இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து நெட்டிசன்கள்!

Asia Cup 2018 - india vs afghanistan

ஈசியா ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கையோடு தூங்கப் போனோம்!கடைசில இப்படி ஆகிடுச்சே!

2018 ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றின் நேற்றைய ( செப்டம்பர் 25) ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இறுதிப்போட்டிக்கு  இந்திய அணி ஏற்கனவே தேர்வு பெற்றுவிட்டதால் புவனேஷ் குமார், பும்ரா, ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா, சாஹல் ஆகியோருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதையொட்டி தோனி கேப்டனாக அணியை வழி நடத்தினார். இது அவர் கேப்டனாக களம் இறங்கும் 200 வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தலைமையில் ஆட்டம் என்பதால் ஆட்டத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. என் தலைவன் வந்துண்டான்டா… இனி பொறி பறக்கப் போவுது என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆட்டத்தைக் காணத் தொடங்கினர். வழக்கம்போல இந்த போட்டி ஸ்டார் சேனல் குரூப்பின் அதிகாரப்பூர்வ செயலியான ஹாட் ஸ்டாரிலும் நேரடி ஒளிபரப்பட்டது. தோனி தலைமையில் ஆட்டம் என்பதால் இதனை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் பார்த்தனர்.

இரு அணிகளில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. எதிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷசாத் 124 (116) ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்க, அதைத் தொடர்ந்து 6 விக்கெட்டிற்குப் பிறகு வந்த நபி 64 (56) ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நஜிபுல்லா 20 (20),  இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான்  அணி 252 ரன்கள் எடுத்திருக்க, இதை தொடர்ந்து இந்தியா 253 என்ற இலக்கை சேஸ் செய்யும் முனைப்பில் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி தரப்பில் லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இருவரும் அதிரடியாக ஆட்டம் ஆடி 15 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 100 ரன்களை கடந்தனர். தலா 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்த ராயுடுவும், 60 ரன்களுடன் லோகேஷ் ராகுலும் அவுட்டாகி வெளியறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, மணிஷ் பாண்டே 8 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் எடுத்து வெளியேறினர். 

அவர்களை அடுத்து களம் இறங்க வந்த கேதர் ஜாதவ் 19 , தீபக் சஹார் 12 , குல்தீப் யாதவ் 9 ரன்களிலும், சித்தார்த் கவுல் ரன் எதுவுமில்லாமல் ஆட்டமிழந்தனர். இந்தியாவும் 252 ரன்கள் எடுத்திருந்த பரபரப்பான சூழ்நிலையில் 2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜடேஜா அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் நஜிபுல்லா. ஜடேஜா 25 ரன்கள் எடுத்திருந்தார். 49.5 ஓவர்களில் 252 ரன்களுடன் இந்தியா ஆல் அவுட்டானது. ஆப்கன் தரப்பில் அப்தாப் ஆலம், நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

696 நாட்களுக்கு பிறகு தோனி தலைமையிலான ஒருநாள் தொடர் “டை”யில் முடிவடைந்தது, அவரின் ரசிகர்களிடையே சோகத்தையும் எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்று நம்பிக்கையுடன் உறங்கச் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் தந்து உள்ளது.  

ஆசியக் கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் (செப்டம்பர் 26) பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் அணி 28 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவுடன் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும் தீயணை... சேத் ரான்ஸ், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒன்டே மேட்சுகள் மற்றும் நான்கு டி20 மேட்சுகள் விளையாடி வருபவர். இவர் நடக்க இருந்த பெரிய தீ விபத்த...
நம் நாட்டில் நடைபெறும் மணமுறிவுகளின் எண்... சகிப்புத்தன்மை ஏன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்ற கேள்விகள் எழுந்து கொண்டே செல்கிறது. இப்படி மணமுறிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு...
சட்டப்பேரவையில் தனிஒருவனாக தினகரன்! R... 2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொ...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...

Be the first to comment on "இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*