குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் போனால் படத்தை நன்கு ரசிக்க முடியும்! – உளறிய சினிமா விமர்சகர்!

குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் போனால் படத்தை நன்கு ரசிக்க முடியும்! - உளறிய சினிமா விமர்சகர்!

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. ஃபுல்லி என்ற யூடிப் சேனலில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் கிஸ்ஸன் தாஸ். ( டிவி விளம்பரங்களில் அடிக்கடி வந்து செல்வார் ).

சினிமாவை ஓரளவுக்கு நன்கு புரிந்து வைத்திருக்கிற இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து நடத்தி வரும் சேனல் என்ற பெயர் பெற்றிருந்தது. பல முக்கிய சினிமா ஆளுமைகளும் இவர்களது சேனல்களுக்குப் பேட்டி அளித்து உள்ளனர். கடந்த வருடத்தில் சிஎஸ்கே மேட்ச் பற்றி ஒரு வீடியோ போட்டு இயக்குனர் கௌதம் மேனனிடம் வாழ்த்து பெற்றவர்கள். இப்படி நல்ல பெயரை சம்பாதித்து இன்று பெயர் கெட்டுப் போகும் அளவில் ஆர்வக் கோளாறில் வார்த்தையை விட்டிருக்கின்றனர்.

திரைப்படத்தை எப்படி என்ஜாய் பண்ணி கண்டுகளிப்பது? என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்கு, செல்போன் இல்லாம படம் பாருங்க… என்று ஒருவர் சொல்ல…

முக்கியமா தியேட்டருக்கு உள்ள போறதுக்கு முன்னாடி டஸ்ட்பின் இருந்தா அதுல குழந்தைய போட்ருங்க… கைல குழந்தைங்க இருந்தா செம டிஸ்டர்பன்ஸா இருக்கும் என்று பதில் அளித்து உள்ளார் கிஸ்ஸான் தாஸ்.

வீடியோ ஜாக்கியாக இருப்பவர்கள் காமெடி என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… அவற்றை எல்லாமே காமெடியாகவே பார்க்கப் படும் என்று நினைத்து விட்டார்கள் போல. நாவடக்கம் தேவை இளைஞர்களே! நாலு புத்தகத்த மேஞ்சுட்டா… நாலு அயல்மொழிப் படங்கள பாத்துட்டா… நீங்க ஒன்னும் கொம்பனுங்க இல்ல… அப்டிங்கறத புரிஞ்சிக்குங்க என்று வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு அவர் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை.

Related Articles

“யாருங்க அந்த அட்மின்? எனக்கே பாக்... திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலையை அகற்றினார்கள் அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள். உடனே சூட்டோடு சூடாக நாளை தமிழகத்திலும் ...
உலக சினிமா “பெண் இயக்குனர்கள̶்... 1.Lee jeong hyang (The way home) 1964இல் தென்கொரியாவில் பிறந்தார்.  அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகள...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட... மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுக...

Be the first to comment on "குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் போனால் படத்தை நன்கு ரசிக்க முடியும்! – உளறிய சினிமா விமர்சகர்!"

Leave a comment

Your email address will not be published.


*