பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் சிறுகதை தொகுப்பு ஒரு பார்வை!

A view on Perumal Murugan's peakkathaigal Short Story

வேக்காடு, பீ வாங்கியின் ஓலம், பீ, கடைசி இருக்கை, கருப்பணார் கிணறு, அத்தை வீட்டுக் கோடை, தோழர் பிஎம்மின் வெற்றி, வராக அவதாரம், கருதாம்பாளை, சந்தனச் சோப்பு, நின்றவண்ணம் கிடந்தவண்ணம், புகை உருவங்கள், மஞ்சள் படிவு, பிசாசுக்குப் போதுமான விஷயம் என்று பதினான்கு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளது.

அத்தப்பன், கன்னாயா, குமார், முத்து, மணி, சின்னவன், வெள்ளக் கவுண்டன், செந்தில், மஞ்சுளா, தோழர் பி. எம், வேங்கடேசன், நடராஜன் போன்ற பலர் இந்த சிறுகதை தொகுப்பை நகர்த்திச் செல்கிறார்கள்.

வேக்காடு சிறுகதையில் செலுவமூட்டுப் பக்கம் போனா யாராச்சும் ஒருகுடம் தண்ணி கொண்டு வர சொல்லுங்களே என்று ரோட்டில் போவோர் வருவோரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் கன்னாயா. இருந்தும் அவளுக்கு தண்ணி கிடைக்கவில்லை. குடிக்க குளிக்க என்று இரண்டுக்கும் தண்ணீர் இல்லை. காரணம் பஞ்சம். ஊரே தண்ணிக்காக அலைகிறது. அந்த ஊரில் அத்தப்பன் என்றவன் கிணற்றில் மட்டும் நன்றாக தண்ணீர் இருக்கிறது. ஊர்க்காரர்கள் தண்ணி எடுக்காதபடி கிணற்றின் ஒரு பகுதியில் பீயைக் கொட்டி வைத்திருக்கிறான். தண்ணீர் பஞ்சம் வாட்டி எடுக்க கடைசி வரை வெறும்பானையை சுரண்டிக் கொண்டிருக்கிறாள் கன்னாயா.

பீவாங்கியின் ஓலம் சிறுகதையில் புளிச்ச தண்ணீ கொட்டுவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்கள் ஒரு தம்பதியினர். கடைசியில் கக்கூசில் உள்ள பீவாங்குக்குள் அன்னக் கூடையை கவிழ்த்தி மலத்தையும் உணவுப் பொருளையும் ஒரே குழிக்குள் கலக்கும்படி செய்கிறார்கள். கடைசியில் அந்த மலக்குழி நாயகியை விழுங்குகிறது. இது கனவா? நிஜமா ? என்று முடிகிறது.

கடைசி இருக்கை சிறுகதையில் ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் ” அம்மா ஆய் வருது… ” என்று கண்ணீர் மல்க கூற  பேருந்து நிற்குமா என்று தயங்குகிறாள் அம்மா. பாட்டியோ நடத்துனரிடம் பட்டென்று கேட்டுவிட நடத்துனர் மாட்டேன் என்கிறார். சிறுவன் அழும் நிலைக்கு வந்துவிட பாட்டி பஸ்சுக்குள்ளயே சீட்டுக்கு நடுவில் ஒரு காகிதத்தை விரித்து அதில் பேரனை ஆய் போக சொல்கிறாள். எல்லாரும் திட்ட எடுத்துப் போட்றன்யா என்பதை பதிலாக சொல்கிறாள் பாட்டி. இவ்வளவு நேரம் தூங்கி வந்த பயணி திடீரென முழித்து என்ன பிரச்சினை என்பதை முழுதாக தெரிந்துகொள்ளாமல் வண்டியை போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்க என்கிறார். அந்தாளுக்கும் எடுத்துப் போட்றன்யா என்பதையே பதிலாக சொல்கிறாள் பாட்டி.

இது போன்றே ஒவ்வொரு சிறுகதையும் ” மலத்தை வெளியேற்றுதல் ” என்பதையே மையமாக கொண்டுள்ளன இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதைகள். பதினோரு சிறுகதைகளில் வராக அவதாரம் சிறுகதை எல்லோருக்கும் பிடித்தமான சிறுகதையாக இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

விலை : 60

Related Articles

பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் ... கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இன்று மீம் என்பது கலை வடிவமாகப் பார்க்கப் படுகிறது. பல சமூக மாற்றங்களும் சி...
விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த...  கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில ச...
வெ. இறையன்புவின் “நமக்குள் சில கேள... வெ. இறையன்பு மிக சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீட்டு நூலகம் வைத்திருப்பவர்களின் வீட்டில் கண்டிப்பாக அவருடைய புத்தகம் எதாவது இடம் ப...

Be the first to comment on "பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் சிறுகதை தொகுப்பு ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*