உடன்குடி மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்

Thermal

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1320 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூப்பர் க்ரிட்டிக்கல் வெப்ப சக்தி திட்டப்பணியை காணொளி கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்தபடியே அடிக்கல் நாட்டினார்.

பாரத கனரக மின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited) இந்த நிலக்கரி சார்ந்த மின் தயாரிப்பை செயல்படுத்த இருக்கிறது. அவற்றில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிறுவுதல், அதிகாரமளித்தல் மற்றும் சிவில் படைப்புகள போன்ற பணிகள் அடங்கும். இந்தத் திட்டத்திற்கான நிதியைக் கிராமப்புற மின்மாற்றி நிறுவனம் வழங்க இருக்கிறது. சந்திப்பில் பேசிய முதல்வர் 2X660  மெகா வாட் திறன் கொண்ட நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி ஆலைகள் 2021 – 2022 வாக்கில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கும். அப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கும் என்று தெரிவித்தார். 46821 மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழகத்திற்கு 6200 மெகா வாட் மின்சாரத்தைக்  கூடுதலாக தரும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

53890 கோடி மதிப்பில் மாநிலத்தின் மின் திறனை 9300 மெகா வாட் அளவுக்கு உயர்த்தத் திட்டம் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். 2011 ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 59 . 97 லட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டு இருப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். சந்திப்பின் போது உடன் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலத்தின் மின் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக 1 . 71 லட்சம் கோடி அளவுக்குத் திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், அதன்மூலம் மாநிலத்துக்கு 15500 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச... கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்ற...
மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! ̵... பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.அதி...
சாகித்திய அகாடமி விருது வெற்றியாளர் கேவி... 1. கேள்வி: கேரளாவுல பாலக்காட்டில் பிறந்திருந்தால் கூட இங்க வந்து ஒரு தமிழாசிரியரா இருக்கீங்க...  தமிழ் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்கு... தமிழ் சார்ந்த ம...
கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! ... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இள...

Be the first to comment on "உடன்குடி மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்"

Leave a comment

Your email address will not be published.


*