றை இலவசமாக வழங்கத் தொடங்கியதோடு
மட்டுமில்லாமல் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி ஒன்றையும் இலவசமாகத் தந்தது. பேருந்தில் வயதுக்கு வந்த அரசுப்பள்ளி மாணவிகள் பயணிக்கும் போது அவர்களை இளக்கார தொனியில் பார்த்து பழித்துப் பேசி பாலியல் தொல்லை தரும் குடிகாரர்களிடம் இருந்து ஏராளமான மாணவிகள் தப்பித்து சுயமாக சைக்கிளை மிதித்து பள்ளி சென்று வந்தனர்.

அதை அடுத்து மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கியது அரசு. கம்யூட்டர்
என்றாலே என்ன என்று தெரியாத அப்பாவி மக்களின் வாழ்க்கையை எதோ ஓரளவுக்கு இந்த
கணிணி அறிவு வழங்கியது என்று சொல்லலாம். சாதாரண டிகிரி முடித்த இளைஞர் இளைஞிகள்
எதோ ஒரு கடையில் பில் போடும் வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள, சாதாரண மெயில்
அனுப்புவதற்கு கூட கடை கடையாக ஏறி இறங்கி கண்ணு முன்னு தெரியாமல் காசை வாரி

இறைத்தவர்களின் அப்பாவிகளுக்கு  இந்த இலவச மடிக்கணிணியால் கிடைத்த அறிவு
உண்மையிலயே மிகப்பெரிய அளவில் உபயோகமாக இருந்து உள்ளது.

பட்டம் படித்த பெண்கள் பேருந்துகளில் பாலியல் தொல்லை அனுபவிக்காமல் சுதந்திரமாக
பயணிக்க இருசக்கர வாகனம் தந்தது அரசு. இது உண்மையிலயே பாராட்டத்தக்க விஷியம்.
இயக்குனர் ராம் கூட ஒரு நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஸ்கூட்டி பாதி விலையில் அரசே
வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என குறிப்பிட்டு இருக்கிறார். அந்நியன், 7ஜி
ரெயின் போ காலணி, பொல்லாதவன் என்று பல திரைப்படங்களில் கல்லூரி மற்றும் வேலைக்குப்
போகும் பெண்கள் அடையும் பாலியல் தொந்தரவை பற்றி பேசி இருக்கிறார்கள்.

இப்படி வழங்கிய இலவசங்கள், அரசு வேலை வாய்ப்பில் வழங்கிய சலுகைகள் போன்றவை
எல்லாம் பெரும்பாலும் பெண்களின் சுதந்திரத் தன்மையை அதிகரிக்கும் நோக்கத்தோடு
தரப்பட்டவை என ஒப்புக் கொள்ளலாம்.

அடுத்ததாக கல்வி உதவித்தொகை, விவசாயிகளின் மின்சார கட்டணம் ரத்து, பொங்கலுக்கு
இலவச உணவுப் பொருள்கள், அளவான இலவச ரேசன் அரிசி, மருத்துவ காப்பீடு திட்டம்,
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, இலவச வாகனம், குடும்ப பெண்களுக்கு இலவச
மிக்ஸி, இலவச மின் விசிறி, கிரைண்டர், கேஸ் அடுப்பு, வேட்டி சேலை, பத்தாம் வகுப்பு,
பட்டதாரி பெண்கள் என்று படித்த பெண்களின் திருமண உதவித் தொகை, மற்றும் பவுண்
இலவசம் என்று ஏகப்பட்ட இலவசங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இத்தனை இலவசங்கள் தந்ததால் மட்டும் தமிழர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துவிட்டதா?
இத்தனை இலவசங்களில் எத்தனை இலவச பொருட்கள் முதலில் நன்கு இயங்குகிறது?
முக்கால்வாசி வீடுகளில் வாங்கிய நான்கு நாட்களில் பழுதடைந்து வீணாகிப் போகிறது. வீடு
வீடாக குண்டாவை தூக்கிக்கொண்டு உங்க வீட்டு மிக்சில சட்னி அரைக்கிறேன், மாவு
அரைக்கிறேன், டிவி பாக்குறேன் என்று அடுத்த வீட்டு வாசல் ஏறிய பெண்களால் நான்கு நாள்
மிக்ஸி, கிரைண்டர், டிவியை சொந்தமாக  உபயோகித்து பழகியவர்களல்  இவைகள் பழுதான
பிறகு மீண்டும் அடுத்த வீட்டு வாசலை மிதிக்க தோன்றுவது இல்லை. இதற்கு அடுத்து சீட்டுக்குப்
பணம் போட்டு, டுயூ கட்டி என்று தவணை முறைகளில் வீடுகளில் பொருள் வாங்குகிறார்கள்.

மருத்துவ காப்பீடு திட்டம் முறையாக இயங்கி வருகிறதா? எத்தனை இலவச டிவிகள், இலவச
மடிக்கணிணிகள் பழுதடைந்து எதற்கும் உபயோகம் இல்லாமல் போயிருக்கிறது. இவர்கள்
அத்தனை பேரும் கடனாளி ஆனது தான் மிச்சம். இன்னும் சில வீடுகளில் அரசு வழங்கிய டிவி,
மிக்ஸி, கிரைண்டர் போன்றவை நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவை கௌரவ
குறைச்சலாக கருதப்பட்டு மூலையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தேவை எது? – சீமான் ஆவேசம் :

இந்த அளவுக்கு மக்களை கையேந்த வைத்திருக்கிறது அரசு. இதற்கு காரணம் மக்களின் வறுமை.
வறுமைக்கான காரணம் அறியாமை. இந்த அறியாமையின் காரணமாக எத்தனை இடங்களில்
தெண்டச் செலவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவமனைக்குள் நுழைந்து வெளியே வரும் போது ஓட்டாண்டியாக ஆனவர்கள் ஏராளம். ஆக இந்த அறியாமையை போக்கினாலே போதும் மற்ற இலவசங்கள் தேவை இல்லாமல் போகிறது.

அறியாமையை போக்க சிறந்த வழி அனைவருக்கும் சமமான இலவச கல்வி. ஆனால் இங்கு
கல்வியை மருத்துவத்தை வியாபாரமாக்கி விட்டு நீ கடைசி வரைக்கும் அடிமையாவே இரு என்று
சாராயத்தை ஊத்திக் கொடுத்து தேர்தலின் போது ஐயாயிரம் பணத்தையும், பிரியாணி
பொட்டலத்தையும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் இருநூறு ரூபாய் கைப்பணமும் கொடுத்து செம்மறி ஆடுகளாகவே தான வைத்திருக்கிறார்கள்.

ஆக இலவசங்களை வாங்கிய மக்களில் மிக குறைவானவர்களின் வாழ்க்கை தரமே எதோ
ஓரளவுக்கு உயர்ந்து உள்ளது. மற்றவர்கள் கதி என்ன? நீங்கள் அதை தந்தோம் இதை தந்தோம்
என்று வாக்கு வங்கிக்காக மக்கள் வரிப்பணத்தில் தரமற்ற பொருட்களை வழங்கிவிட்டு வாழ்க்கை தரத்தை உயர்த்தினோம் என்று சொல்வது ஏன்?

கத்தி படத்தின் போது ஏ. ஆர். முருகதாசுக்கு துணை நின்ற சீமான் மீண்டும் சர்கார் படத்திற்காக
ஏ. ஆர். முருகதாசுக்காக துணை நிற்கிறார். இலவசம் சரியானது தானா? என்பதை பற்றி
சீமானைப் போல மற்ற அரசியல் தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள் பேசாமல் இருப்பது ஏன்
என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

இலவசம் சரியானது என்று கூறுபவர்கள் விஷம் குடித்து சாகுங்கள் என்று சீமான் கூறி இருப்பது
குறிப்பிடத் தக்கது. ஆட்சியர் வெ. இறையன்பு போன்றவர்கள் உட்பட பல நேர்மையான
அதிகாரிகள் இலவசம் தவறானது என்றே குறிப்பிட்டு உள்ளனர். இலவசம் சரியானது என்று
ஒப்புக்கொள்பவர்கள் கடைசி வரைக்கும் அடிமையாகவே வாழ விரும்புபவர்கள் என்று விஜய்
ரசிகர்கள் ஒரு பக்கம் முட்டுக் கொடுக்க, இவனுங்களுக்கு வேற என்ன வேல… அவன் அவன்
சம்பாதிக்குற தான் பாக்குறானுங்க. அரசியல்வாதிங்க மொத்தமா சுருட்டி தானே வச்சுக்காம அப்ப அப்ப எதோ தூக்கி போட்றானேனு சந்தோசப்பட்டு வாங்கி வச்சிக்குவோம் என்கின்றனர் குடும்ப பெண்மணிகள்.

இலவசம் சரி என்று இவ்வளவு நாட்களாக பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்க வில்லை.
கூறியது விஜய், ஏ.ஆர். முருகதாஸ், ஜெயமோகன் கூட்டணி என்பதால் இவ்வளவு எதிர்ப்பு.
இவ்வளவு நாள் இலவசம் தவறானது என்றவர்கள் கூட இந்தக் கூட்டணியில் மேல் உள்ள
காழ்ப்புணர்ச்சியால் இலவசம் சரி என மாற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் கொஞ்ச
நாட்களில் ஓட்டுக்குப் பணம் வாங்குவதும் சரி தான், அந்தப் பணம் இல்லாத மக்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருந்தது, இந்தப் பணத்தால் தான் நான் இவ்வளவு உயரத்திற்கு வந்து உள்ளேன் என்று கூறினாலும் கூறலாம்.

Related Articles

நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! ̵... செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே... இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிரு...
ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன... சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆ...
உங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாக இரு... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் " ஒரு நாடு எப்படி இருக்குங்கறத ரோட வச்சே சொல்லிடலாம் "...
சுதந்திர போராட்ட தியாகி பிச்சை எடுக்கிறா... ராம், மிஷ்கின், பூர்ணிமா மூவரும் அறிமுகக்காட்சியிலயே சிக்சர் அடிக்கின்றனர். எப்போதும் பொய்யும் எகத்தாளமும் பேசித்திரியும் பிச்சையாக ராம். ஒரு காமெடி ப...

Be the first to comment on "இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் அதிரடி பதில்!"

Leave a comment

Your email address will not be published.


*