அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! – செக்ஸ் இல்லா காதல் தப்பா? விலைமாதுக்களை கொண்டாடிய தமிழ்சினிமா!

Different characters or unwanted scenes showed by tamil cinema

அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்!

என்ன கருமன்டா இது என்று முகம் சுளிக்கும் வகையில் அபத்தமான காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. அந்த வகையில் காஞ்சனா படத்தில் வரும் ஒரு காட்சி முதலில் எனக்கு மிக அபத்தமாக தெரிந்தது. 

காஞ்சனா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லட்சுமி ராய். அவர் அந்தப் படத்தில் அரைகுறை ஆடையுடன் தான் பெரும்பாலும் சுற்றுவார். அப்படி ஒருமுறை லட்சுமி ராய் நீச்சல் உடையில் வர அதை லாரன்ஸ் ரசிப்பார். அதை பார்த்துக் கொண்டே இருக்கும் கோவை சரளா, “மகனே எனக்கு ஸ்விம்மிங் டிரெஸ் போட்டா எப்படி இருக்கும்… அப்டியே என்னையும் அந்த ட்ரெஸ்ல கொஞ்சம் கற்பனை பண்ணி பாரு…” என்று லாரன்ஸிடம் சொல்வார். லாரன்சும் அதை கற்பனை செய்து பார்ப்பார். இந்தப் படம் ரிலீசான சமயத்தில் என் தமிழாசிரியர் இந்தக் காட்சியை குறிப்பிட்டு இதுபோன்றதொரு அபத்தமான காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை மிக மோசமான படம் இது என்று விமர்சித்தார். அவர் விமர்சித்தது சரி என்று எனக்கு அப்போது தோன்றியதால் நானும் அந்தப் படத்தை பிடிக்கவில்லை என்று கூறி வந்தேன். 

ஆனால் இப்போது எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது, ஏன் ஒரு பெண் இளம் வயதில் தான் பிகினி அணிய வேண்டுமா? குழந்தை பெற்று தாயான பிறகு மகன் முன்னே பிகினி அணிந்து செல்வது அவ்வளவு பெரிய குற்றமா? என கேள்விகள் எழுகிறது. 

நீச்சல் அடிப்பது ஆண் பெண் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. நம்ம ஊரை பொறுத்தவரை ஆண்கள் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்க விரும்பினால் அவர்கள் எவ்வளவு பெரிய வயதுடையவராக இருந்தாலும் வெறும் ஜட்டியோடு தான் குதிக்கிறார்கள். ஆனால் பெண்கள்? சிறுமிகளாக இருக்கும்போது ஜட்டியோடு குதித்த பெண்கள் வளர்ந்த பிறகு ஆறு, கிணறு, நீச்சல் குளம் போன்றவற்றில் துணி துவைப்பதை தவிர, வேடிக்கை பார்ப்பதை தவிர சந்தோச குளியலுக்கு அவர்கள் அவ்வளவாக தென்படுவதில்லை. பணக்கார வீட்டுப் பெண்கள் வேண்டுமானால் விலை உயர்வான செயற்கை சுற்றுலா தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. மற்ற பெண்கள் எல்லாம் நீச்சலை இளம் வயதோடு நிறுத்திக் கொள்வதாகத் தான் எனக்குத் தெரிகிறது. நம் நாட்டில் தான் இந்த நிலைமை. 

மேலை நாடுகளில் எல்லாம் பெண்கள் நீச்சலடிக்க விரும்பினால் யாருக்கும் அஞ்சாமல் நீச்சல் உடையில் தான் குளிக்கிறார்கள். அந்தப்  பெண்கள் நீச்சல் உடையில் இருக்கும்போது மகன், தகப்பன், கணவன் என்று தங்களை சுற்றி தெரிந்த ஆண்கள் தெரியாத ஆண்கள் என்று யார் இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பெண்கள் நம் கண்கள் என்கிறோம், ஆனால் அந்த பெண்களை நாம் சுதந்திரமாக செயல்பட விடாமல் கலாச்சாரம் என்ற கருமத்தை திணித்து அவளுடைய ஆசைகளுக்கு நாம் முட்டுக்கட்டையாகவே இருக்கிறோம். 

செக்ஸ் இல்லா காதல் தப்பா?

பொல்லாதவன் படத்தில் வரும் எங்கேயும் எப்போதும் என்ற ரீமேக் பாடலை நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. அவ்வளவு துள்ளலாக அந்தப் பாடலை ரீமேக் செய்திருப்பார் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார். அந்தப் பாடலில் இடம்பெறும், “உப்பில்லா உணவு தப்பு… செக்ஸ் இல்லா காதல் தப்பு…” என்ற வரி இடம்பெறும். அதே போன்ற வரியை இன்னொரு பாட்டிலும் காண முடியும். ஆம் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒலிக்கும் ஜனவரி மாதம் ஓர் பனி விழும் நேரம் என்ற பாடலில் “காமம் இல்லா காதல் அது காதல் இல்லை” என்ற வரி வரும். 

இந்த இரண்டு வரிகளும் என்ன சொல்ல வருகின்றன என்ற கேள்வி எனக்கு பல நாட்களாக இருந்த ஒன்று. உடலுறவு வைத்துக் கொள்ள கல்யாணம் வரை காத்திருக்க தேவையில்லை காதலிக்கும் நபர்கள் இருவரும் தங்களை ஒருவர் ஒருவர் நன்கு புரிந்து வைத்திருந்தாலே போதுமானது… அந்தப் புரிதல் இருந்தால் போதும் உடலுறவு வைத்துக் கொள்ள என்பதை சொல்ல வருகின்றன என நினைக்கின்றேன். 

திருமணத்துக்கு முன்பே உடலுறவு வைத்துக்கொண்ட சினிமாவில் காட்டப்பட்ட காதல் ஜோடிகளை இங்கு பார்ப்போம். முதலில் குறிப்பிட வேண்டிய படம் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி. நாயகியின் பிறந்தநாளின் போது மேட்டர் செய்துவிடுவார். அதற்கடுத்த படம் சிம்புவின் வல்லவன். அதைப் போலவே ஆதித்ய வர்மா, ஓகே கண்மணி, மேயாத மான், பீட்சா போன்ற படங்களில் எல்லாம் காதலர்கள் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதாக காட்டப்படும். இந்தக் காட்சிகளை உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது 100% சரி. ஏனென்றால் மேலே குறிப்பிட்ட படங்களில் காதல் ஜோடிகள் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொண்டவர்கள் என்றாலும் அவர்கள் இறுதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். 

அதே சமயம் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதை தவறு என்றும் சொல்வேன். ஏனென்றால் நான் இங்கு உதாரணமாக குறிப்பிடுவது சுசூந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் படத்தை. ஆசை ஆசையாக காதலித்த ஜோடி கரு உண்டாகிவிட்டது என்றதும் நான் தான் காரணம், நீ தான் காரணம் என்று ஒருவர் மேல் ஒருவர் பழிபோட்டு பிரிந்து விடுவார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது எந்த தவறுமே செய்யாத அந்த சிற்றுயிர். 

உயிரையே கொடுப்பேன் என்கிற அளவுக்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பிறகு மட்டுமே உங்கள் உடலை கொடுங்கள் என்பது என் கருத்து. 

விலைமாதுக்களை திருமணம் செய்துகொண்ட ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் காட்டப்படும் நாயகிகள் எல்லாம் பேரழகிகளாக நேர்மையானவளாக இரக்க குணமுள்ளவளாக கற்புக்கரசியாக தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இருப்பதிலியே இவள் தான் புனிதமானவள் என்பதுபோல் காட்டி ஹீரோவுக்கு ஜோடி ஆக்குவார்கள். அந்த சினிமாக்களிலிருந்து விலகி விலைமாது தொழில்செய்யும் ஹீரோயின்களை ஹீரோக்களுக்கு ஜோடி ஆக்கிய படங்களைப் பற்றிப் பார்ப்போம். 

முதலில் கற்றது தமிழ் படத்தைப் பார்ப்போம். அந்தப் படத்தில் ஆனந்தி சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ரெட்லைட் ஏரியாவுக்குள் தள்ளப்படுவாள். காசுக்கு சுகம் அனுபவிக்க வந்த ஒருத்தன் ஆனந்தியை அடித்து துன்புறுத்துவான். அது பிரபாவுக்குத் தெரிந்துவிட அவன் உள்ளே சென்று ஆனந்தியை மீட்டு வருவான். அப்படி மீட்டு வருகையில் “என்ன எத்தன பேரு அனுபவிச்சாங்கனு கேட்க மாட்டியா…” என்று ஆனந்தி கேட்க “எனக்கு அதெல்லாம் தேவையில்ல… எனக்கு என் ஆனந்தி கிடைச்சுட்டா அதுபோதும்… நடந்ததெல்லாம் மறந்துடு என்பான்…” பிரபாகர். இந்த பிரபாகர் தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மாற்றம். இதேபோல புதுப்பேட்டை சிநேகாவையும் தனுசையும் கூடத்தான் சொல்லலாம். ஆனால் கொக்கி குமார் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொள்வாள் இந்தப் பட்டியலில் புதுப்பேட்டை படத்தை இணைக்க மனம் வரவில்லை. 

அடுத்ததாக சிம்புதேவனின் அறை எண் 305ல் கடவுள் படத்தைப் பார்ப்போம். அந்தப் படத்தில் சந்தானம் ஹீரோயினை உருகி உருகி காதலிப்பார். ஆனால் ஹீரோயினோ விலகி செல்வார். நீ ஏன் விலகிப் போற என்று சந்தானம் கேட்க நான் ஒரு விலைமகள்… உன்ன ஏமாத்த விரும்பல என்பாள். சந்தானம் அவள் செய்யும் அந்த தொழிலை பொருட்படுத்தாமல் திருமணம் செய்துகொள்வார். 

அடுத்ததாக அகில உலக சூப்பர் ஸ்டாரும் அசோக் செல்வனும் சேர்ந்து நடித்த 144 படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் ஓவியா விலைமாதுவாக நடித்திருப்பார். ஓவியா விலைமாது என்று தெரிந்தும் எனக்கு நீ தான் வேண்டுமென தன் காதலில் உறுதியாக இருப்பார் சிவா. ஓவியா அவனை விரும்பினாலும் பிடிக்காதது போல் விலகிச் செல்வார். இருந்தாலும் விரட்டிப் பிடித்து ஓவியாவை திருமணம் செய்துகொள்வார் சிவா. 

அடுத்ததாக கதிர் நடித்த சிகை படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா விலைமாதுவாக இருப்பார். இருந்தபோதிலும் நாயகன் அவரை திருமணம் செய்துகொள்வார். அடுத்ததாக சுசூந்திரனின் ஜீனியஸ் படத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக நாயகன் ரெட்லைட் ஏரியாவுக்குள் செல்வார். அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படும். நான் உன்னை திருமணம் செய்துகொள்ள தயார் தான் ஆனால் உன் குடும்பம் என்னை ஏற்றுக்கொள்ளுமா என நாயகி கேட்க குடும்பத்தையும் ஒப்புக்கொள்ள வைத்து விலைமாதுவை திருமணம் செய்துகொள்வார் நாயகன். 

Related Articles

அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி ப... தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதே...
இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத்... மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக...
சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து காத்தி... சினிமா என்பது ஒரு மிகப்பெரிய ஊடகம், சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மாயவலை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது சினிமா எ...
வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை மிஞ்சிய... கபடி உருவான கதையில் ஜல்லிக்கட்டுக்காக உருவான கபடி, 32 நாடுகளில் விளையாடாப்படும் கபடி பற்றி தகவல்கள் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தகவல்கள் சுருக்க...

Be the first to comment on "அம்மாவுக்கு பிகினி மாட்டிவிட்ட லாரன்ஸ்! – செக்ஸ் இல்லா காதல் தப்பா? விலைமாதுக்களை கொண்டாடிய தமிழ்சினிமா!"

Leave a comment

Your email address will not be published.


*