தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – மக்கள் கொண்டாடுகிறார்களா? கொலைவெறியில் இருக்கிறார்களா?

tamilnadu govt's ruling ..people enjoying it or against it

2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு
ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று சாதனை புரிந்தது இந்த ஆட்சி. இவர்கள் செய்த சாதனைகள் என்று செய்த “சில” நன்மைகளை பார்ப்போம்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ 2147 கோடி நிலுவைத் தொகை வழங்கியுள்ளது. அதே
சமயம் பேருந்து கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கினார்கள்.
இருப்பினும் போக்குவரத்து துறை நஷ்டத்தில் தான் ஓடுகிறது என்றார் ஓபிஎஸ்.

ரூ.670 கோடியில் மடிக்கணினி வழங்கியிருக்கிறார்களாம். அதில் எத்தனை கணிணிகள்
முறையாக மாணவர்களைச் சென்றடைந்தது என்பது வெளிச்சத்துக்கு வரவே இல்லை. பாதிக்கும்
மேற்பட்ட பள்ளிகளில் வழங்கப்படாமலே இருக்கிறது. இன்னும் ஒரு சில பள்ளிகளில் இலவச
பள்ளி சீருடை கூட வழங்கப்படாமல் குடோனில் தேக்கி வைத்து குப்பையாக கிடக்கிறது.

ரூ.267.66 கோடியில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகள் பல
வழங்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு செலவு செய்தது யாருடைய பணம்
எவ்வளவு செய்தார்கள் என்று சொல்லவில்லை. அந்த சமயத்தில் டெங்குவால் உயிரழந்தோர்
எண்ணிக்கை நூறைக் கடந்திருந்தது.

பத்து லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5713 கோடி பயிர்க்கடன் வழங்கியுள்ளது. அப்படி இருந்தும்
விவசாயிகள் டெல்லியில் கோவணத்தோடு போராடி உள்ளார்கள். இன்னமும் அய்யாக்கண்ணு
பிரதமர் வீட்டு வாசலில் தூக்குப் போட்டுக்கொள்வேன் என்கிறார்.

கதிராமங்கல போராட்டம் முந்நூறு நாட்களைத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் ஔராண்டு சாதனையை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு
இன்னமும் மக்கள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

Related Articles

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...
விருமாண்டி படத்திற்கும் பாக்ஸர் வடிவேலுவ... முதலில் பாக்ஸர் வடிவேலுவை பற்றி பார்த்து விடுவோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பாக்ஸர் வடிவேலு என்பவர் பெயர் அடிக்கடி பத்திரிக்கைகளில் வந்துள்ள...
பெரிய நடிகர்கள் சுயநலமா இருக்காங்க ̵... பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்துபிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவற்றின் சில கேள்விகளும் பத...
ஜோதிகாவின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக... அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்த தக்க பதில்களே கிடை...

Be the first to comment on "தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – மக்கள் கொண்டாடுகிறார்களா? கொலைவெறியில் இருக்கிறார்களா?"

Leave a comment

Your email address will not be published.


*