இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட் முகக்கண்ணாடிகள்

இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட் முகக்கண்ணாடிகள்

ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது கூகுள் க்ளாஸெஸ் (Google Glasses) என்னும் தயாரிப்பு. அந்த முகக்கண்ணாடியை நீங்கள் அணிந்து கொண்டால், அது உங்களுக்கு வழி காட்டும், அதில் நீங்கள் சினிமா பார்க்கலாம், உங்களைச் சுற்றி இருப்பவர்களை நிழற்படம் மற்றும் காணொளியில் பதிவு செய்து அதை அதே கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கலாம் போன்ற எண்ணற்ற வசதிகளோடு அறிமுகம் செய்யப்பட்டது கூகுள் க்ளாஸெஸ். ஆனால் கூகுளின் அந்த தயாரிப்பு சந்தைக்கு வருவதற்கு முன்பு அது மக்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை வெகுவாக பாதிப்பதாக கண்டனங்கள் எழுந்ததால், கூகுளின் அந்த தயாரிப்பு தடை செய்யப்பட்டது.

இன்டெல் நிறுவனத்தின் முயற்சி

இதைத் தொடர்ந்து ஸ்மார்ட் முகக்கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறது இன்டெல் நிறுவனம். இதில் அப்படி என்ன இருக்கிறது? கூகுள் உருவாக்கிய கூகுள் க்ளாஸெஸ் தயாரிப்பில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது? அறிந்து கொள்வோம்.

இன்டெல் உருவாக்கியிருக்கும் இந்த ஸ்மார்ட் முகக்கண்ணாடிக்கு வாண்ட் (Vaunt) என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. பார்வை சமன்பாட்டுக்காக நாம் பொதுவாக அணிந்து கொள்ளும் முகக்கண்ணாடியின் தோற்றத்தில் இருந்து முற்றிலும் பிரித்து அறிய முடியாத தோற்றத்தை கொண்டிருக்கிறது இன்டெல் நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஸ்மார்ட் முகக்கண்ணாடியான வால்ட்.

என்ன வித்தியாசம்?

கூகுள் க்ளாஸெஸ் தயாரிப்பில் இருந்து அதன் தோற்றத்தில் மற்றும் செயல்பாட்டில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இருக்கிறது இன்டெல் நிறுவனம். இன்டெல் நிறுவனத்தின் தயாரிப்பில் மக்களை அச்சுறுத்தும் கேமரா இல்லை, கண்ணாடியில் துருத்தி கொண்டிருக்கும் பொத்தான்கள் இல்லை, ஒலிபெருக்கிகள் இல்லை, மைக்ரோபோன் இல்லை மற்றும் கண்ணாடியில் எல்சிடி திரை அனுபவமும் இல்லை.

ஸ்மார்ட் முகக்கண்ணாடிகளைத் தாங்கி பிடிக்கும் பிரேமை (Frame) ஐம்பது கிராம் எடையுள்ள பிளாஸ்டிக்கில் எளிமையாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

இன்டெல் ஸ்மார்ட் முகக்கண்ணாடியில் என்ன இருக்கிறது?

முகக்கண்ணாடிக்குள் குறைத்திறன் க்ளாஸ் ஒன் எனப்படும் லேசர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு ப்ராசசர் (Processor), அக்ஸலோமீட்டர் (accelometer), காம்பஸ்(Compass) மற்றும் ப்ளூடூத் சிப் (Blutooth Chip) பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ‘இந்த குறைத்திறன் க்ளாஸ் ஒன் லேசர் 400 x 150 பிக்சல் அளவிலுள்ள சிகப்பு, மோனோக்ரோம்(Monochrome) படங்களைக் கண்களுக்கு வெளிப்படுத்துகிறது’ என இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்னென்ன செயல்பாடுகள்?

இந்த ஸ்மார்ட் முகக்கண்ணாடி உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை உங்கள் திறன்பேசி மூலம் அறிந்துகொண்டு, அதற்கு உண்டான அறிவிப்பை முகக்கண்ணாடியில் காண்பிக்கும். நீங்கள் ஒருவேளைச் சமையலறையில் இருந்தால், அதை அறிந்துகொண்டு அன்றைய நாளுக்கு உண்டான ரெசிபியை உங்களுக்குக் காண்பித்து தரும்.

அடுத்தது என்ன?

வருங்காலத்தில் ஸ்மார்ட் முகக்கண்ணாடியோடு மைக்ரோபோன் இணைக்கும் திட்டமும் இன்டெல் நிறுவனத்திடம் இருக்கிறது. அதன் மூலம் அலெக்ஸா மற்றும் சிறி போன்ற ஸ்மார்ட் உதவியாளர்களைத் தொடர்புகொள்ள முடியும். இந்த முதல் தலைமுறை வாண்ட் முகக்கண்ணாடிகளைத் தலை அசைவின் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மனிதர்களின் அன்றாட வாழ்வில் இயற்கையாகப் பொருந்தி போகும் வகையில் இந்த ஸ்மார்ட் முகக்கண்ணாடிகளை வடிவமைப்பது ஒன்றே இன்டெல் நிறுவனத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

இன்டெல் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த அறிவிப்புகள் எதுவும் தெளிவாக வெளியிடப்படவில்லை. மேலும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்காக மென்பொருள் தயாரிக்கும் கிட் (Software Development Kit (SDK) ) ஒன்றும் இன்டெல் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த கிட் மூலம் ஸ்மார்ட் முகக்கண்ணாடிக்கு மேலும் புதிய புதிய பயன்பாடுகளை மென்பொருள் வல்லுநர்கள் உருவாக்கித் தரலாம் என்றும் இன்டெல் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட் கண்ணாடிகள் என்னும் தொழில்நுட்பத்தில் முதன்மையான ஒன்றாக இன்டெல் நிறுவனத்தின் இந்த வாண்ட் தயாரிப்பு கருதப்படுகிறது. தயாரிப்பு சுழற்சியின் ஆரம்பக் கால கட்டத்தில் இந்த ஸ்மார்ட் முகக்கண்ணாடி இருப்பதால், அது சந்தைக்கு வந்த பிறகே அதன் சாதக பாதகங்கள் தெரியவரும்.

Related Articles

இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...
பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத...  "என்னைய்யா பயந்துட்டிங்களா..."தப்பு பண்ணவனே பயப்படுல... எதுத்து கேக்கறவன் எதுக்குப் பயப்படனும்... "  " ஒரு தடவ தான் சாவு...
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் ... சர்வதேச அரசியலின் மிக முக்கிய செய்தியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, வரும் மே மாதம் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து...
பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத,... இயக்குனர் ராம் பத்திரிக்கையாளர் ஜெயராணி கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஜோதிமணி இசை தமிழ்நதி ஆதவன் தீட்சண்யா தமயந்தி ஜி. ...

Be the first to comment on "இன்டெல் உருவாக்கத்தில் வருகிறது ஸ்மார்ட் முகக்கண்ணாடிகள்"

Leave a comment

Your email address will not be published.


*