சுறா படத்தில் உள்ள சொதப்பல்கள்! 

விஜய் நடித்த படங்களின் கதைகளை கூர்ந்து கவனித்தால் அந்தக் கதைகள் அனைத்துமே சிறப்பான கதைகள் என்பது புரிய வரும். ஆனால் காட்சி ஆக்குவதில் சொதப்பி விடுகிறார்கள் இயக்குனர்கள். விஜய்க்கு “மாஸ்” கூட்ட வேண்டும்… தியேட்டரில் விசில் பறக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் டீம் தங்களது கதைகளை அவர்களாகவே சொதப்பி கொள்கிறார்கள். அப்படி சொதப்பலான விஜய் படங்களில் மிக முக்கியமான படம் தான் “சுறா”. இந்தப் படம் விஜய்யின் ஐம்பதாவது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. அந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூட ஒரு வகையில் சுறா படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தது. 

சுறா படம் ஒரு மீனவனின் கதை. மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் இளைஞன் பற்றிய கதை. அப்பாவி மீனவ மக்களை ஏமாற்றி அவர்களின் குடிசைகளை எரித்து நிலத்தை அபகரிக்க முயலும் வில்லன். இந்த நில விவகாரத்தை சாதாரணமாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் மக்களோ “எங்கள் குலசாமி…” என்று விஜயை தலையில் தூக்கி வைக்கிறார்கள். இதுதான் படத்தின் மைனஸ்… விஜய்யின் எல்லா படங்களிலும் இந்த மைனுஸ் இருக்கவே செய்கிறது. இப்படிபட்ட மைனஸ் உள்ள படத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் என்ன மாதிரியான பிரச்சினையை அனுபவிக்கிறார்கள் என்று வசனம் பேசி இருப்பார் விஜய் . உண்மையில் மிக முக்கியமான காட்சி அது. 

சுறா படத்தில் வடிவேலு காட்சிகள் மட்டும் தான் நன்றாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். வடிவேலு காட்சிகள் மட்டுமல்ல சில வசனங்கள் கூட நன்றாக தான் இருக்கும். “உலகத்துலயே சுயமரியாதைக்கு உதாரணமா இருக்கறவனும் தமிழன் தான்… அதை அசிங்கப்படுத்துறவனும் தமிழன் தான்…” போன்ற வசனம் அட போட வைக்கிறது. அதே சமயம்… “மோதனும்னு முடிவு பண்ணிட்டா… மன்னருனு பாக்க மாட்டேன்… மந்திரினு பாக்க மாட்டேன்…”, “நீ அடிச்சா அடி விழும்… நா அடிச்சா இடி விழும்…” போன்ற வசனங்கள் சிரிப்பு மூட்டுகிறது. இந்த மாதிரி பஞ்ச் வசனங்களை விஜய் ஸ்டைலாக பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு மாதிரி இழுத்து பேசுவது மேலும் நம்மை கடுப்பேற்றுகிறது. 

தமன்னா வரும் காட்சிகள் மிகப்பெரிய பலவீனம். ஹீரோயின்களை ஏன் இந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் இவ்வளவு லூசாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை. தமன்னா வரும் காட்சிகளை அப்படியே கொத்தாக தூக்கி எரிந்துவிட்டு இயக்குனர் மீனவர் பிரச்சினையை அழுத்தமாக சொல்வதில் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் சுறா படத்தை கலாய்த்தவர்களும் அந்த மீனவ பிரசீசினைகளை வெளியே வராமல் போனதற்கு மிக முக்கிய காரணம். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் சிறப்பாக அமைந்திருந்தால் இந்தப் படம் இந்த அளவுக்கு மட்டம் தட்ட படாமல் சுமாரான படம் என்கிற அங்கீகாரத்தை ஆவது பெற்றிருக்கும். 

 

Related Articles

ரேப் பண்ண அனுபவம் எப்படி இருந்தது? ̵... பெண்களை தன் காம இச்சைக்கு  வலுக்கட்டாயப் படுத்துதல் என்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் வரை இது நடந்துள்ளது....
” கடவுள் ஒரு சில்றபையன் ” &#... எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.பசுபதி, சிங்கப் பெருமா...
ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கட... வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்க...
மதுபான கடைகளை அடித்து நொறுக்கிய சகாயம்! ... சகாயம் ஐஏஎஸ் நேர்மையானவர், பெப்சி கம்பெனிக்கு சீல் வைத்தவர் போன்ற ஒன்றிரண்டு தகவல் நாம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் அவருடைய பல அதிரடியான நடவட...

Be the first to comment on "சுறா படத்தில் உள்ள சொதப்பல்கள்! "

Leave a comment

Your email address will not be published.


*