நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங்கனையின் தற்போதைய நிலைமை!

Kalaimani, a marathoner who has achieved 4 times gold

தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இது போன்ற உலக அளவிலான போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டிய சலுகையை அலட்சியம் செய்து வருகிறது அரசு. அப்படி இருக்கையில் மாநில அளவில் நடந்த மாரத்தான் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் வாங்கிய கலியமணிக்கு அரசு சார்பில் என்ன ஊக்கம் கிடைத்திட போகிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த கலியமணி,

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகம். பள்ளிப் படிப்பு காலத்தில் தடகளம், கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் மிகுந்த இவர், பிற்காலத்தில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவ்வாறு 41 கி.மீ மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் நான்கு முறை மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதன் பிறகு அவருடைய குடும்பச் சுமை காரணமாக தேநீர் கடை நடத்தி வருகிறார். அவரால் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அன்றாடம் இரண்டு கிலோ மீட்டராவது ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

தற்போது இவர் நடத்தி வரும் டீக்கடை தொடங்குவதற்கு முன்பணம் வாங்க பல வங்கிகளில் தான் வென்ற தங்கப் பதக்கங்களை காட்டி லோன் கேட்க அத்தனை இடங்களிலும் கலியமணிக்கு
நிராகரிப்பு தான். கலியமணி மட்டும் அல்ல, இவரைப் போல விளையாட்டுத் துறையில் சாதிக்கும் திறனுடைய பல வீரர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விட்டனர். அவர்களுக்கு எல்லாம் சரியான ஊக்குவிப்பு இல்லாததே காரணம்.

கலியமணியைப் பார்க்கும் போது, துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் வெளிவந்த எதிர் நீச்சல் படத்தின் வள்ளி கதாபாத்திரம் தான் நியாபகத்துக்கு வருகிறது. வள்ளிக்கு நேர்ந்தது தான் கலியமணிக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் வள்ளி ஊதுபத்தி விற்றுக் கொண்டிருந்தார். இங்கு கலியமணி மாநில அளவில் மட்டும் வெற்றி பெற்றதால் டீக்கடை நடத்தி வருகிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரை விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் கிரிக்கெட்டுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டில இருப்பவர்களோ பிராமிண்கள். ஆக மொத்தத்தில் அந்தப் பணமெல்லாம் மேல் தட்டு மக்களுக்கு உள்ளயே ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் மற்ற விளையாட்டுக்களில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் நிலை என்ன? அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கிறதா இல்லையா? முறையான பயிற்சியாளர் இருக்கிறாரா இல்லையா? அந்தப் பயிற்சியாளருக்கு நல்ல சம்பளம் தருகிறார்களா இல்லையா?

ஒலிம்பிக் போட்டியில் காலங்காலமாக இந்தியா இரண்டு, மூன்று ஒற்றைப் படையில் மட்டுமே பதக்கங்களை வென்று வந்துள்ளது. அதற்குக் காரணம், ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஆதரவு இல்லாதது. ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு தேர்வு பெற பல சர்வதேச போட்டிகளில் வென்று நல்ல ரேங்கில் இருக்க வேண்டும். அப்படி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான பயணச் செலவுகள், பயிற்சி செலவுகள் போன்றவை அரசிடமிருந்து முறையாகக் கிடைப்பதில்லை. www.edudharma.com தளத்தினை சென்று பார்த்தால் தெரியும், விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு முறையான ஆதரவு அரசிடமிருந்து கிடைக்கிறதா என்று… கலியமணி போல பல திறமைசாலிகள் காணா

Related Articles

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில... எல்லோருடைய வாழ்விலும் கேள்வி என்பது மிக முக்கியமானது. அதனால் நல்லா இருக்கியா, வீட்டுல என்ன பண்ணுறாங்க போன்ற அடிப்படை கேள்விகளை நாம் நம்முடைய நண்பர்களி...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...
சூர்யாவின் கடிதத்துக்கு நெட்டிசன்கள் சொன... சமீபத்தில் அமேசான் பிரைமில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவான "ஜெய் பீம்" படம் வெளியானது....
பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே படிக்... அம்மா கணக்கு படத்தில் புட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு மாணவன் இருப்பான். அந்த மாணவனை நியாபகம் இருக்கிறதா? அந்த மாணவனை பற்றி பார்ப்போம்.  ஆசிரியர் போ...

Be the first to comment on "நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங்கனையின் தற்போதைய நிலைமை!"

Leave a comment

Your email address will not be published.


*