சிம்டாங்காரன் பாடல் வரிகளின் அர்த்தம் இதோ!

Simtaangaran Lyric video song sarkar vijay

கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வரும் வார்த்தை சிம்டாங்காரன். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையில் பம்பா பாக்கியா, விபின் அனேஜா மற்றும்

அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். இணையத்தை கலக்கி வரும் இந்தப் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த போதிலும் அதன் அர்த்தம் புரியவில்லை என்று சிலர் விமர்சித்தனர்.

முழுக்க முழுக்க சென்னை வார்த்தைகளால் நிரப்பபட்ட இந்தப் பாடல்வரிகள் எல்லோருக்கும் புரியும்படியாக இப்போது அதன் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தத்தை வைத்து பார்க்கும் போது இது விஜய்க்கே உண்டான செம மாஸான பாடல் என்பது மட்டும் புரிகிறது. இதன் அர்த்தம் இதோ!

  1. பல்டி பாக்குற

டர்ல வுடனும் பல்து = பல்டி அடிக்கறதைப்  பார்த்து மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்

  1. வோர்ல்டு மொத்தமும்

அரள வுடனும் பிஸ்து = உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி

  1. பிசுறு கெளப்பி

பெர்ள வுடனும் பல்து = பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லோரையும் பயத்துல பிரளவிடனும்

  1. ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ…. தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா = ஏய் ஒழுங்கா ஓரிடத்துல நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்

உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்

போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்

  1. சிம்டான்காரன்

எங்கனா நீ சீரன்

நிண்டேன் பாரேன் முஷ்டு

அப்டிகா போறேன்

ஓ..ஓ..ஓ..ஓ  = கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்

என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்

  1.  சிம்டான்காரன்

சில்பினுக்கா போறேன்

பக்கில போடேன்

விருந்து வைக்கபோறேன்

ஓ..ஓ..ஓ..ஓ = கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.

அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.

இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!

  1. அந்தரு பண்ணிகினா தா…..

இந்தா நா… தா ….

ஓ..ஓ..ஓ..ஓ = அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்

  1. குபீலு பிஸ்து பல்து = குபீர்னு பிஸ்தாவா பல்டியப்பேன் ஜாக்கிரதை!
  2. விக்கலு விக்கலு

ஹே தொட்டனா தொட்டனா

விக்கலு விக்கலு

ஓ ஓ ஓ ஓ ஓ…. = விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்

  1. கொக்கலங்க கொக்கலங்க

கொக்கலங்க குபீலு

ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா

டம்மாலு = ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.  ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் ஃபால்.

  1. நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல

அல்லா ஜோரும் பேட்டைல

சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு =  நாம பிடிச்சிருக்குற கோட்டையில எல்லாரும் சிரிச்சுக்கிட்டு இருக்கோம் ஜாலியா.

  1. பிசுறு கெளப்பு

பிசுறு கெளப்பு

கொக்கலங்க கொக்கலங்க

கொக்கலங்க குத்த போடு = சுணுங்காம குத்தாட்டம் போடு சுணுங்காம குத்தாட்டம் போடு!

Related Articles

உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரண... விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். "அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்" என்பது தான் ...
பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. ...
மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளப... (ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார...
நன்றேது? தீதேது? புத்தகம் ஒரு பார்வை! &#... முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் அகரமுதல்வன். கடங...

Be the first to comment on "சிம்டாங்காரன் பாடல் வரிகளின் அர்த்தம் இதோ!"

Leave a comment

Your email address will not be published.


*