மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

Pakistan gets it's first transgender school

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது. எக்ஸ்ப்ளோரிங் பியூச்சர் பவுண்டேசன்(Exploring Future Foundation) என்ற தன்னார்வ அமைப்பின் முதல் திட்டப்பணியாக இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டிருக்கிறது.

திறன் வளர்க்கும் கல்வி

‘திருநங்கைகளின் திறன் வளர்க்கும் வகையிலான பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்’ என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோசியா தாரிக் தெரிவித்து இருக்கிறார். ஆடை தொழில், ஃபேஷன் வடிவமைப்பு, எம்பிராய்டரி , தையல் , கிராபிக் டிசைனிங் மற்றும் சமையல் திறன் போன்ற படிப்புகளில் திருநங்கைகள் மிக அதிக ஆர்வத்தைக் காட்டினார். அவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பாடத் திட்டத்தை வடிவமைத்தோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

உத்வேகம் கிடைத்தது எப்படி?

‘இப்போதைக்கு முப்பது பேர் பள்ளியில் சேர்ந்திருக்கின்றனர்’ என்று பள்ளியின் முதல்வர் ஆசிப் ஷேஷாத் தெரிவித்தார்.

‘இந்தோனேசியாவில் இயங்கி வந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளியில் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இஸ்லாமிய நாடுகளில் இயங்கி வந்த ஒரே மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளியும் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதே போன்றதொரு பள்ளியை உருவாக்கத் திட்டமிட்டோம்’ என்று ஆசிப் மேலும் தெரிவித்தார்.

டிப்ளமோ படிப்புகளைத் தந்து திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை, தொழிலை ஏற்படுத்தித்
தருவது ஒன்றே பள்ளியின் நோக்கமாகும்.பள்ளியில் சேர்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. 2017 கணக்கெடுப்பின் படி, பாகிஸ்தானில் மொத்தம் 10418 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

பாகிஸ்தானிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.

Related Articles

பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க... இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...
கூவம் நதி தாமிரபரணியைக் காட்டிலும் புனித... "சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும்...
வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண... நெருக்கடியான வாழ்வில் ஒரு இளைப்பாறுதலை, நிழலை நமக்குப் பண்டிகைகளே தருகின்றன. சிறு வயதில் நமது ஊர்களில் கொண்டாடிய பண்டிகைகள் இன்னமும் நம் மனதில் பசுமைய...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...

Be the first to comment on "மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்"

Leave a comment

Your email address will not be published.


*