கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – காட்ஃபாதர் – மாஃபியா! – திரைவிமர்சனம்

Kannum Kannum Kollaiyadithaal,Godfather and Mafia movie review

காட்ஃபாதர் – மூன்று தந்தைகளின் பாச போராட்டம்! 

பின்னணி இசை அருமை. டைட்டில் கார்டு டிசைன் கதைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம். ஒளிப்பதிவு பாராட்டும்படி இருந்தது. குறிப்பாக மருதுவின் ஆட்கள் நட்டியின் மகனை தேடி வரும் காட்சியில் நட்டி கதவு வழியாகப் பார்க்கும் காட்சியில் ஒளிப்பதிவு பிரம்மாதம்.  சவுண்ட் டிசைனிங் டிபார்ட்மெண்ட் நன்றாக உழைத்துள்ளது. 

ராசுக்குட்டி அஸ்வந்த் துறுதுறு சிறுவனாக நன்றாக நடித்துள்ளான். அனன்யா ஹோம்லி லுக்கில் மிக அழகாக இருக்கிறார். அனன்யாவுக்கும் நட்டிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. சூப்பர் மார்க்கெட்டிலும் லிப்ட்டிலும் வரும் லாலிபாப் காட்சி கவிதை. 

ரவுடியிசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரமாதம். லால் எண்ட்ரியும் அதற்கான பின்னணி இசையும் மிரட்டல். லாலின் சொந்தக் குரல் அரவிந்த் சாமியின் குரலையும் அர்ஜூன் தாஸின் குரலையும் நினைவூட்டுகிறது. லால் சொல்லும் “சிங்கம் – நாய்” கதை செம. லால் முகத்தில் இருக்கும் வெள்ளை தாடி உறுத்தலாக இருக்கிறது. 

யூடுப்பில் வெளியான படத்தின் ஸ்னீக்பீக் காட்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தபோதும் தியேட்டரில் கூட்டம் இல்லை. பிரபலமான நவீன வசதிகள் கொண்ட தியேட்டரில் கூட வெறும் பத்துபேர் மட்டும் தான் இருந்தார்கள். ஒரு சில காட்சிகள் நாடகத் தனமாகவும் லாஜிக் இல்லாமலும் இருந்தது. இருந்தாலும் பரபரப்பான திரைக்கதையில் அவை பெரிய குறையாக தெரியவில்லை. 

படத்தில் மூன்று அப்பாக்களை காட்டியிருக்கிறார்கள். ஒருவன் தன் மகனுக்காக இதயம் தேடும் மருது என்கிற அப்பா… மருதுவால் தன் வக்கீல் மகனின் கை பறிபோய்விட்டது என்று வருந்தும் இன்னொரு அப்பா… மருதுவால் தன் மகனின் உயிர் போய்விடக்கூடாது என போராடும் அப்பா. காட் ஃபாதர் என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு கன கச்சிதம். லாலும் நட்டியும் சந்தித்துக் கொள்ளும் இடைவேளை காட்சி அருமை. 

நட்டிக்கு ஒரு மகன். லாலுக்கு ஒரு மகன். இரண்டு மகன்களுக்குமே ஒரே வயது. பிரபல ரவுடியான லாலின் மகனுக்கு இதயத்தில் ஓட்டை. தன் மகனை காப்பாற்ற “எத்தனை உயிர்போனாலும் பரவால… என் பையன் உயிரோட இருக்கனும்…” என்று சொல்லி லால் மகனின் பிளட் குரூப்பில் அவனுடைய வயதில் இருக்கும் மகனை காப்பாற்ற நட்டியின் மகனை போட்டுத்தள்ள கிளம்புகிறது. அவர்களிடம் இருந்து தன் மகனை நட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு படம் பெரும்பாலும் ஒரே குடியிருப்பிலயே ஓடுகிறது. அதனால் லேசான அயற்சியும் ஏற்படுகிறது. 

“மான வேட்டையாடுனா தான் சிங்கத்துக்கு சாப்பாடு… சிங்கத்த பார்த்து பயந்து ஓடுறத தவிர மானுக்கு வேற வழியில்ல… ஜெயிக்க போறது மானோட பயமா… இல்ல சிங்கத்தோட பசியா…” என்ற வசனம் கவனிக்க வைத்தது. 

மாஃபியா அத்தியாயம் ஒன்று திரை விமர்சனம்

சவுண்ட் டிசைனிங் டிபார்ட்மெண்ட் நன்றாக உழைத்துள்ளது. பின்னணி இசை செம. வேடன் வந்தாச்சோ பாடலின் தீம் மியூசிக்கையே நிறைய இடங்களில் ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். பிரசன்னாவின் எண்ட்ரி சீனுக்கான பின்னணி இசை செம.  ஒளிப்பதிவு லைட்டிங் என அனைத்து தொழில்நுட்ப வேலைப்பாடுகளும் செம. 

டைட்டில் கார்டு டிசைனிங் செம. குறிப்பாக ரெட் & பிளாக்கில் வரும் கதைக்கு சம்பந்தமான கிராஃபிக் வொர்க் செம. எடிட்டிங் D16 படத்திற்கு போட்ட பேட்டர்னையே போட்டிருக்கிறார்கள். ஸ்லோ மோசன் காட்சிகள் மட்டும் எண்ணிப் பார்த்ததால் குறைந்தது ஆயிரமாவது இருக்கும். மிக மோசமான எடிட்டிங். ஸ்லோ மோசன் காட்சிகளை வைப்பது தான் ஹீரோவுக்கான மாஸ் என்று நினைப்பது முட்டாள் தனம். 

“போதைல வர சந்தோசமும் சரி கோபமும் சரி… அளவு கடந்து வரும்…”

“உண்மையான சமூக சேவகர்களுக்கு எதிரிகள் அதிகமாகவும் நண்பர்கள் குறைவாகவும் இருப்பார்கள்… ” போன்ற வசனங்கள் கவனம் பெற்றன. 

ஆர்யனாக அருண்விஜய். செம ஸ்டைலிசாக இருக்கிறார் அருண் விஜய். சத்யாவாக பிரியா பவானி சங்கர். பேண்ட் சர்ட் டீசர்ட் கூலிங்கிளாஸில் செம அழகாக இருக்கிறார். நிறைய இடங்களில் பிரியா பவானி சங்கர் முகத்தில் ஜீவன் இல்லை. அதனாலயே அவர் முகத்தை பல இடங்களில் ப்ளர் செய்திருக்கிறார்கள். உடை வடிவமைப்பு யாரு என கேள்வி கேட்க வைக்கிறது அந்த அளவுக்கு பிரமாதமாக உள்ளது. 

தலைவாசல் விஜய்க்கு நல்ல கதாபாத்திரம். நிஜ சமூக சேவகரான முகிலனின் பெயரையே தலைவாசல் விஜய் கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளார்கள். குறுகிய காலமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் தலைவாசல் விஜய். திவாகராக பிரசன்னா, அலட்டல் இல்லாத நடிப்பை தந்துள்ளார். இருந்தாலும் இந்தப் படத்தில் அவருக்கு சரியான தீனி போடவில்லை என்பதே உண்மை. அநியாயத்துக்கு சுருட்டுகளை புகைத்து தள்ளுகிறார்… பணக்கார வில்லன் என்றாலே அவன் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போலவும் சுருட்டு பிடிப்பது போலவும் காட்டுவது ஏன்? 

அருண் விஜயும் பிரசன்னாவும் ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட பிறகு வரும் துப்பாக்கி வேட்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. இந்தக் காட்சியில் பிரியா பவானி சங்கர் கூட மிரட்டி இருக்கிறார். இந்த காட்சிகளை போலவே முழு படமும் இருந்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். 

கதையே இல்லாமல் ஷூட்டிங் செல்ல தன்னை கௌதம் மேனன் என நினைத்துக் கொண்டாரோ கார்த்திக் நரேன். வெறும் மேக்கிங்கை மட்டும் நம்பி அழுத்தமான கதை இல்லாத படத்தை எடுத்துள்ளார் கார்த்திக்.  முதல் படத்தில் எடுத்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்: 

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற தலைப்பை பார்த்ததும் “காதல் என்று அர்த்தம்” என்று தான் நாம் நினைத்திருந்தோம். ஆனால் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலயே அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்குகிறார் இயக்குனர். முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை படம் பரபரப்பாகவும் ஜாலியாகவும் செல்கிறது. காதல் படங்களை காட்டிலும் இந்த மாதிரியான படங்களில் துல்கர் துறுதுறுவென இருக்கிறார். காதலால் உருகும் காட்சி, பணத்தை இழந்ததால் டென்சனாகும் காட்சி, கூலாக திட்டம் போடும் காட்சி என்று அத்தனை காட்சிகளிலும் துறுத்தலில்லாத அளவான நடிப்பு. அதற்கடுத்தாக பாராட்டப்பட வேண்டியவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். போலீஸாக செமயாக நடித்துள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸில் அவரை வைத்து வரும் ஒரு டுவிஸ்ட்டுக்கு தியேட்டரே “அட பாவிகளா எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கிட்டிங்களே…” என்று சொல்லும்படி வைத்திருக்கிறார் இயக்குனர். 

அடுத்ததாக நம்மை கவர்பவர் ரக்சன். கலகலக்க வைக்கிறார். குறிப்பாக ரஜினி மாதிரி மிமிக்ரி பண்ணும் இடத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மாதிரி மிமிக்ரி பண்ணும் இடத்தில் தியேட்டரே குலுங்கி சிரிக்கிறது. அனைத்தையுமே இழந்து சாலையோரம் அமர்ந்து துல்கரிடம் தன் ஏமாற்றத்தை ஆதங்கத்தை சொல்லும் இடத்தில் நன்றாக நடித்துள்ளார். நல்ல எதிர்காலம் உள்ளது ரக்சன்!

“உழைச்சு சம்பாதிச்சா ஒரு ரூபாயும் பத்து ரூபாயும் ஒன்னு தான்… “, “லவ் மேட்டர்ணா… லவ்வா மேட்டரா… “, “பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்… அது உண்மை தான்… பல நாளு ஒரே திருட்ட செய்றவன் தான் மாட்டுவான், மாத்தி மாத்தி திருட்டு தொழில் செய்றவன் மாட்ட மாட்டான்… “, “யாருமே திருந்துறதல்ல மாறிக்குறாங்க அவ்வளவுதான்… “, “என் பேரே இப்ப தான் உங்களுக்கு தெரியும் அதுக்குள்ள லவ்வுனு சொல்றிங்க… பேரு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் ஒரு பொண்ண லவ் பண்ணனும்னு அவசியம் இல்ல… ” , ”  நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க நம்மகிட்ட இருந்து திருடிகிட்டு போறத கூட ஏத்துக்கலாம்… ஆனா ஏமாத்திட்டு போறத தான் தாங்க முடியல… ” போன்ற வசனங்கள் கவனிக்க வைத்தன. 

பின்னணி இசை செம. குறிப்பாக திருட்டு நடக்கும் காட்சிகளில் எல்லாம் ஒலிக்கும் பின்னணி இசை செம. பாடல்கள் அப்படியொன்றும் மனதை கவரவில்லை. ஒளிப்பதிவு குட். எடிட்டிங் பக்க பலம். உடை உடிவமைப்பு, ஒலி அமைப்பு இரண்டுமே சூப்பர். 

துல்கருக்கு ஜோடியாக நடித்தவரை விட ரக்சனுக்கு ஜோடியாக நடித்தவர் மனம் கவர்கிறார். காரணம் அவருடைய மாநிறமாக கூட இருக்கலாம். படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகளும் அபத்தமான காட்சிகளும் இருந்தன. இருந்தாலும் அவை பெரிய குறையாக தெரியவில்லை. திருடுவது புத்திசாலித்தனம் என்பது போல் காட்டியிருப்பது தான் லேசான உறுத்தல்.

Related Articles

” சுதந்திரம்கிறது மனுசங்களுக்கு மட... தயாரிப்பு : டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்எழுத்து இயக்கம் : சாய் சேகர்இசை : எஸ்எஸ் தமன்ஒளிப்பதிவு : என் கே ஏகாம்பரம்எடிட்டிங் : பிரவீன் ...
ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!... ஏப்ரல் 4ம் தேதி :குப்பத்து ராஜாஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் "குப்பத்து ராஜா" திரைப்படம். நடன இயக்குனர் ...
தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!... ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். நமக்கு மாறுபட்ட கருத்துடையயோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில்...
தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய... தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவது உண்டு. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையிலயே வித்தியாசம...

Be the first to comment on "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – காட்ஃபாதர் – மாஃபியா! – திரைவிமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*