மெய் சிலிர்க்க வைக்கும் DEAR CSK – இங்கே சாதி, மத, இன பாகுபாடு இல்லை!

CSK in IPL again in new form

ஃபுல்லி என்ற யூடுப் பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு Dear CSK என்ற வீடியோ பதிவிடப்பட்டது. அப்போது முதல் இப்போது யூடூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பழைய கெத்துடன்
ஐபில் ஆட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறது. அதைத் தொடர்ந்து தோணி தி தல ரிட்டர்ன்ஸ்,
சிஎஸ்கே ரிட்டர்ன்ஸ், சிஎஸ்கே ஆந்தம், விசில் போடு என்று பல தரப்பட்ட டப்ஸ்மாஸ்
வீடியோக்கள், வீடியோ மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில
தினங்களுக்கு முன்பு ஃபுல்லி யூடுப் பக்கத்தினைச் சார்ந்த டியர் சிஎஸ்கே என்ற வீடியோ
இவர்களிடமிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. இதனை ரௌனக் மன்கொட்டில் இயக்கி
இருக்கிறார். வீடியோவில் இடம்பெற்ற ஓவியங்கள் மற்றும் அனிமேசன் பணியை நஜீப்
தொட்டுங்கல் செய்திருக்கிறார்.

காவ்யா நட்சத்திராவின் குரலில் காலங்காலமாக இந்தச் சமூகம் ஒரு பெண் குழந்தையை எப்படி
மட்டம்தட்டி, ஒதுக்கி வைத்து, அடிமைப்படுத்தி ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சிறகொடிந்த
பட்டாம்பூச்சியாய் வளர்த்தி வருகிறது என்பதைக் கேட்கும்போது அனைவருக்கும் உள்ளூற குற்ற
உணர்வு ஏற்படாமல் இல்லை.

ஒரு பெண் குழந்தை அங்கே போக வேண்டும், அதை பார்த்து மகிழ ஆசையா இருக்கு என்று
கேட்டால் நீ பெண்குழந்தை என்று வீட்டிற்குள்ளயே முடக்கி வைத்திருக்கும் ஒரு பெண் அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நின்று உற்சாகமாக “லவ் யூ சிஎஸ்கே… ” என்று அத்தனை கூட்டத்தில் கத்தும்போது அவளுக்கு என்ன மாதிரியான மனநிலை இருந்தது என்பதை காவ்யாவின் குரல் நமக்குள் ஆழமாக கடத்திச்
செல்கிறது.

மஞ்சள் நிறத்தின் மகிமை

சிஎஸ்கே அணியின் ஜெர்சியின் நிறம். இந்த மஞ்சள் நிறத்திற்கு முன்பு சாதி, மதம், ஆண் பெண்
பாகுபாடு, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை என்பதை பதிவு செய்திருக்கிறது இந்த
அணி. அதனால் தானோ என்னவோ பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள் அவர்களாகவே முன்
வந்து அந்த வீடியோவை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சிக்ஸர் அடித்த பிறகு வானத்தைப் பிளக்கும் ரசிகர்களின் கரகோசத்தில் எந்த விசில்
பணக்காரனுடையது எந்த விசில் எந்த சாதிக்காரனுடையது என்ற பாகுபாடெல்லாம் அங்கு
பார்க்க முடியாது. “நம்ம சிஎஸ்கே” என்ற உணர்வு மட்டுமே அங்கு காணப்படும். நீங்கள் இந்த
வீடியோவை தேடிச் சென்று பார்க்காவிட்டாலும் அதுவே உங்களைத் தேடி வந்து மெய் சிலிர்க்க
வைக்கும்.

பாகுபாடு இருக்கா? இல்லையா?

அதே சமயம் இந்த வீடியோவுக்கு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் வராமல் இல்லை. சாதி, மத,
இன, பொருளாதார பாகுபாடு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இல்லை என்றும் சிஎஸ்கே
ரசிகர்கர்களிடமும் இல்லை என்று யார் சொன்னார்கள். கிரிக்கெட் அணியில் இருப்பவர்களில்
எத்தனை பேர் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியுமா? என்று விமர்சனங்களும் வந்து
கொண்டிருக்கிறது. எது எப்படியோ இந்த இளைஞர்கள் “பேச வைத்திருக்கிறார்கள்”என்பது மட்டும் நிஜம்.

Related Articles

இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அ... இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக ...
ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்த... "குறைந்த விலையில் நிறைந்த சேவை" இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி. ஜியோ கீபேட்...
“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்... நிறைகள்: கிளப்புல மப்புல பாடல் பாடியது என் தப்பு என்று கூறும் ஆதி மனசாட்சிக்கு நேர்மையாக இப்போது பாடிய "சிவக்குமார் பொண்டாட்டி" பாடலையும் தப்பான...
65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! –... 65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் " ந...

Be the first to comment on "மெய் சிலிர்க்க வைக்கும் DEAR CSK – இங்கே சாதி, மத, இன பாகுபாடு இல்லை!"

Leave a comment

Your email address will not be published.


*