மிஷ்கினும் பாரதிராஜாவும் சொன்ன குட்டி கதைகள்!

Short stories narrated by Mysskin and Bharathiraja

குரங்குபொம்மை குட்டிக்கதை

குரங்குபொம்மை படத்தில் பாரதிராஜா சொல்லும் குட்டிக்கதை மிக அற்புதமாக இருக்கும். அந்தக் குட்டிக்கதையை இங்கு பார்ப்போம். 

“ஒரு கதை சொல்றேன் கேக்குறியா… எங்கப்பன் ஒரு துப்பு கெட்ட பையன்… கோவணத்த இறுக்கி கட்ட தெரியாது… ஆனா ஆம்பள பிள்ள பொம்பள பிள்ளனு வதவதன்னு ஏழெட்டு பெத்துப் போட்டுட்டான்… 

கடைசியா ஒரு பிள்ளைய பெத்தான்… அவத்த பிள்ள… கையும் விளங்காது காலும் விளங்காது… அவுகளுக்கு இவன வச்சு காப்பத்தனம்னு ஆசை இல்ல… அப்படியே இருந்து போச்சு… அதுக்கப்புறம் அக்கா தங்கச்சிக கல்யாணம் பண்ணி வாக்கப்பட்டு போய்ட்டாளுக… இவிங்களும் அண்ணன் தம்பினு கல்யாணம் பண்ணி போய்ட்டாங்க… இந்த பீடை மட்டும் அவிங்க ஆத்தா அப்பனையே சுத்தி சுத்தி வந்துகினு இருந்துச்சு… அதுக்கப்புறம் ஒரு நேரத்துல இவுகளும் போய்ட்டாங்க… அப்புறம் வந்தாங்க அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி எல்லாம்… எதுக்கு? பண்ட பாத்திரம் அண்டா குண்டா பகிர்ந்துகிறதுக்கு… சண்ட ஒரே சண்ட… இது எனக்கு வேணும் அது உனக்கு வேணும்னு நீ வச்சுக்கிறாயா நா வச்சுக்கிறாயானு ராத்திரி பூரா சண்ட… அப்புறம் ஊர் பெரிய மனுசங்க வந்து காலைல பேசிக்கலாம் படுங்கன்னாங்க… படுத்துட்டோம்… அன்னிக்கினு ஒரு திருட்டு பையன் வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டான்… கண்டுபிடிச்சுட்டாங்க… கட்டிப் போட்டுடாங்க… மாட்டிக்கிட்டான்… காலைல பாத்தா அண்டா குண்டா பண்ட பாத்திரம் பீரோ மர சேரு கட்டிலு… உடைஞ்சு போன கடிகாரம் சைக்கிளு எம்ஜிஆரு போட்டோ எல்லாத்தையும் குவிச்சு வச்சுருக்காங்க… எல்லாரும் சுத்தி நிக்குறாங்க… கடைசியா ஒரு பொட்டி… மரப் பொட்டி அதுக்குள்ள என்னா இருக்கு… எல்லாரும் இதுக்குள்ள என்னமோ இருக்குனு நகத்திப் பாத்தா அந்தப் பெட்டிக்குப் பின்னாடி இந்தப் பீடை. புஃபுனு ஒக்காந்திருக்கேன்… பெரியவரு பார்த்தாரு… டேய் புள்ளைகளா உங்களுக்கு இஷ்டப்பட்டதெல்லாம் எடுத்துக்கிட்டிங்க… இத யாரு கூட்டிட்டு போறது… இந்த பீடைய யாரு வச்சு வளக்குறது… ஒருத்தன் பேசல… அக்கா தங்கச்சி பேசல… கம்முனு இருந்துட்டாளுக… திருடன் பாத்தான்  இங்க பாருங்க… இத நான் போயி கூட்டிட்டு போயிரவா… அப்படினு கேட்டு கூட்டிட்டு போயிட்டான்… 

அன்னிக்கு அந்த இத்துனூண்டு திருடன் தோள்ல என்னைய தூக்கி வச்சுட்டு போகும்போது எங்க அக்கா காரி கேட்டா… டேய் திருடா… அந்தப் பீடை என்னமோ சொல்லுச்சு உன் காதுலனு… அதுக்கு அவன் சொன்னான்… இந்த திருடன் திருடிகிட்ட இருந்து என்ன காப்பாத்துனு நான் சொன்னேனு சொன்னான்…”

பாரதிராஜா தனது தழுதழூத்த குரலில் சொல்லும் இந்தக் குட்டிக்கதை பணப்பித்து பிடித்த ரத்த சொந்தங்களையும் மனிதநேயம் கொண்ட திருடனையும் கண்முன்னே நிறுத்துகிறது. 

மிஷ்கினின் குட்டிக்கதை! 

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் சுடுகாட்டில் மிஷ்கின் சொல்லும் குட்டி கதை இது. 

“ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம்… அந்த ஓநாய் ஒரு பெரிய கரடிகிட்ட வேல செஞ்சுச்சாம்… கரடிக்குப் பிடிக்காத நரிங்கள காட்டுல போய் ஓநாய் வேட்டையாடுமா… அப்புறம் ஒரு நாள் ஒரு நரிய வேட்டையாடும்போது ஒரு ஆட்டுக்குட்டி குறுக்க வந்துடுச்சாம்… ஓநாய் தெரியாம அந்த ஆட்டுக்குட்டிய கொன்னுடுச்சு… முத தடவையா ஒரு ஆட்டுக்குட்டிய கொன்னதுனால என்ன பண்ணனும்னு தெரியாம அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு அந்த ஓநாய் போச்சாம்… அந்த ஆட்டுக்குட்டி வீட்டுல ஒரு அப்பா ஆடு… ஒரு அம்மா ஆடு… ஒரு குட்டி தங்கச்சி ஆடு இருந்துச்சாம்… அவிங்க மூணு பேருக்கும் கண்ணு தெரியாதாம்… அவிங்கள பாத்து ரொம்ப கஷ்டப்பட்ட ஓநாய் தன் பழைய வேலையெல்லாம் விட்டுட்டு அந்தக் குடும்பத்தோடவே உறவு மாதிரி தங்கி அவிங்கள ரொம்ப பத்திரமா பாத்துக்குச்சாம்… வேட்டைக்கு வராத ஓநாய தேடி ஒரு நாள் கரடி அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்துச்சாம்… வேட்டைக்கு வா வேட்டைக்கு வானு கூப்பிட்டுச்சாம்… நான் வர மாட்டேனு ஓநாய் சொல்ல கோவமான அந்த கரடி அந்த அப்பா அம்மா ஆட்டுக் குட்டிங்ககிட்ட உங்க ஆட்டுக்குட்டிய இந்த ஓநாய் தான் கொன்னுடுச்சுனு சொல்லிடுச்சாம்… அதக் கேட்டு அந்த ஓநாய் ஒரு மூலைல உக்காந்து உடைஞ்சு அழுதுச்சு… அப்ப அந்த அம்மா ஆடும் அப்பா ஆடும் அந்த ஓநாய் பக்கத்துல வந்து நீ எங்க ஆட்டுக்குட்டிய வேணும்னே கொன்னுருக்க மாட்டட கண்ணா… அழாதடானு சொல்லி கட்டிப்புடிச்சு நீதான்டா இனிமே எங்க ஆட்டுக்குட்டினு சொல்லுச்சு… அந்த ஓநாய் அந்த மூணு பேரையும் கூட்டிக்கிட்டு ஒரு இடத்துக்குப் போச்சாம்… போற இடங்கள்லாம் அந்தக் கரடி ஓநாய தேடி வந்து வேட்டைக்கு வா வேட்டைக்கு வான்னு சொல்லுச்சு… நீ வராட்டின்னா உன் அப்பா அம்மா அந்த குட்டி ஆட கொன்னுடுவனு பயமுறுத்துச்சு… என்ன பண்ணனும்னு தெரியாம அந்த ஓநாய் அந்தக் கரடிய கடிச்சுப் போட்டுருச்சு… ஓநாய் அந்த மூணு பேரையும் கூட்டிட்டு திரும்ப எங்கெங்கயோ போச்சாம்… காட்ட காவ காக்கற புலிகளெல்லாம் ஓநாய தேடி தேடி வந்து எப்படியோ ஓநாய் இருக்கற இடத்த தேடிப் பார்த்து கண்டுபிடிச்சு கொல்ல வர திரும்பியும் ஓநாய் ஓட அது கூட ஓட முடியாத அந்த அப்பா ஆடு அம்மா ஆடு குட்டி ஆடு ஒரு பத்திரமான இடத்துல ஒளிச்சு வச்சுட்டு ஓநாய் ஓடுச்சாம்… ஆனா ஒரு புலி அந்த ஓநாய கடிச்சுப்போட அந்த ஓநாய் தப்பிச்சு நொண்டி நடந்து போய் ஒரு மூலைல விழுந்துடுச்சாம்… அப்ப இன்னொரு குட்டி ஆடு வந்து அந்த ஓநாய வீட்டுக்கு கூட்டிட்டு போயி காயத்துக்கு மருந்து போட்டுச்சு… ஆனா மறுநாள் காலையில அந்த ஓநாய் தான் அப்பா அம்மா ஆட்டுக்குட்டிய தேடிப் போயிருச்சாம். அவிங்க திருப்பி ஓட அந்தக் கரடி காயம்பட்ட வெறிப்புடிச்ச கரடி அவிங்கள எல்லோரையும் கொல்றதுக்கு துரத்தி வர இன்னொரு பக்கம் புலிகளும் துரத்த அந்த ஓநாய் ஓடிகிட்டு இருக்கு… எங்க ஓடுமோ எப்படி ஓடுமோ!” 

மேற்கண்ட இரண்டு குட்டி கதைகளுமே தமிழ் சினிமாவின் மறக்க முடியாத தவிர்க்க முடியாத அற்புதமான காட்சிகள்! 

Related Articles

48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்... கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ...
நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் மு... மின் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகம் முழுவதும் மின் சக்திக்கு உண்டான மாற்று என்ன என்பதை அடிப்படையாக வைத்து ப...
அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யா... மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்ச...
கமல் தனது கட்சி பெயரை மாற்றுவாரா? மய்யம்... ஐந்து வருடத்திற்கு ஒரு முறை என் விரலை கறையாக்கிக்கொள்வது போதாதா என்று அரசியல் களத்தை விட்டு ஒதுங்கி நின்ற கமல்ஹாசன் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் புயலாய...

Be the first to comment on "மிஷ்கினும் பாரதிராஜாவும் சொன்ன குட்டி கதைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*