இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ்
நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்தியாவின் நீர் பங்கும் பாகிஸ்தானுக்கே சென்று சேர்வதாக அமைச்சர் நிதின் கட்கரி
தெரிவித்துள்ளார்.
விவசாய தலைமை கூட்டம் 2018
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற விவசாய தலைமை கூட்டம் 2018 நிகழ்வில் கலந்து கொண்டு மத்திய போக்குவரத்து மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அப்போது அவர் ‘மூன்று ஆறுகளில் இருந்தும் பயன்படுத்தப்படாத நீர் பாகிஸ்தானுக்கு
உபரியாகச் சென்று கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க உத்தரகாண்டில் மூன்று அணைகள்
புதியதாக மத்திய அரசால் கட்டப்பட இருக்கிறது. அப்படிச் சேகரிக்கப்படும் நீரானது பஞ்சாப்,
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்
பயன்படும்’ என்றார்.
நீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டங்கள்
‘இந்திய பிரிவினையின் போது இந்தியாவுக்கு மூன்று ஆறுகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவின்
பங்கை நம்மால் முறையாகப் பயன்படுத்த முடிவதில்லை. பயன்படுத்த முடியாத வகையில்
தண்ணீர் திசை திரும்பி மீண்டும் பாகிஸ்தானுக்கே சென்று விடுகிறது. மத்திய அரசு தற்போது
அதைத் தடுத்து நிறுத்தி இந்திய விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில் நீர் வளங்களைக்
கூட்டும் வகையிலான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே போல மழை நீர்
கடலோடு கலந்து வீணாவதைத் தடுக்கும் விதத்திலும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன’ என்று கூட்டத்தில் பேசும் போது அமைச்சர் தெரிவித்தார்.
ஹரியானா விவசாய துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தங்கர் பேசுகையில் ‘இண்டஸ் நீர் ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே பிரதமர் பேசியிருந்தார். தற்போது துறை சார்ந்த அமைச்சரும் கூட
பேசியிருப்பது அணைகள் கட்டும் திட்டம் தற்போது செயல் வடிவம் பெறும் நிலைக்கு
வந்திருப்பதையே காட்டுகிறது’என்றார்.
Be the first to comment on "உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்டுகிறது இந்திய அரசு"