இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்

கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் ஊடாக இந்த மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகளின் மூலம் பயணிகள் காடுகளை உயரத்தில் இருந்து பருந்து பார்வை பார்க்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். இந்தியாவில் முதல் முறையாக கெனொபி நடைமேற்கொள்ளும் வசதி கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்தச் சுற்றுலா வசதி செய்யப்பட்டு இருக்கிறது. கேஸ்டில் ராக் அருகேயுள்ள  உத்தர கன்னடாவின் குவேஷி பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த கெனொபி நடைமேடை. தரை தளத்திலிருந்து முப்பது அடி உயரமும், 240 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்திருக்கிறது இந்த மேடை.

கர்நாடக சுற்றுலா துறையும், கர்நாடக வன துறையும் இணைந்து இந்த திட்டப்பணியை உருவாக்கி இருக்கிறார்கள். பிப்ரவரி 18 ஆம் தேதி முதல்  பொது மக்களின் பயன்பாட்டுக்காக கெனொபி நடை மேடை திறக்கப்பட இருக்கிறது. இதன் திறப்பு விழா அன்று வனத்துறை அமைச்சர் ராமநாத ராய், தொழில் துறை அமைச்சர் ஆர். வி. தேஷ்பாண்டே சுற்றுலாத் துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆகியோர் வருகை தர இருக்கிறார்கள்.

‘இந்த கெனோபி நடை நாட்டிலேயே முதல் முறை இங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று காடுகளின் தலைமை பாதுகாப்பாளர் ஓ. பாலையா தெரிவித்தார். பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாயும், பதிமூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருபத்து ஐந்து ரூபாயும் கட்டணம் வசூலிக்க வனத்துறை முடிவு செய்திருப்பதாகவும், எனினும் ஆப்ரேட்டர்களை பொறுத்து கட்டண வேறுபாடு இருக்குமென்றும்  மேலும் அவர் தெரிவித்தார்.

தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் இந்த கெனோபி நடை உண்டு என்றாலும், நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சுற்றுலா வசதி பறவையியல் ஆய்வாளர்களுக்கும், பறவை விரும்பிகளுக்கும் ஒரு பேரனுபவமாக இருக்கக்கூடும்.

Related Articles

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! – இவருக்... இளமையும் சினிமாவிற்குள் நுழைந்த கதையும்:  மார்ச் 11 1984 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கிணத்துக்கடவு என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர...
டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் ம... இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்க...
நமது அண்டை மாநிலங்களின் கோடைகால பானங்கள்... நமது மாநிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கோடைகால பானங்கள் என்பது ( இயற்கையாக கிடைப்பவை ) கம்மங் கூழ், மோர், பழைய சோத்து தண்ணீர், இள...
கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!... 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் ப...

Be the first to comment on "இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில் பார்க்கலாம்"

Leave a comment

Your email address will not be published.


*