சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம் பேசுறாங்க ! – மாவீரன் கிட்டு வசனங்கள்!

Maaveeran Kittu dialogues
 1. நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்… ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு… அந்த வரலாறு சாதிய சமத்துவம் உண்டாகுற சூழ்நிலைய சொல்லிட்டே இருக்கு… ஒரு காலத்துல மேலத்தெரு கீழத்தெருன்னு சொல்லிட்டு இருந்தவங்க அதுக்கப்புறம் அந்த தெருவெல்லையாம் கூட சாதியோட சேத்துடாங்க… அவிங்களுக்கு ஒரு பாதை இவிங்களுக்கு ஒரு பாதைன்னு எப்ப பிரிச்சாங்களோ அன்னைலருந்து பகையும் வன்முறையும் வளந்துருச்சு…

 

 1. பொறக்குறதுக்கு முன்னாடி தெரியுமா அவன் இவன்னு இவன் அவன்னு… செத்ததுக்கு அப்புறம் எல்லாரும் பொணந்தான…

 

 1. செருப்ப கால்ல தான் போடனும்… பரவாலன்னு நினைச்சு தலைல தூக்கி வச்சுக்கிட்டா பாக்குறவங்களாம் சிரிப்பானுங்க…

 

 1. சோத்துக்கே வழியில்லாத பசங்களாம் சோஷிலிசம் பேசுறாங்க…

 

 1. “பிரச்சினை வேண்டாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போங்க… “

 

” நாங்க விட்டுக்கிட்டே தான் சார் இருக்கோம்… அவிங்க எப்ப குடுப்பாங்கன்னு தான் தெரியல… “

 

 1. படிப்புங்கறது வெறும் அறிவு… அது வெளில இருந்து வர்றது… அதவிட முக்கியமானது ஒன்னு இருக்கு… அன்பு… மத்தவங்களுக்காக வாழ்றது…

 

 1. வாழ்க்கைல ஒருத்தன் எவ்ளோ சம்பாதிச்சுருக்கேன்னு காட்றத விட எவ்வளவு படிச்சுருக்கேன்னு காட்றதுதான் பெரும…

 

 1. குட்ட குட்ட குனிஞ்சிட்டே இருப்போம்னு நினைக்காத… என்னைக்காவது ஒரு நாள் நிமிந்தம்னா தாங்கமாட்ட…

 

 1. கைநீட்டி பேசற நீ… ஒரு நாள் எனக்கு முன்னாடி கைகட்டி நிற்கிற நிலைமை வரும்…

 

 1. சந்தோசமோ துக்கமோ கண்ல வர கண்ணீர் தான் சாட்சி… உன் கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலே போதும் மனசுல இருக்குற துக்கமும் அழுக்கும் காணாம போயி மனசே லேசாயிடும்…

 

 1. குடுக்கற தெய்வம் கூரைய பிச்சுட்டு குடுக்கும்னு சொல்வாங்க… கூரையே இல்லாத நமக்கு எந்த தெய்வம் எத பிச்சுக்கிட்டு குடுக்கும்…

 

 1. ” ஒழுங்கா ஒக்காந்து ஒன்னுக்கே அடிக்க தெரியாத பயளுக இன்னிக்கு என்ன தெலக்கனமா போறாங்க பாரு நாட்டாம… “

 

” எல்லாம் அந்த காமராசரால வந்தது… படிக்க வைக்கிறேன் படிக்க வைக்கிறேன்னு சொல்லி நம்மள முட்டாளாக்கிட்டாரு… “

 

 1. ” ஒங்கள மாதிரி ஆளுகளுக்கு அதிகாரத்துல இருக்குற எல்லாருமே தப்பா தான் தெரியுறாங்க… “

 

” அதிகாரத்துல இருக்கறவங்கள தப்புன்னு நாங்க சொல்லல… அதிகாரமே தப்புனு தான் நாங்க சொல்றேம்…

 

 1. சுடுகாட்டுல ஆரம்பிச்சு பஸ்சு படிப்பு பந்தின்னு இப்ப படுக்கை வரைக்கும் வந்துட்டானுங்களா… இவனுங்கள இப்படியே புழங்க விட்டுக்கிட்டு இருந்தா நாம போக வேண்டியதுதான்…

 

 1. சட்டமும் அதிகாரமும் பொதுவுனாலும் அத அவிங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க… நமக்குப் பின்னால நிக்கறதுக்கு பெரிய அரசியல் கட்சியோ தலைவரோ இல்ல… ஒன்னா நிக்கறதுக்கு நம்ம மக்கள்ட்ட திராணியும் இல்ல… நம்மகிட்ட இருக்கறதெல்லாம் சத்தியமும் கனவும் மட்டும்தான்… எத்தனையோ வருசமா சாதிங்கற விசத்த ஊத்தி ஊத்தி வளத்துருக்காங்க… அந்த விஷத்த முறியடிக்க பல பேரு போராடி செத்தும் போயிருக்காங்க… அந்த சாவுல இருந்துதான் நீயும் நானும் முளைச்சி கேள்வி கேட்க வந்துருக்கோம்… சொன்னத மட்டுமே கேக்குறவங்க திரும்பி கேள்வி கேட்கும்போது அவிங்களால தாங்கிக்க முடியல… ஓட்டுங்கற ஒரு உரிமைய தவிர இந்த நாட்டுல நாம வாழ்றதுக்கு வேற என்ன உரிமை இருக்கு… அடிச்சவன் அடிச்சுக்கிட்டே இருக்கான்… திருப்பி அடிச்சா திமிருங்கறான்…

 

 1. மாட்ட கழுவிட்டு இருந்தவன் மாவட்ட கலெக்டர் ஆகனும்னு நினைச்சா வுடுவாங்களா… அதான் கொன்னுட்டாங்க…

 

 1. கூட்டமா கூடுனா சட்டவிரோதம்னு சொல்றிங்க… சட்டமே எங்களுக்கு விரோதமா தான் செயல்படுதுனு தனித்தனியா வந்து சொன்னா மட்டும் கேப்பிங்களா…

 

 1. சூழ்ச்சியினால தான் இங்க எல்லா போராளிகளும் தோத்துருக்காங்க… தயவுசெஞ்சு நம்ம போராட்டத்த யாரும் தோக்க வச்சிராதீங்க…

 

 1. இந்த உலகத்துல எத்தனையோ போராட்டம் துரோகிகளால தோத்துருக்கு… அதையும் தாண்டி எத்தனையோ போராட்டம் தியாகத்தால ஜெயிச்சிருக்கு…

 

 1. நம்ம போராட்டம் ஜெயிக்கணும்னா நான் சாகணும்… நம்ம போராட்டம் ஜெயிக்கும்…

Related Articles

நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ள...
செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று... இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்...
இனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க... இரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்? இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கா...
குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் ப... தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. ஃபுல்லி என்ற யூடிப் சேனலில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் கி...

Be the first to comment on "சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம் பேசுறாங்க ! – மாவீரன் கிட்டு வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*