வண்டி ஆவணங்களை இனி டிஜிலாக்கர் செயலி மூலமும் காண்பிக்கலாம்

இனி பயணங்களில் வண்டி ஆவணங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவஸ்தை இல்லை. உங்கள் திறன்பேசியில் டிஜிலாக்கர் செயலியில் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வண்டி ஆவணங்களைப் போக்குவரத்து காவலர்களிடம் காண்பித்தால் போதுமானது. கர்நாடக மாநிலத்தில் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது.

‘டிஜிலாக்கர் செயலியில் கோப்புகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் மற்றும் உமிழ்வு சான்றிதழ் போன்ற வண்டி ஆவணங்களை இனி போக்குவரத்து காவலர்களிடம் காண்பிக்கலாம். அவை அச்சு ஆவணத்துக்கு நிகரான ஒன்றாகக் கருதப்படும். விரைவில் வண்டியின் காப்பீடு ஆவணமும் இந்தப் பட்டியலில் இணைய இருக்கிறது’ என்று கடந்த செவ்வாயன்று போக்குவரத்து கமிஷனர் தயானந்த தெரிவித்தார். இருப்பினும் வழக்குகளின் போது டிஜிலாக்கர் செயலி ஆவணங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

ஆதாருடன் இணைக்கப்படுகிறது

சமீபத்தில் கர்நாடக மாநில மின் ஆட்சித்துறை, போக்குவரத்து துறையை டிஜிலாக்கர் செயலியுடன் இணைத்திருந்தது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் அச்சு ஆவணங்களை டிஜிலாக்கர் செயலியில் சேமிக்க முடியும். இதன் உண்மைத்தன்மையை டிஜிலாக்கர் செயலி ஆதாருடன் இணைக்கப்படும் போது சரிபார்க்கப்படும்’ என்று கூடுதல் காவல்துறை கமிஷனர் ஹிதேந்திரா தெரிவித்தார்.

டிஜிலாக்கர் என்றால் என்ன?

டிஜிலாக்கர் என்பது திறன்பேசியில் இயங்கும் ஒரு செயலி. அது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு குடிமகனுக்கு அரசு தரும் அனைத்து ஆவணங்களையும் இதில் பதிவேற்றிக்கொள்ளலாம். ஐடி சட்டம் 2000த்தின் படி, அப்படி டிஜிலாக்கரில் பதிவேற்றப்படும் ஆவணங்கள், அசல் அச்சு ஆவணங்களுக்கு  நிகரான ஒன்றாகவே கருதப்படும்.

உதவிக்கு அழையுங்கள்

போக்குவரத்த்து துறை சார்ந்த அனைத்துப் புகார்களுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் உதவி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வாட்சப், டிவிட்டர், மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் தொலைப்பேசி வாயிலாகவும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வாட்சப்  : 9449863459

ட்வீட்டர் : @tdkarnataka

பேஸ்புக் : tdkarnataka

மின்னஞ்சல் : tdkarnataka@gmail.com

தொலைப்பேசி : 080-25136500

Related Articles

#gobackmodi எதிர்ப்பையும் தாண்டி பிரதமர்... இன்று( ஏப்ரல்12) சென்னையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். அவரு...
தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்க... சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுந...
ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்த... "குறைந்த விலையில் நிறைந்த சேவை" இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி. ஜியோ கீபேட்...
“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்... கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை "link bro" என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடிய...

Be the first to comment on "வண்டி ஆவணங்களை இனி டிஜிலாக்கர் செயலி மூலமும் காண்பிக்கலாம்"

Leave a comment

Your email address will not be published.


*