நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் நடந்தது என்ன? – அக்னி தேவி விமர்சனம்

Agni Devi Movie Review

க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அக்னிதேவி font style ஐ வித்தியாசமாக காட்ட தொடங்கியவர்கள் படம் முழுக்க வித்யாசமான காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்ட வேண்டும் என்று மெனக்கெட்டு உள்ளார்கள்.

தான் நடித்த படத்தின் மீது வழக்குப் போடும் அளவுக்கு படக்குழுவுக்குள் அவ்வளவு சண்டை. தேசிய விருது வென்ற ஒரு நடிகரை மதிக்காமல் வேறொரு ஆளுக்கு டூப் போட்டு வேறு ஒரு ஆளை வைத்து டப்பிங் செய்து என்று படத்தை நாசம் செய்து வைத்துள்ளார்கள். பாபியின் குரலை கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படம் எவ்வளவு பொருந்திப் போகும் என்பது தெரியவில்லை.

சத்யா பட பாணியில் ஹீரோ அறிமுக காட்சியில் ஹாஸ்பிடல் உள்ளே காயங்களுடன் அட்மிட் ஆகிறார். பிளாஸ் பேக் விரிகிறது. தன்னை சந்தித்து பேட்டி எடுக்க இருந்த அருணா என்ற இளம்பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை ஒரு இளைஞன் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்கிறான். அங்கிருந்த இளைஞன் ஒருவனை கைது செய்கிறார்கள். அந்தக் கொலையை செய்தது அந்த இளைஞன் தானா? இந்தக் கொலைக்குப் பின்னே யாருடைய தலையீடு இருக்கிறது என்பதை ஐபிஎஸ் அக்னிதேவ் கண்டறிகிறார் என்பதே மையக்கரு. தூக்கில் தொங்கும் அருணா அண்ணன் திலீப்பை பாத்து பாபி குடுக்கும் ரியாக்சன் ஒன்று போதும். பாபி எப்படிபட்ட நடிகரென்று தெரிந்துகொள்ள. அவருடைய நண்பராக சதீஷ் வருகிறார். ரொம்ப இறுக்கமாக செல்லும் இடங்களில் தனது ஒன்லைன் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். வில்லியாக மதுபாலா. கலைஞர், இந்திராகாந்தி, ஜெயலலிதா, சசிகலா என்று அனைவரையும் கலந்து வில்லத் தனத்தை ஒரே உருவத்தில் காட்டுகிறார். குறிப்பாக ஊஞ்சலில் உக்காந்து பேசும் காட்சி செம! அற்புதமான நடிப்பு. சிறந்த வில்லிக்கான விருதுகள் காத்திருக்கிறது. எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ் இருவரும் வழக்கம்போல முத்திரை பதிக்கிறார்கள். ரம்யா நம்பீசனை இன்னும்கொஞ்சம் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

  1. ” உலகத்துலயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுங்கள்ல இந்தியா தான் லீடிங்ல இருக்கு… “
  2. ” டெக்னாலஜி டெவலப்மெண்ட்ங்கற பேருல மனுச கண்டுபிடிக்கற ஒவ்வொரு விஷியமும் நமக்கே பிரச்சினையா மாறுது “
  3. ” நேர்மைனா தேவப்படும்போது சின்சியர இருக்கற மாதிரி நடிக்கறது இல்ல… மனசாட்சிக்கு விரோதமில்லாம நடந்துக்குறது “
  4. ” பசிக்கு அரிசி திருடுனவன அடிச்சி கொன்னவங்க கோடி கோடியா கொள்ளை அடிச்சவன வெளிநாட்டுக்கு தப்ப உட்டுட்டு இருங்க… “

போன்ற வசனங்களில் வசனகர்த்தா கருந்தேள் ராஜேஷ் கவனம் ஈர்க்கிறார்.

நுங்கம்பாக்கம் சுவாதி ராம்குமார் விவகாரத்தை திரையில் காட்ட தனி தைரியம் வேண்டும். அதையடுத்து டிமாணிடைசேஷன், கண்டெய்னர் விவகாரம், ராஜீவ் மரணத்திற்கு பின் கலவரம், அமைச்சர்களின் டயர் நக்குதல் என்று அரசியலை ஒரு பிடிபிடித்திருக்கிறார் இயக்குனர்.

பாடல்கள் இல்லாதது பலம். 1 மணி 40 நிமிடங்கள் என்றாலும் ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பு தட்டியது. கிளைமேக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. பர்ஸ்ட் ஆப் மங்களா லாட்ஜ் பைட் சீன் சூப்பர். செகண்ட் ஆப் பைட் சீன் சுமார். மொத்தத்தில் நுங்கம்பாக்கம் ராம்குமார் விவகாரத்திற்காகவே இந்தப் படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

Related Articles

கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும் தீயணை... சேத் ரான்ஸ், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒன்டே மேட்சுகள் மற்றும் நான்கு டி20 மேட்சுகள் விளையாடி வருபவர். இவர் நடக்க இருந்த பெரிய தீ விபத்த...
சிம்புவின் அடுத்த படமும் ட்ராப்! –... கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பாத்ரூம விட்டு வெளிய வரமாட்றான் என்று சிம்புவை பற்றி பேசியவர் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. சிம்பு ஷூட்டிங்க்கு...
புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ப... புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியவை பின்வருமாறு:தீவிரவாதத்தால் நாங்கள் இதுவரை 70 ஆயிரம் பேரை இழந்து உள்ளோம் !...
சன்ரைர்ஸ் ஹைதராபாத் (SRH) ஐபிஎல் 2018 அண...  வரிசை எண் போட்டி எண் தேதி சன்ரைர்ஸ் ஹைதராபாத் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதர...

Be the first to comment on "நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலையில் நடந்தது என்ன? – அக்னி தேவி விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*