" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்க சகாயம் சார்… " – சகாயம் அரசியல் வருகை

Don't-Trust-them-and-Entire-Poltics-Sagayam-IAS

தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா
இறப்புக்குப் பின் திறமையான தலைமை அமையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த
ரஜினி, கமல் அரசியலில் நுழைந்துவிட்டார்கள். இப்போது இவர்கள் வரிசையில் நேர்மைக்கு
பெயர் போன இளைஞர்களின் மனம் கவர்ந்த சகாயம் ஐஏஎஸ் அவர்களும் அரசியலுக்கு வர
இருப்பதாக பேச்சு அடிபட தொடங்கியுள்ளது.

நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி.
சமீபகாலமாக இவர் ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயப்புரட்சி என்று சமூக சேவையில் அதிக
கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்று
குவித்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் ” மாறுவோம்… மாற்றுவோம்…” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை
நடத்தியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சகாயம் ஐஏஎஸ், வேலைக்காரன் பட இயக்குனர்
மோகன்ராஜா மற்றும் இயக்குனர் அமீர், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் சிறப்பு
விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது, இயக்குனர் அமீர் சகாயம் அவர்களை பார்த்து,”உங்களை போன்ற
நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நீங்களாவது ரஜினியை போல காலம்
தாழ்த்தாமல் உரிய நேரத்தில் வரவேண்டும் ” என்று கூறினார். நடிகர் சிவகார்த்திகேயன்,
இயக்குனர் மோகன்ராஜாவும் இதையே கூறினர். இவர்களையடுத்து பேசிய சகாயம், " நான்
என்னைக்கு ஊழிலை எதிர்த்தேனோ, அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன்… " என்றார்.
இதனையடுத்து ரஜினி, கமலை போல இவரும் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என்று பலர்
அரசல்புரசலாக பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் சகாயத்தின் நலம் விரும்பிகள் சிலர், ” சார்… உங்கள இப்பிடித்தான் வாங்க
வாங்கன்னு உசுப்பேத்துவாங்க… இவிங்கள நம்பி அரசியலுக்கு வந்திடாதிங்க… ஆரம்பத்துல
ஆதரவு தெரிவிப்பாங்க… ஆனா எலக்சன் டைம்ல காசு வாங்கிட்டு அப்படியே பைட்டி
அடிச்சிடுவாங்க… ” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது முற்றிலும் ஏற்கக்கூடிய கருத்து.

மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்படும் இரோம் சர்மிளா, பதினாறு ஆண்டுகளாக அந்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஆயுதச்சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். அவரை ஆரம்பத்தில் அரசியலுக்கு வந்தால் உங்கள் கையில் ஆட்சி என்று சிலர் உசுப்பிவிட, தேர்தலில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அந்த கடின போராளிக்கு மக்கள் கொடுத்த பரிசு அதுதான்.

அடுத்தது நம்ம ஊர் நல்லக்கண்ணு மற்றும் டிராபிக் ராமசாமி போன்றோரும் அதே போல
தோல்வியைச் சந்தித்தார்கள். இப்போது இந்த வரிசையில் சகாயம் அவர்களை தள்ள
பார்க்கிறார்கள் என்றும் மேலும் அவர் வந்தால் அவருடைய மதத்தை வைத்து சகட்டுமேனிக்கு, “இந்த சகாயம் யார் தெரியுமா… இந்த சகாயம் எப்படிபட்டவர் தெரியுமா… ” என்று
பொய்க்குற்றச்சாட்டுகளை வாரி தெளித்து அவரை கீழே இறக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இவ்வளவு வருடங்களாக நேர்மையை கடைபிடித்து எடுத்த நல்ல பெயரெல்லாம் அரசியலுக்கு
வந்தால் அவருடைய உழைப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீராக மாறிவிடும்… என்று
அரசியலையும் மக்களின் மனப்போக்கையும் தெரிந்த சிலர் அவருடைய நலம் விரும்பிகளாக
அவரை அரசியலுக்கு வரவேண்டாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

அவர்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரி தான். வேலைக்காரன் படத்தில் வந்த வசனம் போல, நாம்
மாறாமல் சகாயம் வந்தால் எல்லாம் மாறிவிடும் என எண்ணுவது ஆகச்சிறந்த பேத்தனம்.
இவர்கள் அப்துல்கலாமையே ஆர்எஸ்எஸ் நக்கி என்று சொன்னவர்கள் சகாயம் சார்…!

Related Articles

இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு R... தெலுங்குக்கு எப்படி பாகுபலியோ கன்னட திரை உலகுக்கு கேஜிஎஃப் அப்படி! என்று ஏகப்பட்ட பில்டப் இந்தப் படத்துக்கு. பில்டப்புக்கு தகுந்தாற் போல படம் இருக்கிற...
மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுத... உலக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போராளிகள் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அதே போல காந்தி, நேரு, அண்ணா, அப்துல்கலாம் என்று பலர் கடிதம் எழுதி உள்ள...
அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்... இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், சைத்தான், திமிரு புடிச்சவன் இப்படி தொடர் தோல்வியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கொலைகா...
சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?... நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத...

Be the first to comment on "" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்க சகாயம் சார்… " – சகாயம் அரசியல் வருகை"

Leave a comment

Your email address will not be published.


*