பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இசையும்!

Petta Marana mass song lyrics and music

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் அறிமுகப் பாடல் இன்று வெளியாகி உள்ளது. ரஜினி படத்திற்கு லிங்கா படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கு பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பாடல் வரிகள் இதோ…

ரஜினி குரலில்: பாக்கத் தான போற இந்தக் காளியோட ஆட்டத்த…

 

தட்லாட்டம் தாங்க…

தர்லாங்க சாங்க…

 

உள்ளாற வந்தா…

நா பொல்லாத வேங்க…

 

தட்லாட்டம் தாங்க…

தர்லாங்க சாங்க…

 

உள்ளாற வந்தா…

நா பொல்லாத வேங்க…

 

திமிராம வாங்க…

பல்பாயிடு வீங்க…

 

மொரப்போட நிப்பானா…

முட்டாம போங்க…

 

கெத்தா நடந்து வர்றான்…

கேட்ட எல்லாம் கடந்து வர்றான்…

 

த்தா வெடிய ஒன்னு

போடு தில்லாளே…

 

ஸ்லீவ சுருட்டி வர்றான்…

காலர தான் பெரட்டி வர்றான்…

 

முடிய சிலுப்பி விட்டா…

ஏறும் உள்ளாற…

 

மரணம் மாஸ் – சு மரணம்…

டஃப்பு தரனும்…

 

அதுக்கு அவன்தான் பொறந்து வரனும்…

 

மரணம் மாஸ் – சு மரணம்…

டஃப்பு தரனும்…

ஸ்டெப்பு முறையா விழனும்…

 

தட்லாட்டம் தாங்க…

தர்லாங்க சாங்க…

 

உள்ளாற வந்தா…

நா பொல்லாத வேங்க…

 

2: 00

 

எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரலில் தொடங்குகிறது.

 

எவன்டா மேல…

எவன்டா கீழ…

 

எல்லா உயிரயும் ஒன்னாவே பாரு…

முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு…

 

தலையில் ஏத்தி வச்சு கொண்டாடும் ஊரு…

நியாயம் இருந்து எதிர்த்து வர்றியா…

 

உன்ன மதிப்பேன்…

அது என் பழக்கம்…

 

கால இழுத்து உயர நினைச்சா…

கெட்ட பய சார்…

இடியா இடிக்கும்…

 

மிகச் சில நொடிகளே இவருடைய குரல் ஒலிக்கிறது.

 

அதை தொடர்ந்து அனிருத் குரலில் வரிகள் தொடங்குகிறது…

 

கெத்தா நடந்து வர்றான்…

கேட்ட எல்லாம் கடந்து வர்றான்…

 

த்தா வெடிய ஒன்னு

போடு தில்லாளே…

 

ஸ்லீவ சுருட்டி வர்றான்…

காலர தான் பெரட்டி வர்றான்…

 

முடிய சிலுப்பி விட்டா…

ஏறும் உள்ளாற…

 

மரணம் மாஸ் – சு மரணம்…

டஃப்பு தரனும்…

 

அதுக்கு அவன்தான் பொறந்து வரனும்…

 

மரணம் மாஸ் – சு மரணம்…

டஃப்பு தரனும்…

ஸ்டெப்பு முறையா விழனும்…

 

தட்லாட்டம் தாங்க…

தர்லாங்க சாங்க…

 

உள்ளாற வந்தா…

நா பொல்லாத வேங்க…

 

திமிராம வாங்க…

பல்பாயிடு வீங்க…

 

மொரப்போட நிப்பானா…

முட்டாம போங்க…

 

இட்டலபத்ரி…

சோலுபத்ரி…

சல்பிலோ…

 

இட்டலபத்ரி…

சோலுபத்ரி…

சல்பிலோ…

 

இட்டலபத்ரி…

சோலுபத்ரி…

சல்பிலோ…

 

மரணம் மாஸ் – சு மரணம்…

டஃப்பு தரனும்…

அதுக்கு அவன்தான் பொறந்து வரனும்…

 

மரணம் மாஸ் – சு மரணம்…

ஸ்டெப்பு முறையா விழனும்…

 

கார்த்திக் சுப்புராஜ் ஏன் இந்தப் படத்திற்கு அனிருத்தை நியமித்தார் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவான ஜிகிர்தண்டா  பாண்டிய நாட்டு… பாடலும், மேயாத மான் தங்கச்சி… பாடலும் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் என்ற போதிலும் ஏன் கூட்டணியை மாற்றினார் என தெரியவில்லை.

 

அனிருத்திடம் இருந்து இன்னும் எதிர்பார்த்திருந்தோம் என்பதே ரசிகர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

Related Articles

வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!... இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறி...
அடுத்த “அஞ்சான்” படமா சாமி2 ... இது டிரெய்லர் காலம் போல. ஒவ்வொரு  நாளுக்கும் எதாவது ஒரு டிரெய்லர் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கோலிசோடா2, சண்டக்கோழி2, தமிழ்படம் 2, சாமி2 என...
அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சி... ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவித...
இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவ... முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக...

Be the first to comment on "பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இசையும்!"

Leave a comment

Your email address will not be published.


*