இளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜராத்தின் வடோதாரா போலீஸ் துறை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப் படத்தின் மாணிக்கிய மலராய பூவி பாடலில் நடித்திருக்கும் இளம் நடிகை பிரியா வாரியரின் கண் அசைவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது அவரது கண் அசைவு படத்தின் மூலமாக, ” கண் அசைவில் விபத்துக்கள் நேரிடலாம். கவனச்சிதறலுக்கு ஆளாகமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள் ” என்று வாசகம் எழுதி சமூக வலைத்தள பக்கங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளனர்.
குஜராத்தின் வடோதாரா போலீஸ் துறையின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெறுமனே கருத்துக்களை அறிவுரைகளைக் கூறாமல் எளிய மக்களுக்கு எளிதில் புரியம் படி பாலிவுட் திரைப்படங்களின் பிரபல காட்சிகள் முலமாக, பிரபலங்களின் வாசகங்கள் மூலமாக முன்னணி நட்சத்திரங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து நல்ல பலன்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, பிரியா வாரியரின் புகைப்படம் சமூகவலை தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Be the first to comment on "சமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குஜராத் போலீஸின் புதிய முயற்சி!"