இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Interesting information about Director Bala!
 1. மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார்.
 2. ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வேலை பணியாற்றினார். அம்மா ஹவுஸ் ஒய்ப்.
 3. தேவன் பட்டியிலிருந்து வாடிப்பட்டிக்கு குடியேறினார். அங்குள்ள பள்ளியில் படித்தார். அபேஸ் பாலையா என்பது இவரது பட்டப் பெயர்.
 4. பெரிய குளத்திலிருக்கும் பாலாவின் அத்தைக்கு ஆண் வாரிசு இல்லாததால் பாலாவை தத்துக்கொடுத்தார்கள் பெற்றோர்கள். பிறகு பெரிய குளத்திலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்தார்கள்.
 5. எட்டாம் வகுப்பு படிக்கும் போது கஞ்சா அடித்து அண்ணனிடம் மாட்டியுள்ளார். பிறகு தேனி நாடார் சரஸ்வதி ஸ்கூலில் ஹாஸ்டாலில் சேர்ந்து படித்தார்.
 6. ஜானி என்ற ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்த்தார். அதேபோல லட்சுமி என்ற பசுமாட்டை ஆசையோடு வளர்த்தார்.
 7. மன்சூர், ஹானஸ்ட், ஆண்டனி, அழகேசன் ஆகியோர் பாலாவின் பால்யகால நண்பர்கள்.
 8. நாட்டியப் பேரொளி பத்மினியின் தீவிர ரசிகர் பாலா.
 9. ப்ளஸ் டூவில் 1200 க்கு 555 மதிப்பெண் எடுத்தார் பாலா.
 10. அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தார். பேராசிரியர் ஐசக்கை மற்றும் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தை பாலாவுக்கு ரொம்ப பிடிக்கும். சாலமன் பாப்பையா அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
 11. விடுதலை புலிகள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடுகிற வழக்கறிஞர் சந்திர சேகரன் தான் அப்போது பாலாவின் ராஜகுரு.
 12. கல்லூரி காலத்தில் பாலாவுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்தது.
 13. தனது குருவான பாலுமகேந்திரா இயக்கயதில் வீடு படம் தான் பாலாவுக்கு மிகவும் பிடித்த படம்.
 14. பாலுமகேந்திரா இயக்கிய சந்தியா ராகம் படத்தில் போஸ்ட்மேனாக நடித்துள்ளார் பாலா.
 15. மூன்று வருட கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் சினிமா எடுக்க சென்னை போலாம் என திட்டமிட்டார். பஸ்சுக்கு காசு இல்லை. மதுரை சித்திரை திருவிழாவில் புளியோதரை விற்று காசு சேர்க்கலாம் என்று முடிவெடுத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். ஆனால் வியாபாரம் நஷ்டத்தில் முடிந்தது.
 16. சினிமா தான் வாழ்க்கை என்று முடிவானதும் கையில் எட்டாயிரம் ரூபாய் பணத்தோடு சென்னை வந்தார். சென்னை வந்ததும் அவருக்கு உதவியர் பெயர் கபார்.
 17. பாரதிராஜா, பாக்யராஜ், மணிவண்ணன், சுந்தர் ராஜன், கவுண்டமணி, செந்தில், ராமராஜன் என்று பலருக்கு ஆரம்ப முகவரியா இருந்த 115, எல்டாம்ஸ் ரோடு என்ற முகவரியில் குடியேறினார்.
 18. மல்லிகாம்பாள் – ராமசாமி தம்பதியினர் விட்ட வாடகை வீட்டில் குடியிருந்தார்.
 19. டைரக்டர் ராம்திலக் இயக்கிய ஜனகராஜ் ஹீரோவாக நடித்த பாய் மரக் கப்பலின் பட பாடல் காட்சி ஒன்றில் முதல்முறையாக ஒருநாள் உதவி இயக்குனராகப் பணியாற்றினார் பாலா.
 20. பாலாவுக்கு முதல் முறையாக சினிமா சோறு போட்டவர் பெயர் மல்லியம்பட்டி மாதவன்.
 21. தன்னுடைய தாயுமானவனிக கவிஞர் அறிவுமதியை கருதுகிறார் இயக்குனர் பாலா.
 22. தன் அப்பாவுக்கு அடுத்த படியாக பாலா நேசிக்கும் முதல் மனிதர் பாலுமகேந்திரா.
 23. பாலுமகேந்திராவின் வீடு படத்தில் முதல்பட உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
 24. உதவி இயக்குனராகப் பணியாற்றிய வீடு படத்தை தியேட்டரில் 37 முறை பார்த்தார் பாலா.
 25. பாலா முதல்முறையாக கிளாப் போர்டு பிடித்த படம் சந்தியா ராகம்.
 26. சந்தியா ராகம் படத்தை தொடர்ந்து சக்ரவியூகம் என்ற தெலுங்குப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி உள்ளார்.
 27. பாலாவின் முதல் விமான பயணம் பாலுமகேந்திராவுடன் அமைந்தது. பாலுமகேந்திரா தான் பாலாவுக்கு விமான விதிமுறைகளை பெல்ட் அணியும் முறையை கற்றுத் தந்தார்.
 28. பாலுமகேந்திராவை தன்னுடைய அப்பாவாக நினைக்கும் பாலா இளையராஜாவை கடவுளாக நினைக்கிறார். இளையராஜாவை எப்போது பார்த்தாலும் காலில் விழுந்து வணங்கிவிட்டு தான் பேச ஆரம்பிப்பார். இளையராஜாவின் பாடல்களை கேட்காமல் பாலா ஒருநாளும் உறங்கியதில்லை.
 29. பாலுமகேந்திராவின் அலுவலகத்தில் தங்கினார் பாலா. பாலுமகேந்திராவிடம் கோபித்துக்கொண்டு பாலா வெளியேறியதுண்டு.
 30. சென்னைக்கு வரும்போது ஐந்து வருடங்களுக்குள் தனியாக படம் பண்ணனும் என்று முடிவோடு வந்தார். ஆனால் தனியாக படம் பண்ண ஏழு வருடங்கள் ஆகிவிட்டது.
 31. கதை தேடி அலைந்த பாலாவுக்கு கவிஞர் அறிவுமதியின் புத்தகத்தை படித்த பிறகும் ஏர்வாடி சென்று வந்த பிறகுமே கதை தோன்றியது. சேது படத்திற்கு அவர் முதலில் தலைப்பிட்ட பெயர் ” அகிலன் “.
 32. பாலாவும் விக்ரமும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.
 33. சுவாமிமலை சென்றிருந்த போது நேரில் கண்ட அப்பா மகள் நிலையை மையப்படுத்தி சேது படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகியின் அப்பா பாத்திரத்தை வடிவமைத்திருப்பார்.
 34. விக்ரமின் பிள்ளைகள் அக்ஷிதா மற்றும் துருவ் இருவரும் பாலாவுக்கு நெருங்கிய நண்பர்கள்.
 35. அக்ஷிதா மற்றும் துருவ் இருவரும் பாலாவை மாமா என்றே அழைப்பார்கள். பாலாவின் அகிலன் படம் பூஜை நாளன்று ட்ராப் ஆனது. தற்போது பல வருடங்கள் கழித்து வர்மா படம் முடக்கம் செய்ய ப்பட்டு உள்ளது. பாலாவின் சேது படத்துக்கு ஆனந்த விகடன் போட்ட மதிப்பெண் சன் டிவி குறிஞ்சி மலர் என்று பாராட்டியது. அதன் பிறகு படத்தின் ரிசல்ட் டோட்டலாக மாறி மாபெரும் வெற்றியை பெற்றது. பாலா இயக்கிய படங்களை பாலுமகேந்திரா பார்த்ததே இல்லை. சேது திரைப்படம் சிறந்த தமிழ்படம் என்று தேசிய விருது பெற்றது. நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனராக்கான தேசிய விருதைப் பெற்றார் பாலா.

 

Related Articles

உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்ட... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்...
பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!... இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. அதன் படி வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்...
விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச... அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...
#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...

Be the first to comment on "இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*