உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! இந்த பெருமையில் நீங்களும் பங்குகொள்ள வேண்டுமா?

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! இந்த பெருமையில் நீங்களும் பங்குகொள்ள வேண்டுமா?

இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. [ சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ] உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்கான தேசிய விருதையும் தமிழகம் பெற்றுள்ளது. இந்த பெருமை உடல் தானம் செய்த ஒவ்வொருவருக்கும் உரியது. இந்த பெருமையில் இன்னும் நிறைய மக்கள் பங்குகொள்ளாமல் இருக்கிறார்கள். அதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் போது போதிய உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே தானம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் உடலை சடங்குகள் என்ற பெயரில் எரித்தோ புதைத்தோ வீணடித்துவிடுகிறார்கள். இனி வரும் காலங்களில் இதே தவறை செய்யாமல் இருப்பது இந்த தலைமுறை இளைஞர்கள் கையில் தான் உள்ளது.

உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கும் உடலை தானம் செய்வதற்கும் சிறு வித்தியாசம் உள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தாலே போதும். ஆனால் உடலை தானம் செய்வது என்பது மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவது ஆகும். இதற்கான விண்ணப்பம் உங்கள் அருகே இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும்.  விபத்து, தற்கொலை ஆகியவற்றால் இறந்த உடல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நமக்கு பொதுவாக தெரிந்தது கண்தானம், இரத்ததானம், உடல் உறுப்பு தானம் மட்டுமே. இதற்குமேல் நிலையில் இருப்பது தான் உடல் தானம். இது மருத்துகல்லூரியில் உடற்கூறு ஆய்வியலுக்கு உதவக்கூடியது. பல மருத்துவர்கள் பாடம் கற்றுக்கொள்வதற்கு இறந்த பிறகு உங்கள் உடல் உதவினால்  அது எவ்வளவு பெரிய தியாகம்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது,  ஒருவர் இறந்த பின்னர் தருவது என்று உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகை. ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் போன்றவை உயிருடன் இருக்கும்போது தானமாக வழங்கக்கூடியவை. இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா) போன்றவை இறந்தபிறகு தானமாக வழங்கக்கூடியவை. நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்தால் மாரடைப்புக்கான சாத்தியங்கள் குறைகிறது. கண் தானம் செய்தால் இன்னொருவரின் வாழ்க்கைக்கு வெளிச்சமாக விளங்குகிறீர்கள். இனிமேல் உங்கள் உடலை உங்களுக்காக இல்லாவிட்டாலும் மற்றவரின் நலன் கருதி நோய் நொடியின்றி முறையாகப் பேணுங்கள். தானம் செய்து பழகுங்கள் அது தான் மனிதம்.

Related Articles

ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... * பள்ளிக் கூடமா அது... சந்தக்கட... எங்க பாத்தாலும் குப்ப... இரைச்ஙாலு... ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி... படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொ...
251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி த... நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்த...
ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர... ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங...
மாற்றத்திற்கு உண்டான சிந்தனையே ரஜினியிடம... கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி ரஜினி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்தார். ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்றும் நான் இன்னும் கட்சி ஆரம்பிங்கலைங்க என்கிறார். ஆ...

Be the first to comment on "உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! இந்த பெருமையில் நீங்களும் பங்குகொள்ள வேண்டுமா?"

Leave a comment

Your email address will not be published.


*