குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும் இனி கட்டணம்

parking

தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில். குடிமை முகவர்களும், குடியுரிமை நலச் சங்கமும் பரஸ்பரம் பேசி எவ்வளவு கட்டணம் என்பதைத் தீர்மானித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் காலி மனைகளையும் இனி பார்க்கிங் செய்து கொள்ளும் இடமாகப் பயன்படுத்தலாம் என்று அதன் உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. Delhi Maintenance and Management of Parking Rules, 2017ல் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டு, அது டெல்லி ஆளுநர் அனில் பைசால் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

திட்ட வரைவின் விதிமுறைகள் போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த வரைவின் முக்கிய நோக்கமே நெரிசல் இல்லாத சாலையை உருவாக்குவதும், பொது போக்குவரத்து மற்றும் மின் வாகனங்களை மக்கள் அதிக அளவுக்குப் பயன்படுத்து ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடிப்படை பார்க்கிங் கட்டணத்தைத்  கண்காணிப்பு குழுவின் தலைவராகவும், தலைமை செயலாளராகவும் பதவி வகிக்கும் அன்ஷு பிரகாஷ் முடிவு எடுப்பார். தலைமை கண்காணிப்பு குழுவுக்கு வழிகாட்டியாகப் போக்குவரத்து ஆணையாளர் இருப்பார்.

தெருவில் வண்டியை நிறுத்துவதற்கும், குடியிருப்பு பகுதியின் திறந்தவெளியில் வண்டியை நிறுத்துவதற்கும் கட்டண வேறுபாடுகள் இருக்கும் என்று விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. முதல் ஒரு மணிநேரத்திற்குத் தெருவில் வண்டியை நிறுத்தச் செலுத்தப்படும் கட்டணம், குடியிருப்பு பகுதியில் வண்டியை நிறுத்தச் செலுத்தப்படும் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீக் ஹவர், மற்ற நேரங்கள் என்று பலவாறாக பிரித்து நேரத்திற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. சந்தையில் கடை வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் நாள் முழுவதும் தங்கள் வாகனங்களை மட்டும் நிறுத்தி வைத்திருப்பதைத் தடுக்கும் விதமாக, பீக் ஹவரில் சந்தையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் டெல்லி அரசு விதிமுறைகளை மாற்றி அமைத்திருக்கிறது. கட்டணத்தை மாதாந்திர பாஸ் மற்றும் டோக்கன் மூலம் செலுத்தும் வசதியும் டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

வீடுகளில் பார்க்கிங் செய்ய இடம் இருந்தும், தெருக்களில் தங்கள் வண்டிகளை பார்க்கிங் செய்திருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லி அரசு ஒட்டுமொத்த நாட்டிற்குமே பல திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

 

Related Articles

வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர... இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவி...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ... சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன், வசூல் சக்ரவர்த்தி என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள ரஜினிகாந்த் 12 - 12 - 1950 அன்று பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ப...
குலேபகாவலி – சினிமா விமர்சனம்... தயாரிப்பு: கே.ஜே.ராஜேஷ் ஸ்டூடியோஸ் இயக்கம்: கல்யாண் இசை: விவேக் - மெர்வின் ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்தகுமார் நடிப்பு: ரேவதி, பிரபு தேவா, ஹன்சிகா மோ...
நீ Bad – u ! நா Dad – u ! தன... மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. அதன் இரண்டாம் பாகமே கவிழ்ந்துவிட ஓடாத மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி ரிலீஸ் வரை வந்துவிட...

Be the first to comment on "குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும் இனி கட்டணம்"

Leave a comment

Your email address will not be published.


*