நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி

US Bangla plane crash in nepal

71 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

வங்கதேசத்தைச் சேர்ந்த விமானம்

யூஎஸ் பங்களா என்று பெயரிடப்பட்டு விபத்துக்கு உள்ளான விமானத்திலிருந்து மீட்பு குழுவினர் இறந்த உடல்களை மீட்டனர். இந்த விமானம் வங்கதேசத்தைச் சேர்ந்தது ஆகும். காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகளும், விபத்துக்குள்ளான விமானத்தைச் சார்ந்தவர்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவல்கள் தெளிவாக இல்லை என்று வங்கதேச அதிகாரிகளும், விமானம் தவறான திசையில் இருந்து அணுகியதாக காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகளும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.

எப்படி நடந்தது விபத்து?

திங்கள்கிழமை பகலில் இந்த விபத்து நிகழ்ந்தது. விமான ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடியதால் தீப்பிழம்பு உண்டானது. அது விமானத்தைப் பற்றி முழுவதும் தீக்கு இரை ஆக்கியது.. விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான ஒட்டிக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடந்த உரையாடலைக் கவனிக்கும் போது, இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து காத்மாண்டுவில் இயங்கும் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விமானத்தின் ஜன்னலை உடைத்துத் தப்பித்த ஒரு பயணி, தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான விமானம் கடுமையான அதிர்வினை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மீட்பு

காயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

யார் செய்த தவறு?

‘விமானம் ஓடுபாதையின் தெற்கு பகுதியில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விமானம் ஓடுபாதையின் வடக்கு திசையில் தரையிறங்கி விட்டது. விமானம் தவறான திசையை அணுகியது’ என்று நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சஞ்சீவ் கௌதம் தெரிவித்தார்.

‘அசாதாரண தரையிறக்கத்தின் பின்னணியை இன்னமும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

வங்கதேச அதிகாரிகளின் குற்றச்சாட்டோ இதற்கு நேர் எதிராக இருக்கிறது. யூஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி இம்ரான் ஆசிஃப் , காத்மாண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைக் குற்றம் சாட்டுகிறார்.

‘எங்களது விமான ஓட்டியின் மீது எந்தத் தவறும் இல்லை. பாம்பார்டியர் விமான நிலையத்தின் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார். 5000 மணி நேரத்திற்கும் அதிகமாக விமானம் ஒட்டிய அனுபவத்தைக் கொண்டிருப்பவர். அவர் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. காத்மாண்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தவறான அறிவுறுத்தல்கள் தரப்பட்டன. அதனாலேயே இந்த விபத்து நிகழ்ந்தது’ என்று அவர் தெரிவித்தார்.

காத்மாண்டு விமான நிலைய மேலாளர் ராஜ் குமார் பேசுகையில்  ‘விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக விமானம் வேலி மீது மோதியது, அதனாலேயே இந்த விபத்து நிகழ்ந்தது’  என்று கூறினார்.

பாதுகாப்பு அற்றதா நேபாள விமான நிலையம்?

தொடர் விபத்துகளின் காரணமாக நேபாள விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. மலைப்பாங்கான நிலப்பகுதி காரணமாக காத்மாண்டு விமானநிலையத்தில் தரையிறக்கம் சவாலாக இருக்கும் என்று பைலட்டுகள் கூறுகின்றனர்.

விமானம் 67 பயணிகள் மற்றும் நான்கு குழுவினரை சுமந்து சென்றது. பயணிகளில் 33 பேர் நேபாளிகள், 32 பேர் பங்களாதேஷ், ஒரு சீனர் மற்றும் ஒருவர் மாலத்தீவில் இருந்து வந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. 22 பேர் காயமடைந்தனர், சிலர் இன்னும் மோசமான நிலையில் உள்ளனர்.

ஒரு விமான ஊழியர், இரண்டு அல்லது மூன்று பேர் வீழ்ந்து அல்லது எரியும் விமானத்தின் ஜன்னல்களில் இருந்து குதித்து தப்பித்ததாகத் தெரிவித்தார்.

யூஎஸ் பங்களா ஜூலை 2014 இல் தொடங்கப்பட்டது மற்றும் அதன் கோஷம் “ஃப்ளை ஃபாஸ்ட், ஃப்ளை சேஃப்(Fly Fast, Fly Safe) ” ஆகும். அதன் முதல் சர்வதேச விமான பயணம் 2016 மே மாதத்தில் காத்மாண்டுவிற்கு சென்றதே ஆகும். இந்த விமானம் தற்போது தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் விமான நிலையங்களுக்குப் பறக்கிறது.

Related Articles

பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிம... தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கேன்சர் என்ற ஒரே நோயை திருப்பி திருப்பி ஆள் மாற்றி காண்பித்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வித்தியாசமான நோய் உடைய மனித...
கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்ப... திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிர...
13 years of சித்திரம் பேசுதடி – மா... வேலையில்லாத இளைஞன் செக்யூரிட்டி வேலைக்குச் சேர முயல்கிறான். அந்த சமயத்தில் ரௌடியின் மகனை நாயகன் இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்ற, ரௌடியிடம் நாயகனுக்க...

Be the first to comment on "நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி"

Leave a comment

Your email address will not be published.


*