உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்டுகிறது இந்திய அரசு

Will build 3 dams to divert water flowing to pak : water resources minister

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ்
நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்தியாவின் நீர் பங்கும் பாகிஸ்தானுக்கே சென்று சேர்வதாக அமைச்சர் நிதின் கட்கரி
தெரிவித்துள்ளார்.

விவசாய தலைமை கூட்டம் 2018

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற விவசாய தலைமை கூட்டம் 2018 நிகழ்வில் கலந்து கொண்டு மத்திய போக்குவரத்து மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அப்போது அவர் ‘மூன்று ஆறுகளில் இருந்தும் பயன்படுத்தப்படாத நீர் பாகிஸ்தானுக்கு
உபரியாகச் சென்று கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க உத்தரகாண்டில் மூன்று அணைகள்
புதியதாக மத்திய அரசால் கட்டப்பட இருக்கிறது. அப்படிச் சேகரிக்கப்படும் நீரானது பஞ்சாப்,
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்
பயன்படும்’ என்றார்.

நீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டங்கள்

‘இந்திய பிரிவினையின் போது இந்தியாவுக்கு மூன்று ஆறுகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவின்
பங்கை நம்மால் முறையாகப் பயன்படுத்த முடிவதில்லை. பயன்படுத்த முடியாத வகையில்
தண்ணீர் திசை திரும்பி மீண்டும் பாகிஸ்தானுக்கே சென்று விடுகிறது. மத்திய அரசு தற்போது
அதைத் தடுத்து நிறுத்தி இந்திய விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில் நீர் வளங்களைக்
கூட்டும் வகையிலான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே போல மழை நீர்
கடலோடு கலந்து வீணாவதைத் தடுக்கும் விதத்திலும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன’ என்று கூட்டத்தில் பேசும் போது அமைச்சர் தெரிவித்தார்.

ஹரியானா விவசாய துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தங்கர் பேசுகையில் ‘இண்டஸ் நீர் ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே பிரதமர் பேசியிருந்தார். தற்போது துறை சார்ந்த அமைச்சரும் கூட
பேசியிருப்பது அணைகள் கட்டும் திட்டம் தற்போது செயல் வடிவம் பெறும் நிலைக்கு
வந்திருப்பதையே காட்டுகிறது’என்றார்.

Related Articles

மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்... இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் ப...
நம்மோட திறமைகளை நாம காட்டிட்டே இருக்கணும... மலையாளத்தில் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு பதிப...
12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை க... முந்தைய தமிழ் சினிமாக்களில் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்ற வியாதிகளை காட்டி இருப்பார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த விஷாலின்...

Be the first to comment on "உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்டுகிறது இந்திய அரசு"

Leave a comment

Your email address will not be published.


*